AIADMK: ஓய்ந்து போய்விட்டாரா ஓ.பி.எஸ்? சட்டப்பேரவையில் அதிமுக என்ற வார்த்தையை தவிர்த்து உரை..!
சட்டசபையில் ஓ. பன்னீர் செல்வம் பேசுகையில் அதிமுக எனும் வார்த்தையை பயன்படுத்தது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.
சட்டசபையில் ஓ. பன்னீர் செல்வம் பேசுகையில் அதிமுக எனும் வார்த்தையை பயன்படுத்தது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.
சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது. அப்போது விதி 110இன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை இன்று தொடங்கி ஆண்டு முழுவதும் நடத்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதனை எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் வரவேற்றுப் பேசும் போது, ஓ. பன்னீர் செல்வம் பேசினார். அப்போது பேரிய அவர், ” முதலமைச்சர் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திராவிட இயத்தின் தலைக் காவிரியாக உள்ள பெரியார், மொழி கடந்து மாநிலம் கடந்து சமூக நீதிக்காக அவர் நடத்திய போராட்டத்தினை நினைவு கூறும் வகையில் ஆண்டு முழுவதும் கொண்டாட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ப்பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் வழியில் சமூக நீதி காத்த வீராங்கனையாக இருந்தவர் ஜெயலலிதா. அவர் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின் தங்கிய மக்களுக்கு பெற்றுத்தந்தற்கு அடித்தளமாக அமைந்தது பெரியாரின் கொள்கை தான். முதலமைச்சர் அறிவித்துள்ள இந்த தேசிய விழா அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது என்பதை வரவேற்று அமர்கிறேன். நன்றி, வணக்கம்” எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் கடந்த வாரத்தில் அதிமுக எனும் வார்த்தையை ஓ. பன்னீர் செல்வம் பயன்படுத்தியதற்காக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின்னர், அதிமுக பொதுக்குழு குறித்து ஓ. பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பு வந்தது. இதற்கடுத்து இன்று சட்டசபையில் பேசிய அவர், அதிமுக சார்பில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர் செல்வம் அதிமுக எனும் பெயரையே பயன்படுத்தாது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.