மேலும் அறிய

"நாங்கள் வாக்கு வங்கி கட்சியும் அல்ல; ஆட்சிக்கு ஆசைப்பட்டதும் இல்லை!" - மயிலாடுதுறையில் வைகோ அதிரடி பேச்சு..

நாங்கள் பெரிய வாக்கு வங்கியைப் பின்னணியாகக் கொண்ட கட்சி என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. அதேபோல், எந்தக் காலத்திலும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று முழங்கியதும் இல்லை," என வைகோ தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பது பெரிய வாக்கு வங்கியைப் பின்னணியாகக் கொண்ட கட்சி என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. அதேபோல், எந்தக் காலத்திலும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று முழங்கியதும் இல்லை," என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட வைகோ, தொண்டர்களின் 'வருங்கால முதல்வர்' கோஷத்தைக் கண்டித்ததோடு, பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் குறித்தும் தனது கண்டனங்களைப் பதிவு செய்தார்.

தொண்டரின் கோஷமும் வைகோவின் உடனடி மறுப்பும்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மதிமுக பேரூர் செயலாளர் கருணாநிதி இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வைகோ, மணமக்களை வாழ்த்திப் பேசினார். அவர் மேடைக்கு வந்தபோது, உற்சாகமடைந்த தொண்டர் ஒருவர், "வருங்கால முதலமைச்சரே வாழ்க!" என உரக்க முழக்கமிட்டார்.இதனை உடனடியாகக் கண்டித்த வைகோ, தனது உரையிலும் அதனை குறிப்பிட்டு பேசினார்;

"தயவுசெய்து இத்தோடு உங்களது முழக்கத்தை நிறுத்திக்கொள்ளுங்கள்.

நான் திருமண மண்டபத்திற்குள் நுழையும்போது ஒருவர் 'வருங்கால முதல்வர்' என முழக்கமிட்டார். இது எனக்குத் தேவையில்லாத ஒன்று. கட்சி தொடங்கிய காலத்திலேயே இத்தகைய கோஷங்களை நான் தடுத்து நிறுத்திவிட்டேன். இப்போதும் சொல்கிறேன், எங்களுக்கு அத்தகைய ஆசை ஏதுமில்லை."

யதார்த்த அரசியல்: "நாங்கள் வாக்கு வங்கி கட்சி அல்ல"

தொடர்ந்து பேசிய அவர், கட்சியின் தற்போதைய நிலை மற்றும் அரசியல் பயணம் குறித்து எதார்த்தமான கருத்துக்களை முன்வைத்தார். "மதிமுக ஒரு மிகப்பெரிய வாக்கு வங்கியைத் தன்வசம் வைத்திருக்கும் கட்சி என்று நான் என்றுமே தம்பட்டம் அடித்ததில்லை. அதேபோல், ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் அரசியல் செய்யவில்லை. லட்சியங்களுக்காகவும், மக்களுக்காகவும் மட்டுமே எங்களது பயணம் தொடர்கிறது," என உருக்கமாகப் தெரிவித்தார்.

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்: கடும் கண்டனம்

திருமண விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகோவிடம், தனியார் தொலைக்காட்சி (நியூஸ் தமிழ்) செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்:

ஜனநாயகத்தின் தூண்கள்: "பத்திரிகையாளர்கள்

இந்த ஜனநாயகத்தின் விழிகளாகவும், செவிகளாகவும் செயல்படுபவர்கள். அவர்கள் மீது கை வைப்பது அநாகரிகமானது. செய்தியாளர்களைத் தாக்குவது என்பது மிகப்பெரிய அக்கிரமம். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைக் காவல்துறை உடனடியாகக் கண்டறிந்து, கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பதில் சொல்லாத 'ஆட்சியில் பங்கு' கேள்வி

சமீபகாலமாகத் தமிழக அரசியலில் 'ஆட்சியில் பங்கு' என்ற விவாதம் பெரும் பேசுபொருளாகி வருகிறது. இது குறித்துச் செய்தியாளர்கள் வைகோவிடம் கேள்வி எழுப்பினர். "திமுக கூட்டணியில் நீடிக்கும் நீங்கள், ஆட்சியில் பங்கு என்பது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?" எனப் பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

இருப்பினும், இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க விரும்பாத வைகோ, மௌனம் காத்தபடி சட்டெனத் தனது காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார். 'ஆட்சிக்கு வரத் துடிக்கவில்லை' என்று மேடையில் பேசியவர், 'ஆட்சியில் பங்கு' குறித்த கேள்விக்குத் தவிர்ப்பு காட்டியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CV Shanmugam: சிவி சண்முகம் சொன்ன அந்த ஒரு வார்த்தை! இபிஎஸ்-ஐ நிம்மதி மூச்சு விட வைத்ததா?
CV Shanmugam: சிவி சண்முகம் சொன்ன அந்த ஒரு வார்த்தை! இபிஎஸ்-ஐ நிம்மதி மூச்சு விட வைத்ததா?
தேர்தல் தோல்விக்கு காங்கிரஸைக் குறை சொல்லக் கூடாது; திமுக சுயபரிசோதனை செய்ய வேண்டும்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்டம்!
தேர்தல் தோல்விக்கு காங்கிரஸைக் குறை சொல்லக் கூடாது; திமுக சுயபரிசோதனை செய்ய வேண்டும்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்டம்!
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Toyota Urban Cruiser Ebella: எபெல்லா வந்தாச்சு..! இ-விட்டாரா தாங்குமா? டொயோட்டா EV-யின் விலை, அம்சங்கள், வசதிகள்
எபெல்லா வந்தாச்சு..! இ-விட்டாரா தாங்குமா? டொயோட்டா EV-யின் விலை, அம்சங்கள், வசதிகள்
Minister Ramesh: திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
Normal vs Power Petrol: நார்மல் பெட்ரோலா.? பவர் பெட்ரோலா.? உங்கள் கார், பைக்கிற்கு சிறந்தது எது.? தெரிஞ்சுக்கோங்க
நார்மல் பெட்ரோலா.? பவர் பெட்ரோலா.? உங்கள் கார், பைக்கிற்கு சிறந்தது எது.? தெரிஞ்சுக்கோங்க
Tata Tiago Petrol Vs CNG: வரிசைகட்டிய புதிய டாடா டியாகோ கார்கள்; சிறந்த தேர்வு பெட்ரோலா.? சிஎன்ஜி-ஆ.? வாங்க பார்க்கலாம்
வரிசைகட்டிய புதிய டாடா டியாகோ கார்கள்; சிறந்த தேர்வு பெட்ரோலா.? சிஎன்ஜி-ஆ.? வாங்க பார்க்கலாம்
Embed widget