மேலும் அறிய

கேலி செய்து முகபாவனை.! வைரலான வீடியோ... திமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் கொடுத்த ஷாக்

உறுப்பினர்கள் சிலரை குறிப்பிடும் வகையில் முகபாவனை மூலம் கேலி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.  இது சட்டமன்ற விவகாரத்தின் மாண்பையும் கண்ணியத்தையும் குறைக்கும் செயலாகும் என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டமன்றம்- திமுக எம்எல்ஏக்களின் சர்ச்சை

தமிழக சட்டமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதத்தில் போது மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு பின் பக்கமாக அமர்ந்திருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, திருவையாறு துரை சந்திரசேகர், கார்த்திகேயன் ஆகியோர் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது யாரையோ கிண்டல் செய்யும் வகையில் முகபாவணை காட்டிக்கொண்டு தங்களுக்குள் பேசினார்கள். இந்த வீடியோ வைரலான நிலையில், திமுக எம்எல்ஏக்களின் செயல்பாடுகளை விமர்சிக்கப்பட்டது.

எம்எல்ஏக்களுக்கு அறிவுரை

இந்த நிலையில் இன்று சட்டசபை கூட்டம் தொடங்கிய நிலையில், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேரவையில் சில அறிவிப்புகளை தெரிவித்தார். அதில் அவர் கூறியதாவது.நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் எப்பொழுதும் எந்தவித கருத்தையும் சொல்லக்கூடாது. உறுப்பினர்கள் எவரையும் தனிப்பட்ட முறையில், முறையற்ற வார்த்தைகளால் தாக்கி பேசக்கூடாது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி பேரவையின் நடைமுறைக்கு குந்தகத்தை, விளைவிக்கும் வகையிலும் சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலும் பேசக்கூடாது.

 சட்டமன்ற பேரவை நடவடிக்கைகள் சிறப்பாக அமைய அவையின் நேரத்தை மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளவும் உறுப்பினர்கள் உரையாற்றும் பொழுது அவ்வப்போது பேரவையின் ஆய்வில் உள்ள விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட பொருட்கள் மீது சுருக்கமாக பேசி முடிக்க வேண்டும்.
"சாட் அண்ட் ஸ்வீட் ஆக" பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன். தொகுதியின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து பேரவையில் கூறலாம். 

 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை

பேரவையின் நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பு செய்வதால் உறுப்பினர்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.கடந்த கூடத்தொடர் அன்று பேரவையில் சில உறுப்பினர்கள் சிலரை குறிப்பிடும் வகையில் முகபாவனை மூலம் கேலி செய்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.  

இது சட்டமன்ற விவகாரத்தின் மாண்பையும் கண்ணியத்தையும் குறைக்கும் செயலாகும். உறுப்பினர்கள் பொறுப்பினையும் கடமையையும் உணர்ந்து இனிவரும் காலங்களில் கண்ணியக்குறைவான செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது. இது போன்ற செயல்கள் செய்தால் அவையின் உரிமை மீறலாக கருதப்பட்டு சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi : உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
Vijayakumar IPS : ’சட்டத்தின்படி வந்திருக்கிறோம்’ உதயநிதியை கைது செய்த போலீஸ் அதிகாரி - யார் இந்த விஜயகுமார் IPS..?
’சட்டத்தின்படி வந்திருக்கிறோம்’ உதயநிதியை கைது செய்த விஜயகுமார் IPS..!
Udhayanidhi : உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi : உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
Hyundai Bayon: விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Embed widget