மேலும் அறிய

‛மதிமுகவில் என்னை மீறி காரியங்கள் நடக்கிறது...’ -வைகோ அதிர்ச்சி பேட்டி!

‛என் மகன் வந்து விடக்கூடாது என்பதற்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சித்துப் பார்த்தேன். அதை மீறி இப்பொழுது காரியங்கள் நடக்கின்றன’- வைகோ

சில குடும்பங்களில் வாரிசுகளை அரசியலுக்கு கொண்டுவர திட்டமிட்டு வருவதாகவும்,  தொண்டர்கள் விருப்பம் எதுவோ அது ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும் என்று தனது மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவது குறித்து  வைகோ பேட்டி.

                                   ‛மதிமுகவில் என்னை மீறி காரியங்கள் நடக்கிறது...’ -வைகோ அதிர்ச்சி பேட்டி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நாகலாபுரம்  அருகே உள்ள சங்கரலிங்க புரத்தைச் சேர்ந்த மதிமுக நிர்வாகி எரிமலை வரதன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு சென்ற மதிமுக பொதுச் செயலர் வைகோ, மறைந்த எரிமலை வரதன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‛‛ பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பெங்களூரில் காவல்துறை அதிகாரியாக இருந்தவர்.இன்னும் அதே போலீஸ் பார்வையில் தான் பேசி வருகிறார். அரசியல் கொள்கை பற்றி அவருக்கு தெரியாது.

                                     ‛மதிமுகவில் என்னை மீறி காரியங்கள் நடக்கிறது...’ -வைகோ அதிர்ச்சி பேட்டி!
குஜராத்தில் அதானி துறைமுகத்திலிருந்து  போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் இதுவரை பாஜக தலைவர்கள் எந்த ஒரு பதிலும் கூறவில்லை; அவர்களே குற்றச்சாட்டில் இருக்கும் போது அவர்கள் எப்படி பதில் கூற முடியும். கொரோனா தடுப்பு நடவடிக்கையில்  இந்தியாவிற்க்கே  வழிகாட்டியாக தமிழகம் இருக்கிறது.

                                ‛மதிமுகவில் என்னை மீறி காரியங்கள் நடக்கிறது...’ -வைகோ அதிர்ச்சி பேட்டி!
இரண்டு ஆண்டு காலமாக எனக்கே தெரியாமல் கட்சிக்காரர் வீடுகளுக்கு, சுப நிகழ்ச்சி,துக்க நிகழ்ச்சிகளுக்கு துரைவையாபுரி சென்று  வந்தார்.கட்சியை சேர்ந்தவர்களுக்கு உடல்நலக் குறைவு என தகவல் கேட்டாலும் சென்று வந்தார். சிகிச்சைக்கு உதவி செய்து வந்துள்ளார்.இது எனக்கு தெரியாது.அதன்பின்னர் திருமண வீடுகளில் அவரது படத்தை சுவரொட்டிகள் போடக்கூடாது என அவர்களிடம் சொன்னேன். மாநாட்டு பந்தலில் அவர் படம் போடக்கூடாது என கூறினேன். அப்படி போடப்பட்டிருந்ததை அகற்றச் சொல்லி இருக்கிறேன். இதே செயலில் நிர்வாகிகள் ஈடுபட்டால் கட்சியை விட்டு நீக்கவும் தயங்க மாட்டேன் என்றேன். நான் அவரை ஊக்குவிக்கவில்லை. சில குடும்பங்களில் வாரிசுகளை அரசியலில் புகுத்துகின்றனர். சிலர் அவர்களை கொண்டு வரவேண்டும் என்று அரசியலில் திட்டமிட்டு செய்கிறார்கள்.நான் அவரை ஊக்குவிக்கவில்லை அதே நேரத்தில் வந்து விடக்கூடாது என்று தடுப்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சித்துப் பார்த்தேன் .அதை மீறி இப்பொழுது காரியங்கள் நடக்கின்றன. என்னை மீறி தொண்டர்கள் எங்களுக்கு வழிகாட்ட நல்ல ஒரு வழிகாட்டி வேண்டும் அதற்கு எல்லா தகுதியும் துரை வையாபுரியிடம் இருக்கு என அழைத்துக் கொண்டு போகின்றனர். இக்கட்சி தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. தொண்டர்கள் விருப்பம் எதுவோ அது ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும் என்றார்.
ஜனநாயக முறைப்படி கட்சியில் துரை வையாபுரி தேர்ந்தெடுக்கப்படுவாரா என்றால், யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. அதை நிராகரிக்கவும் முடியும் என்றார். நீட் தேர்வில் தற்கொலை செய்து கொண்டவர்கள் இழப்பீடு வழங்கக்கோரி நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளனர் என்ற கேள்விக்கு , இந்த மாதிரி வழக்கு  தொடுப்பதற்க்காவே  சிலர் நீதிமன்றத்தில் இருக்கின்றனர் அவர்கள் குறித்து பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: தமிழ்நாட்டில் ரூபாய் 10 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு - ஆளுநர் உரையில் சபாநாயகர் தகவல்
TN Assembly Session LIVE: தமிழ்நாட்டில் ரூபாய் 10 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு - ஆளுநர் உரையில் சபாநாயகர் தகவல்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: தமிழ்நாட்டில் ரூபாய் 10 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு - ஆளுநர் உரையில் சபாநாயகர் தகவல்
TN Assembly Session LIVE: தமிழ்நாட்டில் ரூபாய் 10 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு - ஆளுநர் உரையில் சபாநாயகர் தகவல்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன ஆச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன ஆச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
Embed widget