மேலும் அறிய

GOLD SILVER RATE Today: என்ன விளையாட்டு இது.?! நேற்று அதிரடி குறைவு, இன்று உயர்வு; தங்கத்தின் தற்போதைய விலை என்ன.?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக குறைந்த நிலையில், இன்று விலை உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் இருமுறை மாற்றம் கண்டு, சவரனுக்கு 2,400 ரூபாய் குறைந்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை இப்போது பார்க்கலாம்.

இன்று விலை உயர்ந்த தங்கம்

தங்கத்தின் விலை இந்த வாரத்தின் முதல் நாளான 30-ம் தேதி காலையில், தங்கத்தின் விலை குறைந்தது. அதன்படி, கிராமிற்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,08,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மாலையில் சவரனுக்கு 1,360 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. அதன்படி, கிராமிற்கு 170 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,770 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,10,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த சூழலில் 31-ம் தேதி காலையிலேயே தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்தது. அதன்படி, கிராமிற்கு 100 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13,670 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,09,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பின்னர், ஏப்ரல் 1-ம் தேதி தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. அதன்படி, தங்கத்தின் விலை கிராமிற்கு 380 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 14,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 3,040 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,12,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த சூழலில் நேற்று காலை தங்கத்தின் விலை குறைந்தது. அதன்படி, சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும், கிராமிற்கு 100 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், மாலையில் மேலும் 1,600 குறைந்தது. இதன் மூலம் ஒரே நாளில் 2,400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி ஒரு கிராம் 300 ரூபாய் குறைந்து, கிராம் 13,750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில், இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

தங்கத்தின் இன்றைய விலை என்ன.?

அதன்படி, தங்கத்தின் விலை இன்று சவனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,10,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 100 ரூபாய் விலை உயர்நது, கிராம் 13,850 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

வெள்ளியின் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில், அதாவது 30-ம் தேதி காலையிலும் மாற்றமின்றி கிராம் 250 ரூபாய் என்ற விலையிலேயே நீடித்தது. ஆனால், மாலையில் கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், 31-ம் தேதி காலையிலேயே கிராமிற்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த சூழலில், ஏப்ரல் 1-ம் தேதி வெள்ளியின் விலை கிராமிற்கு 15 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 

இந்த சூழலில், நேற்று வெள்ளியின் விலை கிராமிற்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி கிராம் அதே 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

 

தலைப்பு செய்திகள்

How To Save ₹100 Every Day: ஒரு நாளுக்கு 100 ரூபாய் சேமித்தால் நிதி எதிர்காலம் எப்படி மாறும்? - : கோடீஸ்வரர் ஆகும் ரகசியம் இதுதான்!
ஒரு நாளுக்கு 100 ரூபாய் சேமித்தால் நிதி எதிர்காலம் எப்படி மாறும்? - : கோடீஸ்வரர் ஆகும் ரகசியம் இதுதான்!
LIVE | Kerala Lottery Result Today (03.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி முடிவுகள் இன்று- உங்கள் அதிர்ஷ்ட எண் வென்றதா?
LIVE | Kerala Lottery Result Today (03.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி முடிவுகள் இன்று- உங்கள் அதிர்ஷ்ட எண் வென்றதா?
PM SVANidhi Scheme: வட்டியில் சலுகை.. பிணையில்லாமல் ரூ.50 ஆயிரம் கடன்.. இந்த திட்டம் தெரியுமா?
PM SVANidhi Scheme: வட்டியில் சலுகை.. பிணையில்லாமல் ரூ.50 ஆயிரம் கடன்.. இந்த திட்டம் தெரியுமா?
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Embed widget