கட்சியின் பெயருக்கு களங்கம்.. பாஜகவில் இருந்து சரவணன் நீக்கம் - அண்ணாமலை
மதுரை மாவட்ட பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரணவன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரணவன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கட்சியின் கட்டுபாட்டை மீறியும், கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதால் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை நகர் மாவட்ட தலைவர் டாக்டர் P.சரவணன் கட்சியின் கட்டுப்பாடை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) August 14, 2022
-மாநில தலைவர் @annamalai_k pic.twitter.com/GLsNak4b2U
இதுகுறித்து பாஜக சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “ மதுரை நகர் மாவட்ட தலைவர் டாக்டர் P.சரவணன் கட்சியின் கட்டுப்பாடை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.
ஆகவே, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நிதி அமைச்சர் மீது செருப்பு எறிந்தது தொடர்பாக செய்தியாளர்களை டாக்டர் சரவணன் சந்தித்தார். அப்போது அவர், “ இந்த சூழலில் அமைச்சரின் மீது தாக்குதலை ஏற்படுத்திய மிகப்பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை நினைத்து தூக்கம் வரவில்லை. அமைச்சர் பி.டி.ஆர்., தியாகராஜன் அவர்களது வீட்டிற்கு அடிக்கடி, வந்துள்ளேன். இதுவும் ஒரு தாய் வீடு போல தான். அதனால் அமைச்சரை பார்க்க வேண்டும் என அனுமதி கேட்டு சந்தித்தேன். அவரிடம் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக்கொண்டேன். ஏற்கனவே கார்கில் போரில் நடைபெற்ற சம்பவத்திற்கு வீர வணக்கம் செலுத்தியுள்ளேன்.
சுய மரியாதை இயக்கத்தின் வழிவந்த நான் மத அரசியல் செய்யும் பி.ஜே.பி.,யில் இருக்க விரும்பவில்லை.
— Arunchinna (@iamarunchinna) August 14, 2022
- பி.ஜே.பி., மாவட்ட தலைவர் சரவணன் இரவில் திடீர் முடிவு !@ptrmadurai | @johnraja303 | @TRBRajaa | @SRajaJourno | @annamalai_k pic.twitter.com/ZBzMQhxPxR
அப்போது நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். தற்போது நான் மருத்துவராகவும், மாவட்ட தலைவராகவும் இருந்தாலும் பொது ஜனம் தான். எனவே அந்த இடத்தில் இருந்திருக்க கூடாது. இருந்த போதிலும் மாநில தலைவர் அண்ணாமலை, புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன், நான் உட்பட அனைவரும் அஞ்சலி செலுத்தினோம். ஆனால் தொண்டர்கள் கட்டுப்பாட்டை இழந்து கசப்பான சம்பவம் நடைபெற்றுவிட்டது. இது மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. அமைச்சரிடம் இது குறித்து விளக்கத்தை அளித்துள்ளேன். இதனை அமைச்சர் கேசுவலாக எடுத்துகொண்டுள்ளார். ஆரம்பத்தில் இருந்து சுயமரியாதை இயக்கத்தில் வளர்ந்தவன். இந்த சூழலில் துவேசமான அரசியலை செய்ய நானும் ஒரு ஆளாக இருந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் அமைச்சரை சந்திதேன். தற்போது மைண்ட் ப்ரீயாக உள்ளது. இனி நிம்மதியாக தூங்குவேன்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்