மேலும் அறிய
Advertisement
Subramanian Swamy: தமிழகத்தில் பாஜக இருக்கிறதா ..? - சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
மணிப்பூர் கலவரத்தில் பிரதமர் ஃபெயில் ஆகிவிட்டார். பிரதமருக்கு வெளிநாடு சுற்றுவதற்கு தான் அக்கறை உள்ளது. அவர் முதலில் மணிப்பூர் தான் சென்று இருக்க வேண்டும்.அமெரிக்கா செல்வதற்கு என்ன அவருக்கு அவசரம்.
”கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதில் தெரிகிறது பிரதமர் மோடியின் பாப்புலாரிட்டி குறைந்து வருகிறது. பிரதமர் மோடி சும்மா அது பண்ண வேண்டும், இது பண்ண வேண்டும் என பேசிக்கொண்டு தான் இருக்கிறார். இது ஜனநாயக நாடு யாரு யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்” - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.
சுப்பிரமணியன் சுவாமி (subramanian swamy)
சென்னை ( Chennai News ) : சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறியதாவது: காங்கிரஸ் கட்சியினர் பொது சிவில் சட்டத்தை எதிர்க்க அவர்களிடம் ஒன்றுமே இல்லை, பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சியில் சர்தார் பட்டேல், ஜவகர்லால் நேரு உள்ளிட்டோர் காலம் காலமாக பொது சிவில் சட்டத்தை வேண்டாம் எனக் கூறிவந்தனர். எந்த மதத்தினராகவும் இருந்தாலும் திருமணத்தில் சரியாக, முறையாக இருக்க வேண்டும்.
மோடியின் பாப்புலாரிட்டி குறைந்து
நம் நாட்டில் ஆண், பெண் இருபாலரும் சரிசமமாக உள்ளனர். அதனால் ஒருவருக்கு நான்கு மனைவிகள் இருக்க முடியாது. அதனால் பொது சிவில் சட்டம் வந்து தான் ஆக வேண்டும். இது சட்டத்திலே உள்ளது. காங்கிரஸ் என்ன வேண்டாலும் சொல்லட்டும் . தகுந்த நேரத்தில் அது கொண்டு வரப்படும். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதில் தெரிகிறது பிரதமர் மோடியின் பாப்புலாரிட்டி குறைந்து வருகிறது. பிரதமர் மோடி சும்மா அது பண்ண வேண்டும், இது பண்ண வேண்டும் என பேசிக்கொண்டு தான் இருக்கிறார். இது ஜனநாயக நாடு யாரு யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என தெரிவித்தார்'
திமுகவின் இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் மக்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அவர்களுக்கு விருப்பமில்லை, வெள்ளைக்காரர்கள் கொடுத்துச் சென்ற வரலாற்றையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கோயில்களில் இருக்கும் வசதிகளை எல்லாம் அழித்து வருகிறார்கள். இது திமுகவின் தில்லுமுல்லு தனம் என தெரிவித்தார்.
மணிப்பூர் கலவரத்தில் பிரதமர் ஃபெயில் ஆகிவிட்டார் பிரதமருக்கு வெளிநாடு சுற்றுவதற்கு தான் அக்கறை உள்ளது. அவர் முதலில் மணிப்பூர் தான் சென்று இருக்க வேண்டும் அமெரிக்கா செல்வதற்கு என்ன அவருக்கு அவசரம். அவர் அமெரிக்கா சென்று என்ன கொண்டு வந்தார் என காட்டமாக கேள்வி எழுப்பினார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும், ஆனால் மோடி பிரதமராக இருப்பாரா என்பதை குறித்து இப்போது சொல்ல முடியாது என தெரிவித்தார். திமுக விடும் சினிமாவைத் தவிர வேறு ஒன்றும் இல்லை, எந்த கலாச்சாரமும் இல்லை. வரும் தேர்தலில் கட்டாயம் திமுக தோல்வி பெறும். தமிழகத்தில் அண்ணாமலை வளர்ச்சி குறித்து கேட்டதற்கு தமிழகத்தில் பாஜக இருக்கிறதா? நான் தமிழகத்தில் பாஜகவை பார்த்ததே கிடையாது என விமர்சனம் செய்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion