மேலும் அறிய

பிரதமர் மோடி என்னை கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதிலால் ஆச்சரியப்பட்டார் - அமைச்சர் துரைமுருகன்

வேலூரில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுவதாக கூறியது குறித்து கேட்டதற்கு, வெளியிடட்டும் அது அவருடைய இஷ்டம் என கூறினார் அமைச்சர் துரைமுருகன்

கடந்த ஆண்டு பொன்னை ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சேதம் அடைந்த காட்பாடி தொகுதிக்குட்பட்ட மேல்பாடி தரைபாலம் 12.94 கோடியிலும். பொன்னை அணைகட்டை ரூ.19.50 கோடியிலும் புனரமைத்தல் பணிக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசுகையில், “இந்த நிதிநிலை அறிக்கையிலேயே காட்பாடிக்கு சிப்காட் வந்துவிடும். அதற்கான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதேபோல் காங்கேய நல்லூர்- சத்துவாச்சாரி இடையே பாலாற்றில் மேம்பாலம் கட்டுவதற்க்கு 100 கோடி நிதி 2 நாட்களுக்கு முன்பு தான் ஒதுக்கப்பட்டுள்ளது பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஒரு நாள் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை நான் சந்தித்து பேசும் அவர் என்னிடம் கேட்டார்,  ‘நீங்க தானே திமுக பொதுச்செயலாளர், சட்டப்பேரவையில் எவ்ளோ நாளாக இருக்கீங்க’ என்று. நான் 54 ஆண்டு என்றதும் "What 54 Years" என ஆச்சரியப்பட்டு. ஒரே தொகுதியில் 13 முறை தேர்தலில் நின்றுள்ளேன் அதற்கு, இந்தியாவிலேயே இந்த மாதிரி யாரும் இல்லை என கூறினார் மோடி. 12 முறை போட்டியிட்டவர் கேரள முதல்வர் உம்மன் சாண்டி. இதற்கு காரணம் காட்பாடி தொகுதியையும், மக்களையும் எனது கோயிலாக, தாயாக பார்க்கிறேன். தமிழகத்திலேயே 2 ஆண்டில் அதிக பணிகளை செய்தது காட்பாடி தொகுதி தான்.

பிரதமர் மோடி என்னை கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதிலால் ஆச்சரியப்பட்டார் - அமைச்சர் துரைமுருகன்

தற்போது பொன்னை ஆற்றின் குறுக்கே தரைபாலம் அமைய உள்ள பகுதிக்கு அருகில் உள்ள சிவன் கோவில், அரிஞ்சய சோழன் மேல்பாடி போரில் இறந்ததன் நினைவால், ராஜரஜா சோழனால் கட்டப்பட்டத. இந்த கோயிலை பற்றி நான் பேசி பேசி அதிகமனோர் வருகை தருகிறார்கள். இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை வைக்கிறார்கள். இது மாநில அரசிடம் இருந்தால் உடனடியாக செய்திருப்போம் ஆனால் இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதன் அனுமதி பெற்று விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். பெண்கள் நீங்க கேட்களாம், அந்த ஆயிரம் ரூபாய் எங்க என கேட்ப்பிங்க, கவலை படாதிங்க விரைவில் வரும். தேர்தலுக்கு முன் அந்த பாக்கியை கொடுத்துவிடுவோம். தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வரும் போது பாக்கி இல்லாமல் பார்த்துக்கொள்வோம்.

பிரதமர் மோடி என்னை கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதிலால் ஆச்சரியப்பட்டார் - அமைச்சர் துரைமுருகன்

 இப்போது உள்ள பெண்கள் குழந்தைகளை போட்டு பொத்து பொத்துன்னு அடிக்கிறாங்க அதற்கு காரணம் அவர்கள் பெற்றெடுப்பதில்லை கத்தரிக்கோல் தான் பெற்றிருக்கிறது. நேரா மருத்துவமனைக்கு செல்கிறார்கள் அங்கு மருத்துவர் வயிற்றை கிழித்து ஆபரேஷன் செய்து வயிற்றிலிருந்து குழந்தையை தலகாணியை போல் தூக்கி போட்டு விடுகிறார். பிறகு தாய் கேட்கிறாள் ஆணா பெண்ணா என கத்திரிக்கோல் பெற்றெடுத்தால் இப்படித்தான் கேட்பார்கள்” என பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்திக்கையில், தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடுவதாக அண்ணாமலை தெரிவித்தது குறித்து கேட்டதற்கு, வெளியிடட்டும் அது அவருடைய இஷ்டம். அதுக்கு நாம் என்ன செய்ய முடியும் என்றார். ஒரு காலத்தில் திராவிட கட்சிகள் தான் தமிழகத்தின் அடையாளம் ஆனால் இன்று பாஜகவை நம்பிதான் திராவிட கட்சிகள் உள்ளன என கேட்டதற்கு, அது அவர்களுடைய கருத்து என பதிலளித்தார். அண்ணாமலை ஜெயலலிதா உடன் ஒப்பிடுவது சரியா அதெல்லாம் எனக்கு தெரியாது என பதில் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget