மேலும் அறிய

Murasoli: சுய விளம்பரம் தேடி தேவையற்ற விவகாரங்களில் தலையிடுகிறார்.. ஆளுநர் மீது முரசொலி கடும் விமர்சனம்

ஆளுநரின் பருப்புகள் தமிழ்நாட்டில் வேகாது என முரசொலி நாளேடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சிலந்தி பகுதியில் கட்டுரை வெளியிட்டு கடும் விமர்சனத்தை பதிவு செய்துள்ளது.

ஆளுநரின் பருப்புகள் தமிழ்நாட்டில் வேகாது என முரசொலி நாளேடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சிலந்தி பகுதியில் கட்டுரை வெளியிட்டு கடும் விமர்சனத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து வெளியான கட்டுரையில், “தானும் எந்த வேலையும் செய்யாமல், வேலை செய்கிறவர்களையும் தடுத்திடும் சில ஜென்மங்கள் குறித்து இந்தப் பழமொழி கூறப்பட்டது! தமிழ்நாட்டுக்கு ஆளுநர் என்ற பெயரில் ஒரு ‘சுகஜீவி' நியமிக்கப்பட்டு அவர் இப்போது செய்து கொண்டிருக்கும் பணி இத்தகையதுதான்!

'சுக்ரயோகம்' என்பார்களே அது போன்ற யோகக்காரர்கள் இந்தியா வின் ஆளுநர்கள்! நமது தமிழ்நாட்டு ஆளுநர் ரவியையே எடுத்துக் கொள் ளுங்களேன்!

அவர் சென்னை கிண்டியில் வசிக்கும் ராஜ்பவன் 156 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. இதுதவிர, ஊட்டி யிலும் 86.72 ஏக்கரில் ராஜ்பவன் அமைந்துள்ளது! சென்னையில் சுட்டெரிக்கும் வெயிலா? ஆளுநர் சுகவாசம் தேடி அங்கே புறப்பட்டு விடுவார்! அவருக் கென்ன? யார் கும்பி எரிந்தால் என்ன, குடல் கருகினால் என்ன, அவருக்கு தேவை 'குளுகுளு' வாசம்! கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்காளாகினால் என்ன? தமிழ்நாட்டு பயணிகள் நிலை என்ன ஆனால் என்ன? அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப் பட்டதாகவேத் தெரியவில்லை!

கடந்த ஜூன் 2-ந் தேதி இரவு நாட்டையே குலுக்கிய ரயில் விபத்து ஒரிசாவில் நடந்துள்ளது! சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் மோதி அந்தப் பகுதி எங்கும் மரண ஓலம் கேட்கிறது என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நாடே அதிர்ச்சியில் உறைந்துள்ளது!

தமிழ்நாட்டு முதல்வர் செய்தி கேட்டு துடித்து உடனடியாக விபத்து பகுதிக்கு அமைச்சர்களை அனுப்புகிறார். நிவாரணப் பணிகள் எப்படி நடக்கின்றன என்பதை வினாடிக்கு வினாடி 'வார் ரூம்' மோடு தொடர்பு கொண்டு அறிந்து கொள்கிறார்!

ஒரிசா முதல்வர் காலையில் விபத்து நடந்த இடத்துக்கு விரைகிறார்: ஏன் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் விரைகின்றனர்! நிமிடத்துக்கு நிமிடம் விபத்தில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதிர்ச்சி செய்திகள் வருகின்றன! படுகாயமுற்று கதறி அழுவோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டேயிருக்கிறது!

தமிழ்நாட்டில் கலைஞரின் நூற்றாண்டு விழா தொடக்கத்தை வெகு விமரிசையாகக் கொண்டாட எண்ணி அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நாடு முழுவதும் நடந்து முடிந்திருந்த நிலையிலும், அவைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக கழகத் தலைவர் தளபதி அறிவிக்கிறார்!

ஆனால் தமிழ்நாட்டு ஆளுநர் திட்டமிட்டபடி, நடந்த எது குறித்தும் கவலைப்படாது. ஜூன் 3-ந் தேதி குளுகுளு வாசஸ்தலத்திற்கு பயணப்பட்டு, அங்கு துணை வேந்தர்களை அழைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை அழைத்து, தனது அறிவாற்றலைக் காட்டுவதாக நினைத்து அறிவிலித்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்!

Your excellancy, அதாவது மேன்மை பொருந்திய ஆளுநர் என்றெல்லாம் ஆளுநர் அழைக்கப்பட்ட காலத்தை எண்ணிப் பாருங்கள்! அந்த ஆளுநர் கள் அரசியல் சட்டம் தங்களுக்குத் தந்த பணிகளுக்குள் சுழன்றவர்கள்! எல்லை மீறாதவர்கள்!

இன்றைய தமிழ்நாட்டு ஆளுநர் ரவியைப் போல எத்தனை சூடுபட்டாலும் 'திருந்தாத ஜென்மங்கள் அல்ல!' - என்ன பேசுகிறோம்; இதன் விளைவுகள் எங்கே போய் முடியும்? - என்பதை எல்லாம் சிந்திக்காது செயல்படுவது மட்டுமின்றி, தனக்குத் தோன்றியதை எல்லாம் பேசி வகிக்கும் பதவியின் பெருமையை சீரழித்தவர்கள் அல்ல!

தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை அழைத்து அவர்களிடம் தனது அறிவாற்றலைக் காட்டு வதாக நினைத்து. தான் ஒரு 'Half boiled', அதாவது பாதி வெந்தவர் என்பதை ஆளுநர் ரவி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்!

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசப் போவதாக அறிவித்து, துணைவேந்தர்களுக்கு சம்பந்தமில்லாத தொழில் முதலீடுகளைப் பற்றி பேசி தனது முதிர்ச் சியற்ற அறிவை வெளிப்படுத்தியுள்ளார்!

"நாம் கேட்பதாலோ, வெளிநாடு சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது" - என்று பேசி அவலை நினைத்து உரலை இடித்துள்ளார்! ஆம்: தமிழ்நாடு முதல்வரை நினைத்து பிரதமர் மோடியை இடித்துள்ளார்!

"PM. Modi meets prominent Australian business leaders in Sydney: | invites investment in India" பிரதமர் மோடி 2023ஆம் ஆண்டு மே மாதம் 23-ந் தேதி ஆஸ்திரேலியாவின், முன்னணி கம்பெனிகளின் தொழிற்துறை தலைவர்களைச் சந்தித்து இந்தியாவில் தொழில் துவங்க அழைப்பு விடுத்தார்.

"PM.Modi meets Japanese business leaders. discusses invest ment opportunities in India"

'ஜப்பான் சென்ற பிரதமர் மோடி ஜப்பானின் வர்த்தகத் தலைவர் களைச் சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்யவுள்ள வாய்ப்புகள் குறித்து விவாதித்தார்.'இப்படி ஏடுகளில் செய்திகள் வந் ததை ஆளுநர் ரவி படித்திருப்பார் என்றே கருதுகிறோம்!

ஆளுநர் ரவி பல நேரங்களில், தான் என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஆப்பசைத்த குரங்காய்' அகப்பட்டுக் கொள்கிறார்! தன்னால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள், தான் என்ன பேசினாலும் அதனை ஏற்றுக் கொள்ளுவார்கள் என்ற எண்ணத்தில் ரவி அவர்களிடையே பேசினாலும், அதில் காணப்படும் அறிவிலித்தனத்தை அங்கு வந்த துணைவேந்தர்களில் சிலர் உணர்ந்தே இருப்பர்!

'விருதுபட்டி சனியனை விலை கொடுத்து வாங்குவது' - எனப் பழமொழி கூறுவார்களே. அதுபோல வேண்டாத விவகாரங்களில் தலையிட்டு 'சனியனை' விலைகொடுத்து வாங்குவதில் ஆளுநர் ரவிக்கு பல நேரங்களில் ஒரு அற்ப சந்தோசம்! சுய விளம்பரம் தேடி தேவையற்ற விவகாரங்களில் தலையிட்டு பல நேரங்களில் வாலறுந்த நரியாக ஆனாலும் அவர் பாடம் பெறுவதில்லை! மீண்டும் மீண்டும் வாலை நுழைத்து ஆழம்பார்க்கிறார்! அவருக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறோம்; இது தமிழ்நாடு! ஆளுவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! இங்கு இவரது கருத்துகள் எடுபடாது!” என குறிப்பிட்டு இருந்தது. 

(குறிப்பு:முரசொலி நாளிதழின் உள்ளடக்கம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
DELHI CM: டெல்லி முதலமைச்சர்  ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர் ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
US Indian Immigrants: 3வது பேட்ச்சை அனுப்பிய அமெரிக்கா..! மொத்தம் 112 இந்தியர்கள், குஜராத்திகள் இத்தனை பேரா?
US Indian Immigrants: 3வது பேட்ச்சை அனுப்பிய அமெரிக்கா..! மொத்தம் 112 இந்தியர்கள், குஜராத்திகள் இத்தனை பேரா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
DELHI CM: டெல்லி முதலமைச்சர்  ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர் ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
US Indian Immigrants: 3வது பேட்ச்சை அனுப்பிய அமெரிக்கா..! மொத்தம் 112 இந்தியர்கள், குஜராத்திகள் இத்தனை பேரா?
US Indian Immigrants: 3வது பேட்ச்சை அனுப்பிய அமெரிக்கா..! மொத்தம் 112 இந்தியர்கள், குஜராத்திகள் இத்தனை பேரா?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.