Seeman On Rahul Gandhi : பிரதமர் மோடியை எதிர்க்க ராகுல்காந்தி தகுதியானவர் இல்லை; சீமான்
Seaman: மோடியை எதிர்க்க ஒரு ஆள் வேண்டும் ஆனால் அதற்கு ராகுல் தகுதியானவர் இல்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
Seaman: மோடியை எதிர்க்க ஒரு ஆள் வேண்டும் ஆனால் அதற்கு ராகுல் தகுதியானவர் இல்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும் ராகுல் காலையும் மாலையும் நடப்பதால் அவருக்கு வேண்டுமானால் மாற்றம் வரலாமே தவிர நாட்டிற்கு மாற்றம் வராது எனவும் கூறியுள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3570 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதை நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்று முதல் ராகுல் காந்தி தினமும் 25 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் அவர் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.
மத்திய பாஜக அரசின் தவறான அரசியல், சமூக மற்றும் பொருளாதார கொள்கைகளை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாகவும் விலைவாசி ஏற்றம், பொருளாதார சீர்கேடு ஆகியவற்றை விளக்கி கூறும் விதமாகவும் நாடு முழுவதும் ராகுல் காந்தி பாதயாத்திரை திட்டமிட்டார்.அந்த வகையில் இந்த மாபெரும் பாத யாத்திரையை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நேற்று முந்தினம் தொடங்கினார். நேற்று முன்தினம் நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி ராகுல் காந்தியின் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர்கள் உடன் உரையாற்றினார். அப்போது மத்திய பாஜக அரசு தொடர்பாகவும், அதன் கொள்கைகள் தொடர்பாகவும் விமர்சனம் செய்து பேசினார். மேலும், இந்தியாவைப் பிரித்து பிரிட்டிஷ் செய்ததைப் போன்று, நம்மில் பிரிவினை ஏற்படுத்தி நாட்டின் வளங்களை திருடுவதே பாஜகவின் எண்ணம். தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துவது மட்டும் போதாது, தேசியக் கொடி உள்ளடக்கிய கருத்துகளையும் பாதுகாக்க வேண்டும்.
தேசியக் கொடி ஒவ்வொரு இந்தியரின் அடையாளம், அது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பை உறுதி செய்கிறது. நாட்டில் எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமையை ஒவ்வொரு குடிமகனுக்கும் தேசியக்கொடி உத்தரவாதம் செய்கிறது. ஆனால் இப்போது தேசியக் கொடியே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. காங்கிரஸ் மட்டுமல்ல, நாட்டின் லட்சக்கணக்கான இந்தியர்களும் 'பாரத் ஜோடோ யாத்ரா'வின் அவசியத்தை உணர்கிறார்கள். இந்தியாவை ஒன்றிணைக்கும் ஒரு நடவடிக்கை தேவை. நமது நாட்டின் தென்கோடி முனையான கன்னியாகுமரிக்கு வந்துள்ளதும், இந்த அழகான இடத்தில் இருந்து இந்த பயணத்தைத் தொடங்குவதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரதமர் மோடியை எதிர்க்க ஒரு ஆள் வேண்டும் ஆனால் அதற்கு ராகுல் தகுதியானவர் இல்லை என கூறியுள்ளார். மேலும், ராகுல் காலையும் மாலையும் நடப்பதால் அவருக்கு வேண்டுமானால் மாற்றம் வரலாமே தவிர நாட்டிற்கு மாற்றம் வராது எனவும் கூறியுள்ளார். நாட்டில் உள்ள எதிர்கட்சிகள் பெரும்பாலும் ராகுல் காந்தியின் யாத்திரை பயணத்தினை வரவேற்றிருக்கும் நிலையில், சீமான் இவ்வாறு விமர்சித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் கவனத்தினை ஏற்படுத்தியுள்ளது.