மேலும் அறிய

இனி எந்த கட்சி சின்னத்திலும் போட்டி இல்லை.! சொந்த சின்னத்தில் தான் போட்டி- மமக அதிரடி

திமுக கூட்டணியில் இடம்பிடித்திருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள நிலையில், இனி தனி சின்னத்தில் தான் தேர்தலில் போட்டியிடுவோம் என மனித நேய மக்கள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தவெக அமைச்சரவையில் திமுக கூட்டணி கட்சிகள்

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பிடித்திருந்த கூட்டணி கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளது. குறிப்பாக திமுக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் தலா இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே நேரம் மனித நேய மக்கள் கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது. அந்த வகையில் தனி சின்னத்தில் போட்டியிடாமல் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் தவெகவிற்கு ஆதரவளிக்க முடியாத நிலையானது ஏற்பட்டுள்ளது. 

இனி வேறு கட்சி சின்னத்தில் போட்டியில்லை

இந்த நிலையில் இனி வரும் தேர்தல்களில் தனி சின்னத்தில் தான் போட்டியிட போவதாக மனித மேய மக்கள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த வகையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகள் மற்றும் தலைமை பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் கட்சி தலைவர் பேராசிரியர்,எம் எச்.ஜவாஹிருல்லா தலைமையில் மே,20,21  ஆகிய இரு நாட்கள் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

தீர்மானங்கள் என்ன.?

1. நடைப்பெற்று முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு  தமிழகம் முழுவதும் அயராது உழைத்த மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் தலைமை நிர்வாக குழு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
2. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட நாகப்பட்டினம்,மணப்பாறை ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை செய்த திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கும்,மனிதநேய மக்கள் கட்சியி மற்றும் தமுமுகவின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் தலைமை நிர்வாக குழு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.


3. புதியதாக பொறுப்பேற்றுள்ள திரு.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக  அரசுக்கு நல் வாழ்த்துக்களை  இந் நிர்வாக குழு தெரிவிக்கின்றது.
4. புதியதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தமிழ்நாட்டை  வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும் மென்றும் முந்தைய திமு க அரசு செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை தொடர வேண்டும் மென்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளை பேணி பாதுகாக்க வேண்டுமென்று இந் நிர்வாக குழு கேட்டுக் கொள்கிறது.
5,மனிதநேய மக்கள் கட்சி இனி வரும் காலங்களில் நடைபெறும் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிடுவதென்று தீர்மானிக்கபட்டது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
முதல்வர் விஜய் அமல்படுத்திய போட்டி டெண்டர் முறை... ஒரே டெண்டரில் ரூ.9 லட்சம் மிச்சப்படுத்திய சென்னை மாநகராட்சி!
முதல்வர் விஜய் அமல்படுத்திய போட்டி டெண்டர் முறை... ஒரே டெண்டரில் ரூ.9 லட்சம் மிச்சப்படுத்திய சென்னை மாநகராட்சி!
WRD Department : ’திமுக ஆட்சியில் நீர்வளத்துறையிலும் Party Fund?’ தீவிர விசாரணை ; சிக்கும் அதிகாரிகள்!
’நீர்வளத்துறையிலும் Party Fund’ தீவிர விசாரணை ; சிக்கும் அதிகாரிகள்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
Embed widget