Honda Car Discouts: ரூ.1.76 லட்சம் வரை தள்ளுபடி.. எந்த காருக்கு எவ்வளவு ஆஃபர் தந்துள்ளது ஹோண்டா?
ஹோண்டா நிறுவனத்தின் எந்த கார்களுக்கு என்னென்ன சலுகைகள்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஒவ்வொரு மாதமும் முன்னணி கார் நிறுவனங்கள் தங்களது கார்களுக்கு சலுகைகள் அறிவிப்பது வழக்கம் ஆகும். அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கான கார் சலுகையை ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
2025ம் ஆண்டின் கடைசி மாதமான இந்த டிசம்பர் மாதத்தில் ஹோண்டா நிறுவனம் அளித்துள்ள சலுகைகள்:
1. All New Amaze - ரூபாய் 87 ஆயிரம் வரை
2. Elevate - ரூ.1.76 லட்சம்
3. City - ரூ.1.57 லட்சம்
1.New Amaze:
ஹோண்டா நிறுவனத்தின் பிரபலமான மாடல் New Amaze கார் ஆகும். இந்த காரின் ஆன் ரோட் தொடக்க விலை ரூபாய் 8.81 லட்சம் ஆகும். தற்போது இந்த New Amaze காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூபாய் 87 ஆயிரம் வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 கியர் இதில் உள்ளது. 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் இதில் உள்ளது. 2 அடாஸ் வசதி உள்ளது. 8 இன்ச் டஸ் டிஸ்ப்ளே உள்ளது. இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 11.9 லட்சம் ஆகும். 89 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 8 வேரியண்ட்கள் இதில் உள்ளது.
2.Elevate:
ஹோண்டா நிறுவனத்தின் இந்த Elevate காரின் எக்ஸ் ஷோரூம் தொடக்க விலை ரூபாய் 10.99 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 1.76 லட்சம் வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 1498 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தம் 22 வேரியண்ட் இந்த காரில் உள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியண்ட் இதில் உள்ளது. பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது. 15.31 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 20.73 லட்சம் ஆகும்.
3. City:
ஹோண்டா நிறுவனத்தின் பிரபலமான கார் இந்த honda City ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 11.95 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) இந்த காருக்கு ரூபாய் 1 லட்சத்து 57 ஆயிரத்து 700 சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 19.59 லட்சம் ஆகும். இந்த கார் 1498 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. 17.8 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 14 வேரியண்ட் இந்த காரில் உள்ளது. ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவலில் இந்த கார் உள்ளது.
இந்தியாவில் டாடா, டொயோட்டோ, நிசான், மஹிந்திரா என்று பல கார் நிறுவனங்கள் இருந்தாலும் ஹோண்டா நிறுவனத்தின் கார்களுக்கு என்று தனி மவுசும், வாடிக்கையாளர்களும் உள்ளனர்.




















