என்ஐஏவினுடைய முகத்திரையை நீதிமன்றத்தில் எஸ்டிபிஐ கட்சி கிழித்தெறியும் - நெல்லை முபாரக்
என்ஐஏவினுடைய முகத்திரையை நீதிமன்றத்தில் எஸ்டிபிஐ கட்சி கிழித்தெரியும் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் சுமார் 4 மணி நேரம் சோதனை முடிந்த பிறகு நெல்லை முபாரக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, எனது வீட்டில் இன்று அதிகாலையில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த சோதனை நடத்தப்பட்டது. இன்றைக்கு மத்திய அரசுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம்.
இந்தியாவில் தேசிய புலனாய்வு பிரிவை முன்னிறுத்தி அரசியல் செய்து வருகிற ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று நம்புகிற பாஜக அரசினுடைய ஏவல் துறையான என் ஐ ஏ மூலமாக இந்த நடவடிக்கை ஏவப்பட்டு இருக்கிறது. எஸ்டிபிஐ கட்சிக்கு துளியும் சம்பந்தமில்லாத இந்த வழக்கில் இன்றைக்கு ஒரு உள்நோக்கத்தோடு, காழ்ப்புணர்வோடு இதை சோதனை நடந்துள்ளது.
எஸ்டிபிஐ கட்சி சட்டபூர்வமாக இதனை எதிர்கொள்ளும். இது போன்ற பொய் வழக்குகளுக்கோ, இதுபோன்ற பொய்யான ரைடுகளுக்கோ கட்சியினுடைய பெயரை களங்கம் விளைவிக்க நினைத்தால் அதற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி மக்களை திரட்டி போராடும். இந்த பொய் வழக்குகளில் இருந்து எஸ்டிபிஐ கட்சியினர் நிச்சயமாக சட்டபூர்வமான முறையில் நாங்கள் வெளிவருவோம். இன்றைக்கு என்னுடைய வீட்டிலிருந்து ஒன்றும் அவர்களால் எடுத்து செல்ல முடியவில்லை. அது போக காலையிலிருந்து 5.45 மணியிலிருந்து அவர்கள் எந்த விதமான ஆதாரங்களையும் அவர்கள் காட்டிய வழக்குக்கு ஆதாரமாக எடுத்துச் செல்ல இயலாத நிலையில் உள்ளனர். ஊடகங்களுக்கெல்லாம் செய்தி பரவிவிட்டதன் அடிப்படையில் ஒரு காழ்ப்புணர்வோட என்னுடைய செல்போனை மட்டும் தான் கொண்டு போய் உள்ளனர். இதனை சட்டபூர்வமான முறையில் எதிர்கொள்ளும். எவ்வாறு இன்றைக்கு தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தை அமலாக்கத்துறையின் மூலமாக முடக்க நினைக்கிறதோ, அதுபோல என்ஐஏ மூலமாக எஸ்டிபிஐ போன்ற மக்கள் விரோத பாரதிய ஜனதா அரசினுடைய நடவடிக்கைகளை மக்கள் மன்றத்தில் நாங்கள் அம்பலப்படுத்துகிறோம் என்ற ஒற்றை காரணத்திற்காக எஸ்டிபிஐ மீது இந்த பழி, அவதூறு சுமத்தப்படுகிறது.
இந்த சோதனை மூலமாக இன்றைக்கு அவர்கள் அதை நிரூபிக்க நினைக்கிறார்கள். எங்களை அச்சம் ஏற்படுத்த நினைக்கிறார்கள். ஒருபொழுதும் எஸ்டிபிஐ கட்சி இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு நாங்கள் அச்சமடைய மாட்டோம். மக்களுக்காக எங்களது போராட்டம் எப்பொழுது தொடர்ந்து நடக்கும். என்ஐஏவினுடைய முகத்திரை என்ன என்பதை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் எஸ்டிபிஐ கட்சி கிழித்தெரியும். இந்த தருணத்தில் பாஜகவிற்கு எதிராக ஒரு அணி அமையவிடாமல் எவ்வாறு தடுக்கிறதோ அதுபோல முஸ்லிம்கள் என்று சொன்னால் சிறுபான்மை மக்கள் என்று சொன்னால் அவர்களை என்ஐஏ மூலமாக முடக்க நினைக்கிறார்கள். எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. காட்டி இருந்தால் இன்றைக்கு மக்கள் மன்றத்தில் மீடியாவிற்கு முன்பு காட்டுவதில் எங்களுக்கு எந்த விதமான தயக்கமும் இல்லை. எதையும் காட்டவில்லை, எதையும் எடுக்கவில்லை. ஏமாற்றத்தோடு வெறுங்கையோடு திரும்பி சென்றார்கள்.
இன்று தேசிய பலனாய்வு பிரிவு தஞ்சாவூரில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக துளியும் சம்பந்தமில்லாத எங்களிடம் விசாரணை நடத்த வந்துள்ளது. அன்றிலிருந்து இன்று வரை அந்த கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று நாங்களும் போராடி வருகிறோம். தமிழ்நாட்டில் காவல்துறை என்று சொன்னால் எல்லா மதத்தினருக்கும், எல்லா ஜாதியினருக்கும் தமிழக காவல்துறை இருக்கிறது. ஆனால் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு என்று சொன்னால் எந்த காவல்துறையும் கிடையாது. எங்களுக்கு என்ஐஏ வழிகாட்டுதலில் தான் மொத்த காவல்துறையும் இயங்குகிறது என்கிற செய்திகள் வருகிறது.
எனவே தமிழக முதல்வர் நடைபெறுகிற மாபெரும் அத்துமீறலில் ஈடிக்கும் பயப்பட மாட்டேன், மோடிக்கும் பயப்பட மாட்டேன் என்று சொல்வதை போல என்ஐஏ உடைய அராஜகத்தை, தமிழ்நாட்டில் நடத்துகின்ற சிறுபான்மை விரோத போக்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை தமிழக முதல்வருக்கு இருக்கிறது. மக்கள் மன்றத்தில் பாஜகவிற்கு எதிராக ஒன்றிய அரசுக்கு எதிராக வெறுப்புணர்வை ஊட்டும் என்பதை கூட தெரியாத நிலையில் இந்த வெறுப்பு பிரச்சாரத்தை எடுத்து செல்கிறார்கள். நீதிமன்றத்தில் நாங்கள் இதை முறியடிப்போம் சட்டப்பூர்வமான முறையில் எஸ்டிபிஐ மீது இன்றைக்கு ரைடு என்ற பெயரில் எஸ்டிபிஐ பெயரை கெடுக்க நினைக்கிற சக்திகளை நீதிமன்றத்திற்கு முன்பு நிறுத்தி எஸ்டிபிஐ தோலுரிக்கும் என்றார்.