மேலும் அறிய

John Pandian: எந்த கொலைக்கும் என்கவுண்டர் நடவடிக்கை தீர்வாகாது; தீர்வு இதுதான் - ஜான் பாண்டியன்

தலைவர்களை கொலை செய்துவிட்டால் பெயர் வாங்கி விடலாம் என்ற எண்ணமே தவிர எதிரி என்ற எண்ணமில்லை, இந்த நிலை தான் தமிழகத்தில் அதிகம் உள்ளது. குறுகிய கண்ணோட்டத்துடன் ஒரு சிலர் இயங்கி கொண்டிருக்கின்றனர்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தென் தமிழக தலைமையகத்தில் வைத்து கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் கூறும் பொழுது, "மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு எடுத்து நடத்த வேண்டும். மாஞ்சோலை மக்களை மலைப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் அனைவரும் செயல்பட்டு வருகிறார்கள். அதனை அரசு தடுத்து செயல்படுத்த விடக்கூடாது. தேயிலைத் தோட்ட நிறுவனத்திடம் கையூட்டு பெற்றுக் கொண்டு ஆளுங்கட்சியினரே மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நினைக்கிறார்கள். அரசை நாங்கள் கேட்பது என்னவென்றால் டேன்டி எடுத்து நடத்த வேண்டும், அல்லது ஒரு குடும்பத்திற்கு 5 ஏக்கர் நிலம் கொடுத்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.  வழக்கு நடத்துக்கொண்டிருக்கிறது. நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம். எங்களது போராட்டம் மாஞ்சோலைக்காக தொடரும் எனவும் தெரிவித்தார்.

மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை அரசு கண்டறிய வேண்டும். இந்த கொலை வழக்கு நீண்ட தொடர்பை போல் மாறி உள்ளது. சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் படுகொலை அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு சில காவல்துறையினர் உதவியாக இருப்பார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. அந்த அதிகாரிகளையும் கண்காணித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளை மாற்றுவதனால் நிச்சயம் இந்த இழி நிலைகள் நடந்து முடிந்து விடாது என்று அர்த்தமில்லை. கொலைக்களமாக மாறுகின்ற திமுக ஆட்சியில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனைகளை கொடுக்க வேண்டும் என்றார். 

