மேலும் அறிய

"ராஜ் மோகன் சாதியால் அமைச்சர் ஆகவில்லை".. பா.ரஞ்சித் குற்றச்சாட்டுக்கு தவெக எம்எல்ஏ ரேவந்த் பதிலடி

அமைச்சர் ராஜ்மோகன் குறித்த இயக்குநர் பா ரஞ்சித்தின் விமர்சனத்திற்கு தவெக மதுரவாயல் எம்.எல்.ஏ ரேவந்த் பதில் அளித்துள்ளார்

தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தலித் அமைச்சர்கள் குறித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் முன்வைத்த விமர்சனத்திற்கு,  தவெக மதுரவாயல் எம்எல்ஏ ரேவந்த் பதிலடி அளித்துள்ளார். "அமைச்சர் ராஜ் மோகன் அவரது சாதியின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை; அவரது தகுதி, திறன் மற்றும் அவர் மீதான நம்பிக்கையின் அடிப்படையில்தான் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது" என்று ரேவந்த் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் தலைமையில் நீட் எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் காவல்துறை அடக்குமுறையை கண்டித்தும்  நேற்று ஆர்பாட்டம் நடந்தது. இந்த நிகழ்வில் பேசிய திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் தவெக அரசின் தலித் அமைச்சர்களை கடுமையாக விமர்சித்தார் . குறிப்பாக அமைச்சர் ராஜ்மோகன் குறித்து ரஞ்சித் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அமைச்சர் ராஜ்மோகன் குறித்து பா ரஞ்சித் 

அமைச்சர் ராஜ்மோகன் குறித்து பா ரஞ்சித் இப்படி கூறியிருந்தார் "அமைச்சர் ராஜ்மோகன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தானா என்பதே எங்களுக்கு தெரியாது. அவர் எழும்பூரில் நின்றபோது தான் அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது எங்களுக்கு தெரிந்ததுஒரு பட்டியலின சமூகத்தை சேர்ந்தவராக இருந்துகொண்டு ஊடகவியலாளராக இருந்துகொண்டு இதுவரை ஒரு தலித் பிரச்சனைக்கு அவர் குரல் கொடுத்திருக்கிறாரா? இப்படியான ஒருவர் அமைச்சர் ஆனால் என்ன ஆகலனா என்ன. அவரை நீங்கள் அமைச்சர் ஆக்கிக்கொள்ளுங்கள். நல்ல விஷயம். அதனால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. "

தவெக எம்.எல்.ஏ ரேவந்த் பதில்

இந்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள ரேவந்த், "ஐந்து நீண்ட ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்தவர்களைக் கேள்வி கேட்கத் துணியாதவர்கள், 2026 மே 4-க்குப் பிறகு திடீரென தங்கள் குரலை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். அந்தப் பழைய அரசியல் பாணி காலாவதியாகிவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "சாதி, மதம் அல்லது பின்னணி எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு குடிமகனுக்கும் சேவை செய்ய உறுதிபூண்ட அரசாங்கத்தை தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அமைச்சர் ராஜ் மோகன் அவரது சாதியின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. அவரது தகுதி, திறன் மற்றும் அவர் மீதான நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர் அமைச்சராக்கப்பட்டார். இதே கொள்கைதான் எங்கள் அமைச்சரவையில் உள்ள ஒவ்வொரு அமைச்சருக்கும் பொருந்தும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதோடு, "சிலர் இன்னும் மக்களை சாதி அடையாளங்களுக்குள் சுருக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் நாங்கள் தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில்தான் கவனம் செலுத்துகிறோம். நல்லாட்சி, சம வாய்ப்பு மற்றும் திறமையான நிர்வாகமே எங்கள் முன்னுரிமை" என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, "நியாயமான கேள்விகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் பிரச்சாரங்கள் அல்லது பிரித்தாளும் அரசியல் மூலம் அல்ல; உண்மைகள், செயல்பாடு மற்றும் சிறந்த நிர்வாகத்தின் மூலமே பதிலளிப்போம். அடையாள அரசியல் சார்ந்த பழைய அரசியல் பாணி இனி எடுபடாது" என்று ரேவந்த் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

தவெக அரசின் 'மாற்றமா' இது? சட்டசபையில் அமைச்சர்கள் குழப்பம், முதல்வர் விஜய் மவுனம்! - ஆர்.பி.உதயகுமார் தாக்கு !
தவெக அரசின் 'மாற்றமா' இது? சட்டசபையில் அமைச்சர்கள் குழப்பம், முதல்வர் விஜய் மவுனம்! - ஆர்.பி.உதயகுமார் தாக்கு !
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Embed widget