மேலும் அறிய
தூத்துக்குடி-மீள் விட்டான்: நவீன சிக்னல் சிஸ்டம் மூலம் ரயில் சேவை அப்டேட்.. பாதுகாப்பும் வேகமும் அதிகரிப்பு!
சரக்கு ரயில் பெட்டிகளை பராமரிக்க தனி ரயில் பாதையும் சரக்குகளை கையாளும் பகுதியில் காங்கிரீட் தரைதளமும் அமைக்கப்படுள்ளன.

மீள் விட்டான்
Source : whatsapp
தூத்துக்குடி மற்றும் மீள் விட்டான் ரயில் நிலையங்களில் நவீன சிக்னல் சிஸ்டம் அறிமுகம்.
தூத்துக்குடி - மீள் விட்டான் இடையேயான ரயில் நிலையங்கள்
தூத்துக்குடி - மீள் விட்டான் ரயில் நிலையங்கள் இடையே இரட்டை ரயில் பாதை போக்குவரத்தை நடைமுறைப்படுத்த டிசம்பர் 15 அன்று துவங்கிய ரயில் நிலைய ரயில் பாதைகளின் மறு சீரமைப்பு பணிகள் டிசம்பர் 23 அன்று நிறைவு பெற்றது. அன்றே மதுரை கோட்டத்தில் முதன்முறையாக புதிய நவீன 'இன்டர் லாக்கிங் சிக்னல் சிஸ்டம்' நடைமுறைக்கு வந்தது. கணிப்பொறி கட்டுப்பாட்டில் உள்ள இந்த புதிய சிக்னல் அமைப்பு ரயில்களை பாதுகாப்பாகவும் எளிதாகவும் கையாள உதவும். மேலும் நீளமான ரயில்களை கையாள 532 மீட்டர் நீளம் கொண்ட முதல் நடைமேடை 595 மீட்டராக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தனி ரயில் பாதைகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
22 'எல்எச்பி' ரயில் பெட்டிகள் கொண்ட ரயில்களை பராமரிக்க நடைமேடையில்லாமல் ரயில்கள் நிறுத்தும் ரயில் பாதைகள் மற்றும் ரயில் பெட்டி பராமரிப்பு ரயில் பாதைகளும் வேண்டிய அளவு நீட்டிக்கப்பட்டுள்ளன. ரயில் இன்ஜின்கள் ரயிலின் முன்புறத்தில் இருந்து பின்புறத்திற்கு எளிதாக சென்று வர தனி ரயில் பாதைகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஒரு பெட்டி கொண்ட மின்மய பராமரிப்பு ரயில் நிறுத்த தனி ரயில் பாதையுடன் கூடிய சிறு கூடாரம் மற்றும் கடவுப்பாதை மேம்பாடு ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதிய 750 மீட்டர் நீள தனி ரயில் பாதையும் அமைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் டிசம்பர் 7 அன்று மீளவிட்டான் ரயில் நிலையத்திலும் துவங்கி டிசம்பர் 23 அன்று நிறைவு பெற்றது. கூடுதலாக ரயில் பாதை பராமரிப்பு இயந்திர ரயில் நிறுத்த தனி ரயில் பாதையும், பயணிகள் ரயில் பாதையை பயன்படுத்துவதை தவிர்க்க சரக்கு ரயில் பெட்டிகளை ஒருங்கிணைக்க புதிய 750 மீட்டர் நீள தனி ரயில் பாதையும் அமைக்கப்பட்டுள்ளன. சரக்கு ரயில் பெட்டிகளை பராமரிக்க தனி ரயில் பாதையும் சரக்குகளை கையாளும் பகுதியில் காங்கிரீட் தரைதளமும் அமைக்கப்படுள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















