மேலும் அறிய

'விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் போட்டோ சூட் நடத்தி வருபவர்தான் ஸ்டாலின்' - எடப்பாடி பழனிசாமி

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  அதிமுகவை வீழ்த்தி விடலாம் என கனவு காணுகிறார். அதிமுகவை வீழ்த்த ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அத்தனையையும் மக்கள் துணைகொண்டு வீழ்த்துவோம் - பழனியில் இபிஎஸ் பேச்சு

பழனிக்கு வருகை தந்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு  அதிமுகவினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பேருந்து நிலையம் முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்க அங்கு போடப்பட்டிருந்த மேடைக்கு வந்த அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்தார்‌. 

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் போட்டோ சூட்  நடத்தி வருபவர்தான் ஸ்டாலின்' - எடப்பாடி பழனிசாமி

அப்போது அவர் பேசியதாவது :- தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  அதிமுகவை வீழ்த்தி விடலாம் என கனவு காணுகிறார். அதிமுகவை வீழ்த்த ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அத்தனையையும் மக்கள் துணைகொண்டு வீழ்த்துவோம் எனவும், அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு குடும்பம் கிடையாது, அவர்களுக்கு மக்கள்தான் குடும்பம் என வாழ்ந்து மறைந்தனர். ஆனால்  திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக வரமுடியும் என்றும், சந்தர்ப்ப சூழ்நிலையால்  இன்று ஸ்டாலின் தமிழக முதல்வராக உள்ளார். மக்களின் குறைகளை தீர்க்கவே ஸ்டாலினை முதல்வராக அமர வைத்துள்ளார்களே ஒழிய, மக்களை பலி வாங்க அல்ல என்றும், நீங்கள் மக்களை மறந்தால் மக்கள் உங்களை மறப்பார்கள் என்பதை நினைவில் கொண்டு ஆட்சி செய்யுங்கள் என்றும் பேசினார்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் போட்டோ சூட்  நடத்தி வருபவர்தான் ஸ்டாலின்' - எடப்பாடி பழனிசாமி

குடும்ப ஆட்சி நடைபெற்ற இலங்கையின் இன்றைய நிலையை மனதில் வைத்து கொண்டு ஸ்டாலின் ஆட்சி நடத்த வேண்டும் எனவும், தனது  குடும்பத்தின் அதிகார மையங்களை கட்டுபடுத்த முடியாத முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்றும், இதேநிலை நீடித்தால் இலங்கையை போல தமிழகத்தில் உங்கள் குடும்பத்திற்கும் அதே நிலைதான் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் கவலைபடாமல் ஸ்டாலின் போட்டோ சூட் நடத்தி கொண்டு உள்ளதாகவும், ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள் ஆகியும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு இதுவரை என்ன செய்தார் ஸ்டாலின் என்றும் கேள்வி எழுப்பினார். 

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் போட்டோ சூட்  நடத்தி வருபவர்தான் ஸ்டாலின்' - எடப்பாடி பழனிசாமி

திமுக அமைச்சர்களுக்கு காலை முதல் மாலை வரை லஞ்சம் வாங்கி கொடுக்கவேண்டிய இடத்தில் கொடுத்து பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்கள். உலகின் பெரிய பணக்காரர்களாக வருவதற்காக இந்த ஆட்சியை ஸ்டாலின் பயன்படுத்தி வருகிறார். ஆட்சியில் அதிமுக இருந்தாலும் இல்லையென்றாலும் மக்கள் பிரச்சினைகளை பற்றி சிந்திக்கும் கட்சி அதிமுக என்றும், மேட்டூர் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மக்கள் வெள்ளத்தில் சிக்கியபோதும் யாருமே சென்று மக்களை பார்க்கவில்லை என குற்றச்சாட்டினார். அதிமுகவில் பிளவை ஏற்படுத்தி தொடர்ந்து ஆட்சியை தக்கவைக்க ஸ்டாலின் திட்டமிட்டார். அவருடன் இணைந்து அதிமுகவின் இருபெரும்‌ தலைவர்களுக்கும், அதிமுகவிற்கும், அதிமுக தொண்டர்களுக்கும் துரோகம் செய்தவர் ஓபிஎஸ் என்றும், அதிமுகவினர் கோவிலாக எண்ணும் அதிமுக தலைமை அலுவலகத்தையும், அம்மா இருந்த அறையையும் காலால் உதைத்து ஈவு இரக்கமின்றி அங்குள்ள பொருட்களை சேதப்படுதியவர் ஓபிஎஸ் என்றும் அவர் உதைத்தது அலுவலகத்தை அல்ல, ஒன்றரைக்கோடி அதிமுக தொண்டர்களின் நெஞ்சில் உதைப்பதற்கு சமம் என்றும் தெரிவித்தார்.

திருட்டுத்தனமாக எடுத்த சென்ற ஆவணங்களையும்‌, பொருட்களையும்‌ மீட்டுத்தரமுடியாத அரசு திமுக அரசு என்றும், பலம் பொருந்திய அதிமுக விற்கே இந்நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன? என்றும், மக்கள் விரோத அரசு எப்போது போகும் என மக்கள் எதிர்பார்த்து உள்ளனர் என்றும், 60 அமாவாசைகளில் 14 அமாவாசைகள் சென்றுவிட்டன என்றும், மீதமுள்ள 46 அமாவாசைகள் முடியும் முன்பே வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் எனவும் கூறினார்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் போட்டோ சூட்  நடத்தி வருபவர்தான் ஸ்டாலின்' - எடப்பாடி பழனிசாமி

போதைப்பொருளை கட்டுப்படுத்த முடியாமல் இளைஞர்களும் மாணவர்களும் சீரழிகின்றனர். இதை கட்டுப்படுத்த முடியாத ஸ்டாலின் நமது ஒத்துழைப்பு வேண்டும் என கூறுவதற்கு வெட்கமாக இல்லையா? என்றும், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யவேண்டுமென பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிமுக ஆட்சியில் தடைசெய்ய ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை திமுக ஆட்சியில் நீதிமன்றத்தில் சரியாக வாதாடாமல் திறந்து விட்டுள்ளனர்.

ஆன்லைன் ரம்மியை நடத்தும் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதற்காக மக்களின் கருத்தை கேட்பதாக நாடகமாடுகிறார் ஸ்டாலின் எனவும், ஸ்டாலின் அரசு குழு அரசாங்கம். இதுவரை 38 குழு அமைத்தும் இதுவரை எதுவுமே செய்யவில்லை. விரைவில் ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராக வேண்டும் என பேசினார். மக்கள் வருமானமின்றி தவித்து வரும் நிலையில் வீட்டு வரி, மின்சார வரி, பால்விலை என அனைத்தையும் ஏற்றி வாக்களித்த மக்களுக்கு அருமையான அற்புதமான பரிசை அளித்துள்ளார் ஸ்டாலின். மக்கள் வரும் காலங்களில் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் எனவும் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget