மேலும் அறிய

Premalatha Vijayakanth: பிரித்தாலும் சூழ்ச்சி! வேறுபாட்டை ஏற்படுத்தி ஒற்றுமையை குழப்பும் திமுக - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

தேர்தல் ஆதாயத்திற்காக சனாதனம் என்ற பிரச்சனையை திமுக கிளப்பி உள்ளது, சனாதனத்திற்கு உண்மையான அர்த்தம் உதயநிதிக்கு தெரியாது என மயிலாடுதுறையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்திருந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வதான்யேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். பக்தர்கள் பலர் பிரேமலதா விஜயகாந்திடம் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

Premalatha Vijayakanth: பிரித்தாலும் சூழ்ச்சி! வேறுபாட்டை ஏற்படுத்தி ஒற்றுமையை குழப்பும் திமுக - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். ஆதீனம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்ட நிலையில் சிறிது நேரம் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், சனாதானத்திற்கு உண்மையான அர்த்தம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. சனாதானத்தை ஒழிப்பதற்கு மாநாடு என்று சொல்கிறார்கள். 

Premalatha Vijayakanth: பிரித்தாலும் சூழ்ச்சி! வேறுபாட்டை ஏற்படுத்தி ஒற்றுமையை குழப்பும் திமுக - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

ஆட்சியில் உள்ளவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது. கொசுவை ஒழித்து விட்டோம் டெங்குவை ஒழித்து விட்டோம் என்று உதயநிதி சொல்வது பெரிய விஷயம் இல்லை. வறுமை, லஞ்ச ஊழல், குண்டும் குழியுமாக உள்ள சாலைகள், விலைவாசி உயர்வு, டாஸ்மார்க் கடைகளை ஒழிக்க வேண்டும், தமிழ்நாட்டில் மக்களுக்காக ஒழிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. இதையெல்லாம் செய்து தமிழ்நாட்டை மக்களுக்கான நாடாக இந்தியாவின் முதன்மை மாநிலமாக நமது தமிழ்நாட்டை கொண்டு வந்தால் அதை நிச்சயமாக நாங்கள் வரவேற்போம். 

Premalatha Vijayakanth: பிரித்தாலும் சூழ்ச்சி! வேறுபாட்டை ஏற்படுத்தி ஒற்றுமையை குழப்பும் திமுக - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

இன்றைக்கு உள்ள அரசியல்வாதிகளில் முக்கியமாக திமுக அடுத்த தேர்தலுக்கான அரசியலை தான் செய்கிறார்கள் அடுத்த தலைமுறைக்கான அரசியலை திமுக செய்யவில்லை. தேர்தலுக்காக உடனே சனாதனம் என்று சொல்கிறார்கள் இதனால் நமக்கு என்ன பயன்? என்று கேள்வி எழுப்பினார். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இடையே எந்த பாகுபாடும் பிரிவினையும் கிடையாது. தேர்தல் ஆதாயத்திற்காக சனாதானம் என்ற வார்த்தையை சொல்லி பிரித்தாலும் சூழ்நிலையை திமுக உண்டாக்குகிறது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் அதை செய்கிறார். 

Premalatha Vijayakanth: பிரித்தாலும் சூழ்ச்சி! வேறுபாட்டை ஏற்படுத்தி ஒற்றுமையை குழப்பும் திமுக - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

இளைஞரான உதயநிதி புதிதாக அரசியலுக்கு வந்துள்ளார். அவரிடம் இளைஞர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள் ஆனால், பழைய அரசியலை கையில் எடுக்கிறார். நூறாண்டு காலத்திற்கு முன்பே பெரியார் ஜாதி மதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியதை செய்யவில்லை. அனைத்தும் கண்துடைப்பு தேர்தல் வந்துவிட்டால் சனாதனத்தை உயர்த்தி பேசி பத்து நாட்களுக்கு விவாதங்கள் நடத்துவார்கள். இதனால் நாட்டுக்கோ மக்களுக்கோ என்ன பலன் என்று கேள்வி எழுப்பிய பிரேமலதா, பிரித்தாலும் சூழ்ச்சி செய்து மக்களிடையே பாகுபாட்டையும் வேறுபாட்டையும் ஏற்படுத்தி ஒற்றுமையாக இருக்கின்ற மக்களை திசை திருப்பி குழப்பம் விளைவிக்கும் செயல்” என்று கூறினார். 

Premalatha Vijayakanth: பிரித்தாலும் சூழ்ச்சி! வேறுபாட்டை ஏற்படுத்தி ஒற்றுமையை குழப்பும் திமுக - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

தொடர்ந்து பேசிய அவர், “பாராளுமன்ற தேர்தலுக்கு உரிய நேரத்தில் எங்களின் நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம். நூற்றாண்டு காலத்திற்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களை உதயநிதி பட்டியலிடுகிறார். கணவன் இறந்தால் யார் இன்று உடன்கட்டை ஏறுகிறார்கள்? மொட்டை அடிக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இதுதான் சனாதனம் என்று அவர்கள் விளக்கம் அளிக்கின்றனர். தமிழ்நாட்டில் ஒரு உதாரணத்தை அவர்களால் காண்பிக்க முடியுமா? எதுவுமே இல்லாததை சொல்கிறார்கள். இன்று நாம் சந்திராயன், ஆதித்யா எல் ஒன்றை நிலவுக்கும், சூரியனுக்கும் அனுப்பி கொண்டு உள்ளோம்.

Premalatha Vijayakanth: பிரித்தாலும் சூழ்ச்சி! வேறுபாட்டை ஏற்படுத்தி ஒற்றுமையை குழப்பும் திமுக - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

தற்கால அரசியலைப் பேச வேண்டிய உதயநிதி நூற்றாண்டு காலத்திற்கு பின்னோக்கி உள்ளார். இதனால் உதயநிதி மக்களின் மிகப்பெரிய வெறுப்பை சம்பாதித்துள்ளார். மக்களின் ரத்தத்திலும் உணர்வுகளிலும் இந்தியா என்ற வார்த்தை ஊறிப் போய் உள்ளது. இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றினால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒரு நாட்டினுடைய பெயரை மாற்றுவது என்பது கண்டிக்கத்தக்கது எனவும் தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளதாகவும்” தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Jhon Arokiasamy : விஜயின் அரசியல் ஆலோசகர் தவெக-வின் MASTER THE BLASTER  ஜான் ஆரோக்கியசாமி யார்?ADMK TVK Alliance : அதிமுகவுடன் டீல் பேசும் விஜய்?துணை முதல்வர் பதவி..80 சீட் புரட்டி போடும் கூட்டணிKasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Embed widget