Senthil Balaji Arrest: எதுக்கு இந்த அலப்பறை..? செந்தில்பாலாஜிக்காக தி.மு.க. நாடகம் - நாராயணன் திருப்பதி
Senthil Balaji Arrest: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து பாஜகவைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
Senthil Balaji Arrest: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து பாஜகவைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
அதில் அவர், ”உச்ச நீதிமன்றம் தடையை நீக்கிய பின்னர் தான் அமலாக்கத்துறை சோதனைக்கு சென்றுள்ளது. விசாரணைக்காக அவரை அழைத்தபோது நெஞ்சு வலி எனும் நாடகத்தினை நடத்தி இருக்கிறார். அந்த நாடகத்தின் துணை பாத்திரங்களாக தமிழ்நாட்டின் பல்வேறு அமைச்சர்களும் முதலமைச்சரும் இணைந்துள்ளார். முதலமைச்சர், அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட வேண்டும்.
கனிமொழி மற்றும் ஆ.ராசா சிபிஐ- ஆல் கைது செய்யப்பட்டபோது கூட இவ்வளவு அலப்பறை இல்லை, ஆனால் காலை 3 மணி அளவில் இவ்வாறான நாடகத்தினை ஏன் திமுக அரங்கேற்றி வருகிறது. இதுதான் திராவிட மாடலா? ஒருநாள் இரண்டு நாள் நீங்கள் மருத்துவமனையில் நீங்கள் நாடகம் ஆடலாம், ஆனால் சட்டம் தன் கடமையைச் செய்யும். அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டியது செந்தில் பாலாஜியின் கடமை. வெட்கமாக இல்லையா, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சாதரண மக்களிடம் லஞ்சம் வாங்கி ஏமாற்றியுள்ளார். தலைகுணிய வேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது. முதலமைச்சர் தனது கட்சிக்காரர்களை சட்டத்திற்குட்பட்டு நடந்துகொள்ள அறிவுறுத்தவேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அந்த துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பலரும் வழக்கு தொடர்ந்தனர். சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நேற்று காலை முதல் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அறை உள்ளிட்ட தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடந்தனர். இதேபோல் செந்தில்பாலாஜியின் கரூர் வீடு உள்ளிட்ட 8 இடங்களிலும் சோதனையானது நடந்தது.
சுமார் 17 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. தலைமைச்செயலகத்தில் நடந்த சோதனையின் போது 3 பைகளில் ஆவணங்கள் எடுத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அதிகாலை 2 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். செந்தில் பாலாஜி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்ற குழப்பம் நிலவிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.
இதற்கிடையில் அதிகாரிகள் அழைத்து செல்லும்போது செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் ஓமந்துராரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு துணை ராணுவத்தினரும், போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ரகுபதி,எ.வ.வேலு, திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் நேரடியாக மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.
இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. முன்னதாக அமலாக்கத்துறை சோதனைக்கு மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சியின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.