மேலும் அறிய
Advertisement
பிரதமர் மோடி அடித்து பேசினாலும் தமிழக மக்கள் ஏமாற தயாராக இல்லை - தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி திட்டவட்டம்
தமிழகத்திற்கு மோடி எத்தனை முறை வந்து கரணம் அடித்து பேசினாலும் தமிழக மக்கள் ஏமாற தயார இல்லை என்று தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி பேசியுள்ளார்.
விழுப்புரம் : தமிழகத்திற்கு மோடி எத்தனை முறை வந்து கரணம் அடித்து பேசினாலும் தமிழக மக்கள் ஏமாற தயார இல்லை என்றும் நூறு நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் மத்திய அரசு நிதி வழங்காமல் தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்பட வேண்டுமென்றே மோடி அரசு செயல்படுவதாக திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய திமுக எம்.எல்.ஏ
விழுப்புரம் மாவட்டம் கெடாரில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததால் புதிய கட்டிடம் கட்டிட தர வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி தனது தொகுதியில், நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 பிரச்சனைகளில் கெடார் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளதால் அதற்கு நிதி ஒதுக்கி புதிய கட்டிடம் கட்டிதர வேண்டுமென சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையின் அடிப்படையில் கெடார் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ஒரு கோடி நிதி ஒதுக்கபட்டதை தொடர்ந்து இன்று ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விக்கிரவாண்டி திமுக எம் எல் ஏ புகழேந்தி அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் மோடி அடித்து பேசினாலும் தமிழக மக்கள் ஏமாற தயார இல்லை
அதனை தொடர்ந்து அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய எம் எல் ஏ புகழேந்தி, தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறந்த ஆட்சி நடத்துவதால் இதனை பொறுக்கமுடியாமல் மோடி உள்ளதாகவும்,சென்னை தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது பிரதமர் மோடியிடம் தமிழகத்திற்கு நிதி ஒதுக்க கேட்டும் நிதி அளிக்கவில்லை என்றும், தமிழகத்திற்கு மோடி எத்தனை முறை வந்து கரணம் அடித்து பேசினாலும் தமிழக மக்கள் ஏமாற தயாராக இல்லை கூறினார். மேலும் நூறு நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் மத்திய அரசு நிதி வழங்காமல் தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்பட வேண்டுமென்றே மோடி அரசு செயல்பட்டு வருவதாக எம் எல் ஏ புகழேந்தி குற்றஞ்ச்சாட்டியுள்ளார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion