மேலும் அறிய

Rahul-Shankaracharya: ராகுலின் இந்துமத பேச்சு: எதிர்த்த பாஜக; ஆதரவாக களமிறங்கிய சங்கராச்சாரியார்! நடந்தது என்ன?

Shankaracharya Backs Rahul Gandhi: ராகுலின் இந்து மத பேச்சுக்கு ஆதரவாக சங்கராச்சாரியார் களமிறங்கியுள்ளது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Rahul Gandhi Speech About Hindus: கடந்த  ஜூலை 1 ஆம் தேதி, மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியது பெரும் பேசு பொருளாகியது. அப்போது நீட் விவகாரம், வேலைவாய்ப்பு, மணிப்பூர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை மேற்கோள்காட்டி, பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார் ராகுல் காந்தி. இதற்கு, பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சர்ச்சையான ராகுல் பேச்சு:

அப்போது பேசிய ராகுல் காந்தி, சிவனின் புகைப்படத்தை காண்பித்து,  இது வன்முறையின் சின்னம் இல்லை, அகிம்சையின் சின்னம். சிவபெருமான், பாபா குரு நானக் மற்றும் இஸ்லாத்தின் போதனைகள் நாட்டை வடிவமைத்த நம்பிக்கைகள் ஆகும். இவை அகிம்சையை ஆதரிக்கின்றன. ஆனால், அச்சப்படக் கூடாது எனவும் போதிக்கிறது. 

ஆனால், ஆளுங்கட்சி வன்முறையை ஊக்குவிக்கிறது. அவர்கள், இந்துக்களே இல்லை என்றார்.


Rahul-Shankaracharya: ராகுலின் இந்துமத பேச்சு: எதிர்த்த பாஜக; ஆதரவாக களமிறங்கிய சங்கராச்சாரியார்! நடந்தது என்ன?

பாஜக எதிர்ப்பு:

ராகுல் காந்தியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பிரதமர் மோடி, "முழு இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என அழைப்பது கவலை அளிக்கிறது" என்றார். இதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "மோடி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியோர் மட்டுமே இந்துக்கள் இல்லை என தெரிவித்தேன். அவர்களுக்கு எதிராக மட்டுமே நான் கருத்து கூறினேன்" என தெரிவித்தார்.

மக்களவையில் நடந்த விவாதமானது, சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனங்கள் எழ ஆரம்பித்தது. இந்துக்களை வன்முறையாளர்கள் என ராகுல் தெரிவித்துவிட்டார் என பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர்.

ராகுலுக்கு ஆதரவாக சங்கராச்சாரியார்.

இதுகுறித்து, ஜோதிர் மடத்தின் 46வது சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா கருத்து தெரிவித்துள்ளார். இந்துக்களை வன்முறையாளர்கள் என ராகுல் காந்தி கூறவில்லை. அவ்வாறு கூறியதாக பரவி வரும் தகவல் உண்மையில்லை. இந்துக்கள் என கூறிக் கொள்ளும் சிலரைத்தான், அவ்வாறு கூறினாரே தவிர, இந்துக்கள் அனைவரும் வன்முறையாளர்கள் என கூறவில்லை. இந்து மதம் வன்முறையை நிராகரிக்கிறது என்றும் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

ராகுல் காந்தியின் பேச்சின் சில பகுதிகள் மட்டும், பரப்பப்படுகிறது. இவ்வாறு பரப்புபவர்களைத்தான் முதலில் தண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேச்சுக்கு சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா கருத்து தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில், ராகுல்காந்திக்கு ஆதரவாக சங்கராச்சாரியாரின் கருத்தானது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Also Read: "நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!

தலைப்பு செய்திகள்

விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget