மேலும் அறிய
மதுரை த.வெ.க., - எம்.எல்.ஏ.,வை திணறடித்த முதியவர்: 6 சிலிண்டர் எங்கே? - என கேள்வி எழுப்பினார் !
முதியவர் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தது பார்த்த தவெக தொண்டர்கள், "கடந்த ஆட்சியில் ஏன் கேட்கல இப்ப வந்து கேக்குறீங்க" - என கூறியபடி முதியவரை அங்கிருந்து வெளியேற்றினர்.

6 சிலிண்டர் மறக்காதீங்க சார்
Source : whatsapp
அதுலாம் இருக்கட்டும் சார் ஆறு சிலிண்டர மறந்துராதிங் சார், பேரன் பேத்தி சொல்லி தவெகவுக்கு ஓட்டு போட்ருக்கேன் 6 சிலிண்டர் எப்ப தருவங்க, 2500 எப்ப தருவங்க - கிழக்கு தொகுதி எம்எல்ஏவை பேசவிடாமல் அடம்பிடித்து கேள்வி எழுப்பிகொண்டே இருந்த முதியவர் - டென்சனான தவெக தொண்டர்களால் பரபரப்பு.
6 சிலிண்டர் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என அனைத்து திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும்
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனையூர் பகுதியில் 3ஆவது வட்டக் கழக சார்பில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு பிரியாணி விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கிழக்கு தொகுதி தவெக எம்எல்ஏ கார்த்திகேயன் ஆட்சி குறித்தும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்தின் முன்பாக நின்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் 2500 ரூபாய் எப்ப தருவாங்க ரெண்டு ரூபா எப்ப தருவீங்கன்னு கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனாலும் தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ., 6 சிலிண்டர் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என அனைத்து திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும் என பேசிக்கொண்டு இருந்தார்
முதியவர் மீண்டும் 6 சிலிண்டர்கள் எப்ப தருவீங்க சார் என எம்எல்ஏ பார்த்து கேட்க தொடங்கினார்.
அப்போது அதே முதியவர் மீண்டும் 6 சிலிண்டர்கள் எப்ப தருவீங்க சார் என எம்எல்ஏ பார்த்து கேட்க தொடங்கினார். ஆனாலும் அவரை கண்டுகொள்ளாமல் பேசிய எம்.எல்.ஏ., மேலும் 20 ஆண்டுகள் நிரந்தர முதலமைச்சராக விஜய் இருப்பார் என கூறியபோது அதெல்லாம் இருக்கட்டும் சார் எப்போ 6 சிலிண்டர் தருவீங்க என தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தார்.
என் பேரன் பேத்தி சொல்லி உங்களுக்கு ஓட்டு போட்டுட்டேன்
நான் என் பேரன் பேத்தி சொல்லி உங்களுக்கு ஓட்டு போட்டுட்டேன். 6 சிலிண்டர் எனக்கு வேணும் என குழந்தைபோல கேட்டு அடம்பிடித்து எம்எல்ஏவிடம் கேட்க அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முதியவர் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தது பார்த்த தவெக தொண்டர்கள், கடந்த ஆட்சியில் ஏன் கேட்கல இப்ப வந்து கேக்குறீங்க என கூறியபடி முதியவரை அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Before You Go
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















