மேலும் அறிய

Tamil Nadu BJP Meeting : ‘2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகும் அண்ணாமலை’ விரைவில் வெளியாகிறது தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்..!

’2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பழைய நிர்வாகிகளை வைத்து ‘பல்லக்கு’ தூக்க முடியாது என்பதை உணர்ந்த அண்ணாமலை, அதிரடி மாற்றங்களை அறிவிக்க முடிவெடுத்திருக்கிறார்’

தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது முதலே கட்சியை மற்ற தலைவர்கள் இங்கு வளர்த்தெடுத்ததை காட்டிலும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டுச் சேர்க்க வேண்டும், கட்சியின் செல்வாக்கை உயர்த்த வேண்டும், அதோடு தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட்டு வருகிறார்.

Tamil Nadu BJP Meeting :  ‘2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகும் அண்ணாமலை’ விரைவில் வெளியாகிறது தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்..!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

தமிழக பாஜகவில் பல்வேறு சீனியர்கள் இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத மாநிலத் தலைவர் பதவி அண்ணாமலைக்கு கிடைந்த நிலையில், அதிருப்தியில் இருந்த அவர்கள் அத்தனை பேரவையும் தற்போது தனது ஆதரவாளர்களாக மாற்றிக்கொண்டு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து ஒரிஜினல் அரசியல்வாதியாக தேர்தல் களத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார் அண்ணாமலை.Tamil Nadu BJP Meeting :  ‘2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகும் அண்ணாமலை’ விரைவில் வெளியாகிறது தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்..!

ஏற்கனவே நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட வேண்டும் என்ற துணிகர முடிவை எடுத்து அதில் உறுதியாக நின்றது, ஆளுங்கட்சி திமுகவிற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக முன்னெடுக்க தயங்கும் அல்லது காலதாமதாக்கும் விஷயங்களுக்கு உடனடியாக ரியாக்ட் செய்வது, அறிக்கை விடுவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது என அதிரடி அரசியல் செய்து ஊடகங்களில் தினந்தோறும் பேசுபொறுளாவது என அதிரடி ஆக்‌ஷனில் இறங்கியிருக்கும் அண்ணாமலை, அதே பாணியில் தனது கட்சி கட்டமைப்பிலும் சில உறுதியான முடிவுகளை எடுத்து செயல்படுத்த முனைந்துள்ளார்.Tamil Nadu BJP Meeting :  ‘2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகும் அண்ணாமலை’ விரைவில் வெளியாகிறது தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்..!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டும் ஆக்டிவ் அரசியல் செய்தால் தமிழ்நாட்டில் பாஜகவின் ஜம்பம் எடுபாடாது என்பதை தெள்ளத் தெளிவாக உணர்ந்துவைத்துள்ள அண்ணாமலை, எதையும் ‘பிளான் பண்ணாம செய்யக் கூடாது’ என்பதையும் தெரிந்து வைத்துள்ளார். அதன்விளைவாக, 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு பாஜகவை தயார் செய்யும் விதமாக இப்போது நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளார்.Tamil Nadu BJP Meeting :  ‘2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகும் அண்ணாமலை’ விரைவில் வெளியாகிறது தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்..!

இது தொடர்பாக, கடந்த 23ஆம் தேதி டெல்லிக்கு சென்ற அண்ணாமலை, பாஜகவின் தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி, தனது பரிந்துரைகளுக்கு அனுமதியும் பெற்று வந்திருக்கிறார். இதன் மூலம் விரைவில் தமிழ்நாடு பாஜகவில் அதிரடியாக நிர்வாகிகள் மாற்றம் நடைபெறவுள்ளது.

அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பிறகே கட்சியில் நிர்வாகிகள் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நகர்புற உள்ளாட்சி தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல்கள் வந்ததால் பழைய நிர்வாகிகள் அப்படியே தொடர்ந்தனர். ஆனால், வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பழைய நிர்வாகிகளை வைத்துக்கொண்டு ‘பல்லக்கு’ தூக்க முடியாது என்பதால், துடிப்புள்ள, களத்திற்கு சென்று பணியாற்றும் ஆர்வமுள்ள புதிய நிர்வாகிகளை நியமிக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.Tamil Nadu BJP Meeting :  ‘2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகும் அண்ணாமலை’ விரைவில் வெளியாகிறது தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்..!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சரியாக பணி செய்யாத 9 மாவட்ட பாஜக தலைவர்களை மாற்றி அமைத்து, அவர்களுக்கு பதிலாக புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை பாஜக மாநில மையய குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் சிடி ரவி, மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவின் முக்கியமான உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.Tamil Nadu BJP Meeting :  ‘2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகும் அண்ணாமலை’ விரைவில் வெளியாகிறது தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்..!

இந்த கூட்டத்தின் ஆலோசனைக்கு பிறகு புதிய மாநில நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. அதேபோல், மாவட்ட தலைவர்களும், அணிகளின் பிரிவு தலைவர்களும் மாற்றம் செய்யப்படவுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget