மேலும் அறிய

Ramadoss Vs Anbumani Vs Sowmiya: அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?

பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை இன்று அன்புமணி ராமதாஸ் புறக்கணித்த நிலையில், பிரச்னை அப்பா மகனுக்கிடையே இல்லை என்றும், ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணிக்கு இடையேதான் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவரும், அவருடைய மகனுமான அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது பகிரங்கமாகவே தெரியவந்தது. பாமக தலைவராக நானே இருப்பேன் என ராமதாஸ் திடீரென அறிவித்தார். அதற்கு பதிலடி கொடுத்த அன்புமணி, தான் நிர்வாகிகளால் தேர்தெடுக்கப்பட்டவன் என்று கூறியதோடு, தன்னை சந்திக்க தன்னுடைய இடத்திற்கு வருமாறு நிர்வாகிகளிட கூறியது பெரும் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், கட்சியினர் சிலர், உண்மையான பிரச்னை அவர்களுக்குள் இல்லை என்றும், ராமதாஸ் மற்றும் அன்புமணியின் மனைவி சௌமியா இடையேயும்தான் என கூறியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வன்னியர் சங்க மாநாட்டிலும் வெடித்த பிரச்னை

பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக, கடந்த 11-ம் தேதி, சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாடு மாமல்லபுரம் அருகே நடைபெற்றது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ஒரே மேடையில் அமர்ந்திருந்த இந்த மாநாட்டில், பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணியை மறைமுகமாக விமர்சித்து பேசியது, அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதோடு, இளைஞரணித் தலைவரான முகுந்தனுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்படாததும், பாமக நிர்வாகிகளிடையே பேசுபொருளாக மாறியது.

காற்று வாங்கிய மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இந்த நிலையில், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்திய நிலையில், அதனை கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்துள்ளார். அதோடு, அவருக்கு ஆதரவான ஏராளமான மாவட்ட செயலாளர்களும் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். பாமக மாவட்ட ரீதியாக 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் 13 முதல் 17 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே பங்கேற்றதாக கூறப்படுகிறது.

கௌரவ தலைவர் ஜி.கே. மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உள்பட மொத்தம் 50 நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிக்கும் வித்தை.!!

இந்த கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் வெற்றி பெறும் வித்தையை நிர்வாகிகளுக்கு வழங்கியதாக தெரிவித்தார். அதற்காகவே இந்த கூட்டத்தை நடத்தியதாகவும், வெற்றி பெறுவதற்கு எப்படி உழைப்பது, சட்டமன்ற தொகுதிகளில் எப்படி வெற்றி பெறுவது என்பதை சொல்லிக் கொடுக்கவும், கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்துவதற்காகவுமே இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறினார்.

மேலும், தொடர்ந்து 7 நாட்கள் வன்னியர் சங்க நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள், அமைப்பு நிர்வாகிகளின் கூட்டம் தைலாபுரத்தில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

அன்புமணி புறக்கணிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவர் வரலாம், வராமலும் போகலாம், அது அவரது விருப்பம் என்று தெரிவித்ததுடன், மாநாட்டிற்குப் பிறகு களைப்புடன் இருப்பதாலேயே சில மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வரவில்லை என்றும், அவர்கள் தன்னுடன் தொலைபேசியில் பேசியதாகவும் கூறினார்.

மேலும், பாமக-வில் கோஷ்டி மோதல் இல்லை. கூட்டணி இல்லாமலேயே தனியாக நின்றாலும் 40 தொகுதிகளில் பெற்றி பெறுவோம் என கூறிய அவர், ஆனால், தேர்தலில் கட்டாயம் கூட்டணி உண்டு எனவும் உறுதிபட தெரிவித்தார். சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும், சீற்றம் குறையாது என்றும், ஆனால், கால்கள் பழுதுபடாத சிங்கத்தின் சீற்றம் அதிகமாக இருக்கும், அது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற சீற்றம் என்று கூறினார்.

அப்பா மகன் பிரச்னையா.? மாமனார் மருமகள் பிரச்னையா.?

அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், மாநாட்டில் அன்புமணியை மறைமுகமாக ராமதாஸ் விமர்சித்ததாலேயே இத்தகைய நிலை என்றும் களைப்பால் கூட்டத்திற்கு வரவில்லை என ராமதாஸ் சப்பை கட்டு கட்டுவதாகவும், சில மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அன்புமணியின் அறிவுறுத்தலால் தான் மற்ற மாவட்ட செயலாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அதோடு, கட்சியில், முக்கிய பிரச்னை ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே இல்லை என்றும், பிரச்னையே ராமதாசுக்கும், சௌமியா அன்புமணிக்கும் இடையேதான் என குண்டை தூக்கிப் போடுகின்றனர். இதற்கு பின்னணியில் முகுந்தனுக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதுதான் என்று கூறப்படுகிறது.

எது எப்படியோ, பாமக-விற்குள் கோஷ்டிப் பிரச்னை இல்லை என்று ராமதாஸ் கூறினாலும், பிரச்னை இருப்பது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்துவிட்டது. அடுத்த வருடம் தேர்தல் வரும் நிலையில், இந்த உட்கட்சி பிரச்னை, அல்லது குடும்பப் பிரச்னை என்று கூட கூறலாம், அது எங்கு போய் முடியும் என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

தலைப்பு செய்திகள்

Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
Embed widget