மேலும் அறிய

Gold Smuggling: ஒரே இரவில் 3 விமானங்கள்.!  தங்க கடத்தலில் இறங்கிய 25 பேர்: சுற்றி வளைத்து தூக்கிய அதிகாரிகள்.! நடந்தது எங்கு? 

Chennai Airport Gold Smuggled: சென்னை விமான நிலையத்தில், 20 கிலோ கடத்தல் தங்கத்தை  மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே இரவில் 3 விமானங்களில், 25 பேர் தங்க கடத்தல் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல்:

சென்னையில் உள்ள அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் , தங்கம் கடத்தல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக, மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் வந்திருக்கிறது. மேலும், சிங்கப்பூரிலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. 

இதையடுத்து, நேற்று மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் , சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வருகை புரிந்து ரகசியமாக கண்காணிப்பில் இறங்கினர். 

3 விமானங்கள்:

அப்போது, நேற்றைய தின இரவில் சுமார் 11 மணியளவில், சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் வந்த பயணிகளிடம், அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கு உரிய வகையில் வந்த பயணிகளிடம் தனியாக வைத்து சோதனை நடத்தினர்.

இதையடுத்து, சிங்கப்பூரில் இருந்த வந்த இண்டிகோ விமானம் வந்தடைந்தது. அந்த பயணிகளிடமும், சந்தேகத்துக்கிடமான பயணிகளை சோதனை நடத்தினர். 

இதனை தொடர்ந்து , சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ என்ற மற்றொரு விமானமும் வந்தடைந்தது.அதிலும், சந்தேகத்திற்கிடமான சில பயணிகளை சோதனை நடத்தினர். 

25 பேர் கைது:

மூன்று விமானங்களில் வந்த 25 பயணிகளை தனியாக அழைத்து சோதனை நடத்தியதில் , அவர்கள் தங்க கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. 25 பேரில் 8 பேர் பெண் பயணிகள் அடங்குவர் என்றும் தகவல் கிடைத்துள்ளது. இவர்களில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. 

மொத்தமாக 20 கிலோ எடை கொண்ட 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் , மொத்தமாக கடத்தி வரும் போது மாட்டி விடக்கூடாது என்பதற்காக , 3 விமானங்களில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. 

இதையடுத்து , 25 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 25 பேரை குருவிகளாக தங்க கடத்தலில் , சென்னை கடத்தல் கும்பல் சிலர் ஈடுபடுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: 

இந்த விவகாரத்தில், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா, என்ற கோணத்திலும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில், நேற்றைய தினம் ஒரே இரவில் , 3 விமானங்களில் 25 பேர் திட்டம் போட்டு தங்கம் கடத்தலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget