முடிவுக்கு வந்ததா கரூர் அரசியல் மல்லுக்கட்டு? - ஒரே மேடையில் செந்தில் பாலாஜியும் ஜோதிமணியும்
அழைப்பிதழில் தனது பெயர் இல்லாதபோதிலும் ஜோதிமணி கலந்து கொண்ட நிலையில், தலமையின் அழுத்தம் காரணமாகவே ஜோதிமணி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது
கரூரில் தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட நிர்வாகம் சார்பாக தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒன்றாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சிகாக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கலுக்கு இன்னும் 23 நாட்கள் - ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் காளைகள்
கடந்த மாதம் 25ஆம் தேதி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து மறுநாள் மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அப்போராட்டத்தை முடித்து கொண்டார். அதை தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கும் ஜோதிமணிக்கும் இடையே உரசல் இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வந்தது.
MSME நிறுவனங்கள் போராட்டம் எதிரொலி - நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்த மதுரை எம்.பி
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு சிறப்பு முகாமில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருந்தது சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படியாக இருந்தது. அருகருகே அமர்ந்திருந்தாலும் ஒருவரையொருவர் முகம் கொடுத்து பேசவில்லை, தலைமையின் அழுத்தம் காரணமாகவே மாவட்ட நிர்வாகத்தின் நிகழ்ச்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டிருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த வாரத்தில் நிலக்கரி ஒதுக்கீட்டு தொடர்பாக மத்திய மின்சாரத்துறை அமைச்சரை சந்தித்து பேச டெல்லி சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி, பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனுவை வழங்கினார். இந்த தகவலை சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணிக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது சக எம்பிகள் தங்களது மாநில அமைச்சர் டெல்லி வந்திருப்பதால் தாங்கள் அவரை அழைத்து பேசலாமே என்று கூறியுள்ளனர். உடனே கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நிலையில் பணியின் காரணமாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அலைபேசி எடுக்கவில்லை எனவும், குறுஞ்செய்தி அனுப்பியும் அவர் அதனை பார்க்கவில்லை எனவும் கூறப்படுகிறது.