மேலும் அறிய
முதல்வரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன்
’’மனுதாரர் மீண்டும் ஈடுபட்டால் உடனடியாக ஜாமீனை ரத்து செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்’’

சாட்டை துரைமுருகன்
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை உடைத்து கற்கள், ஜல்லி, பாறைத்தூள் உள்ளிட்டவற்றைச் சட்ட விரோதமாகக் கேரளத்துக்குக் கடத்துவதைக் கண்டித்து, அக்டோபர் 10-ம் தேதி நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பேசிய `சாட்டை’ துரைமுருகன், ``கேரள முதல்வர் பினராயி விஜயனையும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் ஒப்பிட்டுப் பேசியதோடு, ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். துரைமுருகன் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதோடு சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக தி.மு.க அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்குகளில் துரைமுருகன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுகள் நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது இரு வழக்குகளில் துரைமுருகனுக்கு ஜாமின் வழங்கி, ஒவ்வொரு வழக்கிற்கு ரூ,25,000 முதலைமச்சர் நிவாரண நீதிக்கு வழங்க வேண்டும். மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் மேலும் இதுபோன்ற சம்பவங்களில் மனுதாரர் மீண்டும் ஈடுபட்டால் உடனடியாக ஜாமீனை ரத்து செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
வேட்பு மனு தாக்கலின் போது நிலுவையில் உள்ள குற்றவழக்குகள் தொடர்பான விபரங்களைப் பெறும் சி1 படிவத்தைப் இணைக்கக் கூடாது?" - மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி.
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில்,"ஆணையம் நடத்தும் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தாரின் சொத்து விபரங்கள், வழக்கு மற்றும் தண்டனை விபரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வேட்புமனு மற்றும் பிரமாண பத்திரத்தினை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் தற்போது நடைபெற்ற ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பயன்படுத்தப்பட்ட பிரமாண பத்திரம், கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வடிவில் இருந்தது. இதில் வேட்பாளர், வாழ்க்கைத் துணை, மற்றும் வேட்பாளரை சார்ந்தவர்களின் கடந்த ஐந்து வருட வருமானம், வருவாய் ஆதாரங்கள் குறித்த விவரங்கள், அரசின் துறைகளில் எடுக்கப்படும் ஒப்பந்தங்கள் குறித்த விவரங்கள், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்த விவரங்கள் மற்றும் ஆதார் எண், ஆதார் முகவரி போன்ற விவரங்கள் கோரப்படவில்லை.
எனவே மேற்கூறிய விவரங்களை குறிப்பிட பிரமாண பத்திரத்தில் உரிய மாறுதல்கள் செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் அது குறித்து பத்திரிகைக மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்த உத்தரவிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் அதனை 2019 பாராளுமன்ற தேர்தலில் அமல்படுத்தியது. ஆனால் ஏற்கனவே நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை. ஆகவே அந்த உத்தரவுகளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமல்படுத்தவும், அதுவரை நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என இடைக்கால உத்தரவிட வேண்டும். மேலும், நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு மற்றும் பிராமண பத்திரத்தை உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பெறவும், அதனை தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், "போட்டியிடும் வேட்பாளர் மீதான குற்ற வழக்குகள் மற்றும் தண்டனை விபரங்கள் மட்டுமே வேட்புமனுவில் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண்டும். அதற்காக படிவம் சி1 வழங்கப்பட வேண்டும். ஆனால் கடைசியாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை" என வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், "சமூகத்துக்கு பயன் விளைவிக்கும் எனில், ஏன் வேட்பு மனு தாக்கலின் போது சி1 படிவத்தைப் இணைக்கக் கூடாது?" என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில், "உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக வேட்பாளரே விளம்பரம் செய்ய வேண்டும். மனுதாரர் தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்" என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், " வேட்புமனுவோடு சி 1 படிவத்தை இணைத்து நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான விபரங்களை வேட்பாளரிடம் இருந்து பெற்ற பிறகு, அவர் விளம்பரம் செய்ய தவறினால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கலாமே?" என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து இது தொடர்பாக உரிய விளக்கம் பெற்ற தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின் போது நிலுவையில் உள்ள வழக்கு விபரங்களை குறிப்பிடும் சி 1 படிவத்தை வேட்புமனுவில் இணைப்பது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையத்திடம் உரிய விளக்கம் பெற்ற தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement