பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! எப்போது தெரியுமா?
பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்:
சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கும்படி மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நிதி ஒதுக்கப்படவில்லை. புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியையும் தமிழ்நாட்டிற்கு வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து கடந்த 14-ஆம் தேதி சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின், மெட்ரோ ரயில் திட்ட நிதி தொடர்பாக பிரதமரை சந்திக்க உள்ளதாக கூறியிருந்தார். அதன்படி, பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 26-ஆம் தேதி இரவு டெல்லி செல்கிறார். அதற்கு மறுநாள் அதாவது செப்டம்பர் 27 ஆம் தேதி பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார்.
அப்போது, மெட்ரோ ரயில் திட்ட நிதி, புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்கும்படி முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார். மேலும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் நிலையில், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் வலியுறுத்துவார் எனக் கூறப்படுகிறது.