'வாய கொற, இல்லாட்டி வாயில்லாம போயிரும்' - அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக முதுகுளத்தூரில் போராட்டம்
மீண்டுமொரு முதுகுளத்தூர் கலவரம் ஏற்படாதவாறு அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், வடக்கே, தெற்கே போகனும்னா கவனமாக பேசனும்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து தேவேந்திர குல வேளாளர் அமைப்பின் சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்டவர்கள் ராஜகண்ணப்பன் குறித்து மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்கள் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகராக (BDO) ராஜேந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி தற்போதைய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ள ராஜ கண்ணப்பன் அவரது உதவியாளர் மூலம் அமைச்சரை சந்திக்க (BDO) ராஜேந்திரனை வரச்சொன்னதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) ராஜேந்திரன், சிவகங்கையில் உள்ள அமைச்சரின் வீட்டுக்குச் சென்றபோது அமைச்சர் ராஜகண்ணப்பன் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக வேதனை தெரிவித்த அவர்,இதையடுத்து மன உளைச்சலில் இருந்த (BDO) ராஜேந்திரன் பத்திரிக்கையாளர் சந்தித்து தன்னை 6 முறை சாதி பெயரைச் சொல்லி இழிவாக அமைச்சர் பேசினார் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சருக்கு எதிராக முதல் தொகுதி சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதனை அடுத்து BDO ராஜேந்திரனை சமுதாய பெயரைச் சொல்லி திட்டியதை கண்டித்து அவர் சார்ந்த தேவேந்திர வேலாளர் சமுதாய மக்கள் ஊர்வலமாக வந்து முதுகுளத்தூரில் காக்கூர் முக்கு ரோடு சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்,இதில் தற்போதைய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்தும், அவரை அமைச்சர் பதவி நீக்கம் செய்ய வேண்டும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோசங்கள் எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பேசிய தேவேந்திரர் குல வேளாளர் அமைப்பின் பொறுப்பாளர் எஸ்.ஆர்.பாண்டியன் என்பவர், அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது கடும் விமர்சனங்கள் வைத்தார். மீண்டுமொரு முதுகுளத்தூர் கலவரம் ஏற்படாதவாறு அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், வடக்கே, தெற்கே போகனும்னா கவனமாக பேசனும், கண்ணப்பனுக்கு கடைசி எச்சரிக்கை, 'வாய கொற, இல்லாட்டி வாயில்லாம போயிரும்' என பேசினார். மேலும் அமைச்சர் ராஜகண்ணப்பனின் குடும்பத்தை பற்றி கொச்சையாகவும் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.