மேலும் அறிய

Ramadoss Birthday Update: சமூக நீதிக்காக களப்பணி செய்து வரும் ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் - சீமான்

தமிழகத்தின் வாழ்வாதாரச் சிக்கல்களுக்காகவும், மண்ணின் உரிமைக்காகவும் பன்னெடுங்காலமாகக் கருத்துப்பரப்புரையும், களப்பணியும் செய்து வரும் பெருந்தமிழர்!

சமூக நீதிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும் களப்பணி செய்து வரும் ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

83-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பா.ம.க நிறுவனர் ராமதாசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் மூத்த அரசியல் தலைவர். மானுடத்தை நிலைநிறுத்தும் சமூக நீதிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் வாழ்வாதாரச் சிக்கல்களுக்காகவும், மண்ணின் உரிமைக்காகவும் பன்னெடுங்காலமாகக் கருத்துப்பரப்புரையும், களப்பணியும் செய்து வரும் பெருந்தமிழர்!. எமது ஐயா மருத்துவர் ராமதாசுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடையும் அன்புப்பிள்ளை’ எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி,, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் தொலைபேசி மூலம் ராமதாசுக்கு  வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து, பாமக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "ராமதாஸின் 83-வது பிறந்தநாளையொட்டி, இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர், டில்லிக்கு வரும்படியும் அழைப்பு விடுத்தார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை தொலைபேசி  மூலம் தொடர்பு கொண்டு ராமதாசுக்கு 83-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்ட ராமதாஸ், “உங்கள் தந்தை கலைஞர் என்னுடன் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். ராமதாஸை விட்டால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராட வேறு யாரும் இல்லை என்று அனைவரிடமும் கூறுவார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின்  நலன்களுக்காக பல திட்டங்களை அவர் செயல்படுத்தினார். உங்கள் தந்தையின் அந்த இடத்தை நீங்கள் பிடிக்கவேண்டும்’’ என்று வாழ்த்தினார். அதற்காக, ராமதாஸுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மருத்துவர் அய்யா அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்" இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.    

ராமதாஸ் வாழ்க்கை வரலாறு: 1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி, தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்சிவிரி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை சஞ்சீவராயக், தாயார் நவநீத அம்மாள் ஆவார். இவரது உடன் பிறந்தோர் நான்கு பேர். மருத்துவக் கல்வி கற்று எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற இவர், 1967 ஆம் ஆண்டில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியத் தொடங்கினார். 1980-ஆம் ஆண்டில் தான் சார்ந்த வன்னியர் சமூகத்தின் நலனுக்காக வன்னியர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். 1990இல் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி என்னும் ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்தது.

தலைப்பு செய்திகள்

CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
விடுமுறைக்கு பின் கூடும் சட்டசபை... 2 முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம்!
விடுமுறைக்கு பின் கூடும் சட்டசபை... 2 முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம்!
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
Embed widget