எங்களை போன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு சரியாக இல்லை என்பது உண்மைதான். கடந்த அதிமுக ஆட்சியில் எனக்களிக்கப்பட்ட பாதுகாப்பை திமுக அரசு அமைந்த பிறகு மாற்றி விட்டனர். இந்தியா  முழுவதும் சுற்றி திரியும் எனக்கு பாதுகாப்பை அரசு துரிதப்படுத்த வேண்டும். இது போன்று எல்லா தலைவர்களுக்கும் குறிப்பாக திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்கள் இருக்கும் நிலையில் இவர்களது எண்ணங்கள் எல்லாம் தலைவர்களை கொலை செய்துவிட்டால் பெயர் வாங்கி விடலாம் என்ற எண்ணமே தவிர. எதிரி என்ற எண்ணமில்லை, இதுதான் உண்மை. இந்த நிலை தான் தமிழகத்தில் அதிகம் உள்ளது.  குறுகிய கண்ணோட்டத்துடன் ஒரு சிலர் இயங்கி கொண்டிருக்கின்றனர். அவர்களை கண்காணித்து தலைவர்களுக்கும் தமிழக அரசு பாதுகாப்பு தரவேண்டும். பாதுகாப்பு என்பது கூலிப்படை தமிழகத்தில் அதிகம் இருக்கிறது என்றால் வேலைவெட்டி இன்றியும், கஞ்சா அதிகம் புழங்குவது தான் காரணம். தூத்துக்குடி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், கோவை பகுதிகளில் அதிகம் கஞ்சா நடமாடுகிறது. இது எப்படி கிடைக்கிறது என அரசு தான் கண்டுபிடிக்க வேண்டும். அதோடு இதனை ஊக்குவிப்பதும் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் தான். அரசு காவல்துறை அதிகாரிகளையும் முறையாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. எந்த கொலைக்கும் என்கவுண்டர் நடவடிக்கை தீர்வாகாது.  என்கவுண்டர் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். கொலைக்கு கொலைதான் தீர்வு என்றால் நீதிமன்றம் எதற்கு? நீதிமன்றத்தின் வாயிலாகவே கொலை குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் மட்டுமே தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வு கிடைக்கும். என்கவுண்டர் நடவடிக்கையால் உண்மை குற்றவாளிகளை கண்டறிய முடியாத நிலை உருவாக்கி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எடுத்த நடவடிக்கை என்ன என்பதை தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இந்த கொலை எதற்கு நடந்தது என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"குதிரையில் வந்த வேட்புமனு தாக்கல்" - பண அரசியலுக்கு எதிராக களம் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்
Tamilnadu Round Up: 1360+ வேட்பு மனுக்கள், பாஜக & காங்., வேட்பாளர்கள் யார்? சென்னை வரும் மோடி- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 1360+ வேட்பு மனுக்கள், பாஜக & காங்., வேட்பாளர்கள் யார்? சென்னை வரும் மோடி- தமிழ்நாட்டில் இதுவரை
Congress Candidates: 5 தொகுதிகள்..! வேட்பாளர்களை வலை வீசி தேடும் காங்கிரஸ் - ஆள் இல்லாத தேசிய கட்சி - என்ன ஆச்சு?
Congress Candidates: 5 தொகுதிகள்..! வேட்பாளர்களை வலை வீசி தேடும் காங்கிரஸ் - ஆள் இல்லாத தேசிய கட்சி - என்ன ஆச்சு?
சிறையில் இருந்தபடி வேட்புமனு: ஹரி நாடார் சொத்து மதிப்பு 26 கோடி! ஆலங்குளத்தில் பரபரப்பு!
சிறையில் இருந்தபடி வேட்புமனு: ஹரி நாடார் சொத்து மதிப்பு 26 கோடி! ஆலங்குளத்தில் பரபரப்பு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD SILVER RATE Today: என்ன விளையாட்டு இது.?! நேற்று அதிரடி குறைவு, இன்று உயர்வு; தங்கத்தின் தற்போதைய விலை என்ன.?
என்ன விளையாட்டு இது.?! நேற்று அதிரடி குறைவு, இன்று உயர்வு; தங்கத்தின் தற்போதைய விலை என்ன.?
Tamilnadu Round Up: 1360+ வேட்பு மனுக்கள், பாஜக & காங்., வேட்பாளர்கள் யார்? சென்னை வரும் மோடி- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 1360+ வேட்பு மனுக்கள், பாஜக & காங்., வேட்பாளர்கள் யார்? சென்னை வரும் மோடி- தமிழ்நாட்டில் இதுவரை
Congress Candidates: 5 தொகுதிகள்..! வேட்பாளர்களை வலை வீசி தேடும் காங்கிரஸ் - ஆள் இல்லாத தேசிய கட்சி - என்ன ஆச்சு?
Congress Candidates: 5 தொகுதிகள்..! வேட்பாளர்களை வலை வீசி தேடும் காங்கிரஸ் - ஆள் இல்லாத தேசிய கட்சி - என்ன ஆச்சு?
Trump Iran War Video: “இன்னும் நிறைய வரும்“; ஈரானின் மிகப்பெரிய பாலம் தகர்க்கப்பட்ட வீடியோவை போட்டு மிரட்டிய ட்ரம்ப்
“இன்னும் நிறைய வரும்“; ஈரானின் மிகப்பெரிய பாலம் தகர்க்கப்பட்ட வீடியோவை போட்டு மிரட்டிய ட்ரம்ப்
TVK Vijay: விஜயின் வேட்புமனுவிலேயே கோளாறு..! ஃபார்ம் கூட ஃபில் பண்ண தெரியலயா? பெரம்பூரில் தள்ளுபடி?
TVK Vijay: விஜயின் வேட்புமனுவிலேயே கோளாறு..! ஃபார்ம் கூட ஃபில் பண்ண தெரியலயா? பெரம்பூரில் தள்ளுபடி?
Trump Iran War: “அமெரிக்கா அவமானப்பட்டு, இழிவுபட்டு, வருத்தப்பட்டு...“; ட்ரம்ப்புக்கு மெர்சல் காட்டிய ஈரான்
“அமெரிக்கா அவமானப்பட்டு, இழிவுபட்டு, வருத்தப்பட்டு...“; ட்ரம்ப்புக்கு மெர்சல் காட்டிய ஈரான்
CSK vs PBKS: சொந்த மண்ணில் கம்பேக் தருமா சிஎஸ்கே? பேட்டிங்கில் தேறுமா? வரிந்து கட்டும் பஞ்சாப் - வெற்றி யாருக்கு?
CSK vs PBKS: சொந்த மண்ணில் கம்பேக் தருமா சிஎஸ்கே? பேட்டிங்கில் தேறுமா? வரிந்து கட்டும் பஞ்சாப் - வெற்றி யாருக்கு?
Suzuki Burgman Street 125: ஒரு லட்சத்துக்கே புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் அறிமுகம் - TVS, ஆக்டிவா தாங்குமா?
Suzuki Burgman Street 125: ஒரு லட்சத்துக்கே புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் அறிமுகம் - TVS, ஆக்டிவா தாங்குமா?
Embed widget