‛சிவி சண்முகம் ஒரு காட்டுமிராண்டி... மைக்கை கடித்து குதறினார்...’ அமைச்சர் பெரிய கருப்பன் தாக்கு!
‛‛வீதிகளில் பேச கூடியவர்கள் போல் நாலாந்தரமாக நடந்து கொண்டார் என்றால், அது எப்படி பட்ட இயக்கம்?’’ -அமைச்சர் பேச்சு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொன்னக்குளம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி உட்பட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பேசும் போது,
‛‛இன்றைக்கு கூட எதிர்கட்சியினர் அவர்களுக்குள்ளே இருக்க கூடிய கோஷ்டி பூசல் மற்றும் சண்டையில் கூட திமுக ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக பேசுகிறார்கள். பொதுக்குழு தொடங்குவதற்கு முன்பே சிவி சண்முகம் காட்டு மிராண்டியை போல மைக்கை பிடித்து, மைக்கை கடித்து குதறுவதைப் போல், வீதிகளில் பேச கூடியவர்கள் போல் நாலாந்தரமாக நடந்து கொண்டார் என்றால், அது எப்படி பட்ட இயக்கம்?
அவர்களுக்கு இந்த நாட்டை பற்றி கவலை இல்லை. மக்களை பற்றி கவலை இல்லை,அவர்களுடைய எண்ணம் எல்லாம் எப்படியாவது மீண்டும் வந்து இந்த நாட்டை கொள்ளை அடிக்க வேண்டும் என்ற நோக்கதோடு இருக்க கூடிய ஒரு இயக்கம் அதிமுக, எப்படி அண்ணா இறந்த பிறகு திமுக காலி ஆகி விடும் என்று நினைத்தார்களோ,அது எப்படி பொய்ப்பிக்க பட்டதோ கலைஞர் அவர்களால்,அதே போல் கலைஞர் மறைவிற்கு பிறகு திமுக வில் பிரச்சனைகள் வரும் என்று நினைத்தார்கள்.எதிர் பார்த்தவற்கள் எமார்ந்து விட்டார்கள்,. இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி போல் அண்ணாவை போல் தமிழ்நாட்டு மக்களுக்கு நல் வாழ்க்கையை தந்து கொண்டிருக்கிறார் என்பதை நினைக்கையில் அவர்களுக்கு பொறாமை.
அந்த பொறாமையின் உச்சத்திலே தான் பொதுக்குழுவை கூட்டி, அவர்களே அடித்து கொள்கிறார்கள். மக்களுக்காக இருக்கக்கூடிய ஒரு இயக்கம், தமிழ் இனத்திற்காக மொழிக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டிருக்க கூடிய கடமை கண்ணியம் கட்டுப்பாடு மிக்க இயக்கமாக திமுக இருக்கிறது. 50 ஆண்டுகாலம் எந்த ஒரு தலைவரும் செய்திராத சாதனையை கலைஞர் கருணாநிதி அவர்கள் படைத்திருக்கிறார்,’’
என்று அமைச்சர் பெரிய கருப்பன் பேசியுள்ளார்.