மேலும் அறிய
Advertisement
’ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களின் அடுத்தடுத்த போஸ்டர்’ அனல்பறக்கும் நெல்லை..!
அதிமுக தலைமையில் நடைபெறும் பனிப்போர், ஒவ்வொரு ஊரிலும் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் நெல்லையில் இரு பிரிவாக பிரிந்து போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டு வருவது.
ஓ.பன்னீர் செல்வத்தை கலந்து ஆலோசிக்காமல் முடிவு செய்ததால் தான் தேர்தலில் தோற்றுப் போனோம். இனிமேலும் தொடர்ந்தால் அதிமுக தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம் என நெல்லையில் தலைமைக்கு எதிராக அதிமுக தொண்டர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் நேற்று நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டை மற்றும் நெல்லை சந்திப்பு பகுதியில் அதிமுக தலைமைக்கு எதிராக மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் என்ற பெயரில் அந்த போஸ்டர்கள் எல்லாம் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர்களில் அதிமுக கட்சி செயல்பாடுகளில் மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் சுயமாக முடிவு எடுத்தததால்தான், தேர்தலில் தோற்றுப் போனோம், இனிமேலும் இது தொடர்ந்தால் தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம் என்று அந்த போஸ்டர்களில் எழுதப்பட்டிருந்தது. இதேபோல், தேர்தல் நேரத்தில் சசிகலாவிற்கு ஆதரவாக நெல்லையில்தான் முதன்முதலில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக எடப்பாடியார் ஆதரவாளர்கள் என்ற பெயரில் பதிலுக்கு போஸ்டர் ஓட்டியுள்ளனர். அதில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடியாரை தேர்வு செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என ஈபி.எஸ் தரப்பினர் போஸ்டர்கள் அடித்து நகர் முழுவதும் ஒட்டி உள்ளனர்.
அதிமுகவின் தலைமையை யார் கைப்பற்றுவது என்பது குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே தொடர்ந்து மோதல் வலுத்து வரும் நிலையில், இந்த போஸ்டர் யுத்தங்களால் நெல்லையில் அனல் பறந்து வருகிறது.. முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் என்ற இரு டைட்டில்களையும் இபிஎஸ் தரப்பு தட்டிச் சென்றது. இத்தனைக்கும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி ஓபிஎஸ் வசம் இருந்தபோதும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எம்.எல்.ஏக்ள், மாவட்ட செயலாளர்கள், வழிகாட்டுக் குழு, செயற்குழு, பொதுக் குழு என பல தரப்பிலும் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு வட்டத்தை விரிவுபடுத்தியுள்ளார். இருப்பினும் தன்னால் முடிந்த அத்தனை வழிகளிலும் ஓபிஎஸ் எடப்பாடியை எதிர்த்து வருகிறார். முன்னாள் அமைச்சர்கள் சிலரை தன் பக்கம் கொண்டு வரவும் ஓபிஎஸ் முயன்று வருகிறார்.
இது தவிர சசிகலா - தினகரன் தரப்பு அதிமுகவை எப்போது, எப்படி கைப்பற்றுவது என யோசித்து திட்டமிட்டுவருவதாக கூறப்படும் நிலையில், சசிகலா தினம் தினம் ஆடியோ வெளியிட்டு வருவது அதிமுகவில் ஒரு தரப்பிற்கு பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது. பாஜக தரப்பிலும் நயினார் நாகேந்திரன் மூலம் நெல்லையில் உள்ள அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை கவர்ந்து வர ஒரு பிளான் போட்டு அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் இருக்கின்றனர். தேர்தல் தோல்விக்குப் பின்னர் அதிமுகவில் கீழ் மட்ட புலம்பல் சற்று அதிகமாக கேட்கிறது. குறிப்பாக சிறுபான்மையினர் பிரிவில் பெரும்பாலானோர் அதிமுகவின் தற்போதைய தலைமைக்கு (ஓபிஎஸ் - இபிஎஸ்) எதிராக திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டவற்றில் முக்கியமானது சிறுபான்மையினர் பிரிவு.
பாஜகவின் ஆளுகைக்குள் அதிமுக வந்த பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக கட்சிக்குள் சிறுபான்மையினர் பிரிவின் கருத்துகள் கேட்கப்படவில்லை என்றும், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என இவர்கள் வலியுறுத்திய போதும் மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் கூட்டணி அமைத்து தங்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அதிமுக தோல்வியையே தழுவியுள்ளது என்றும் அப்பிரிவில் உள்ளவர்கள் புலம்பி வருகின்றனர்.. இதனால் அதிமுகவில் உள்ள கிறிஸ்தவ, இஸ்லாமிய நிர்வாகிகள் அதிருப்தியிலும் உள்ளனர்.
ஓபிஎஸ் -ஈபிஎஸ் இடையே நடைபெறும் பனிப்போரின் வெளிப்பாடுதான் நெல்லையில் இருபிரிவுகளாக போஸ்டர்கள் ஒட்டிவருவது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஜோதிடம்
ஆன்மிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion