மேலும் அறிய

O Panneerselvam: அதிமுகவில் புதிய நியமனங்கள் எதுவும் செல்லாது - ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி 

அதிமுகவில் அவர்கள் நியமித்த எந்த நியமங்னங்களும் சட்டப்படி செல்லாது என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவில் புதிதாக நியமித்த எந்த பொறுப்பும் கட்சி சட்டப்படி செல்லாது என தெரிவித்துள்ளார். 

முன்னதாக, மிகுந்த பரபரப்புக்கிடையே, கடந்த 11 ஆம் நடந்த அதிமுக பொதுக்குழு இரண்டாவதாக கூடிய நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூட்டி இருந்த அதிமுக அலுவகத்தை உடைத்து உள்ளே நுழைந்தனர். இதனையடுத்து அங்கு கூடியிருந்த எடப்பாடி ஆதரவாளர்களுக்கும், அவர்களுக்குமிடையே மோதல் உண்டானது. இந்த மோதல் கலவரமாக வெடித்தது.

இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு 144  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, காவல்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்தி, வருவாய் துறை மூலம் சட்டப்பிரிவு 145 பயன்படுத்தி அதிமுக அலுவலகத்தை சீல் வைத்து மூடியது. இந்த நிலையில் அதிமுகவின் அலுவலத்தின் சீலை அகற்றக்கோரி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கானது நாளை நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

O Panneerselvam: அதிமுகவில் புதிய நியமனங்கள் எதுவும் செல்லாது - ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி 

இதனிடையே, அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமித்து, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். 

துணை பொதுச் செயலாளர்கள்:

அதிமுக துணை பொதுச்செயலாளர் என புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு கே.பி. முனுசாமி மற்றும் நத்தம் விசுவநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பொன்னையன் பதவி மாற்றம்:

அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகித்த சி.பொன்னையன் மாற்றப்பட்டு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக இருந்த தமிழ்மகன் உசேன், கழக அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் பொன்னையனுக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

O Panneerselvam: அதிமுகவில் புதிய நியமனங்கள் எதுவும் செல்லாது - ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி 
கழக தலைமை செயலாளர்:

அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி பதவி வகித்த, அதிமுக கழக தலைமை கழக செயலாளர் பொறுப்பிற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கழக அமைப்பு செயலாளர்கள்:

அதிமுக அமைப்பு செயலாளர்களாக செல்லூர் ராஜூ, சி.வி சண்முகம், பி. தனபால், கே.பி. அன்பழகன், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, பென்ஜமின், ராஜன் செல்லப்பா, பாலகங்கா ஆகிய 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு

Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!

வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்

Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!

ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!

ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்

ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 

Embed widget