மேலும் அறிய

அதிமுகவில் என்ன பிரச்னை? உட்கட்சி முரண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள் - திருமாவளவன் !

தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவித இடையிலும் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கும் என்பதை நாங்கள் பெரிதும் நம்புகிறேன் - திருமாவளவன்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால் அதிமுகவிற்குள் நிகழும் உட்கட்சி முரண்கள் என்ன? என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும், அது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் - திருமாவளவன் பேட்டி.

திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியார் தங்கு விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன் :
 
தவெக ஆட்சி தொடராது என ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்விக்கு
 
அவர் எந்த கோணத்தில் இந்த பிரச்னை பார்க்கிறார் என தெரியவில்லை. எங்களை பொறுத்த வரைக்கும் ஆதரவு அளிக்கின்ற அத்தனைக் கட்சிகளும் வாக்கு தவிர வாய்ப்பில்லை. விசிக இடதுசாரிகள் இயூமுலி இந்த கட்சிகள் தவெகவிற்கு அளித்த வாக்குறுதிகளை கட்டாயம் காப்பாற்றுவார்கள். காங்கிரஸ் எல்லா கட்சிகளுக்கும் முன்னதாகவே தவெக அணிக்கு ஆதரவு மட்டும் அல்லாமல் கூட்டணியில் இணைகிறோம். நாடாளுமன்ற தேர்தல் வரை என்னென்ன தேவைகள் என்பன குறித்து அறிவித்துவிட்டு இந்த கூட்டணி உறவை உறுதிப்படுத்தினார்கள். இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு நல்குகிறார்கள். ஐந்தாண்டு வரை இந்த  ஆட்சி தொடர வேண்டும் என்பதை இடது சரிகள் விருப்பம் என்பதை திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தி வருகிறார்கள். அதே நிலைப்பாட்டை தான் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் முன்னெடுக்கிறது. எனவே இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவித இடையூரும்ம் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கும் என்பதை நாங்கள் பெரிதும் நம்புகிறேன்.
 
நாளை நடைபெறும் தவெக தோழமை கட்சிகள் கூட்டம் குறித்த கேள்விக்கு?
 
புதிய கூட்டணி அறிவிப்பு அங்கு பேசும்போது தான் தெரியும். நான் எப்படி சொல்ல முடியும் தேநீர் விருந்து என்ற அடிப்படையில் தான் அழைத்திருக்கிறார்கள் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கிறோம்.
 
அதிமுக எம்எல்ஏ ராஜினாமா  என்பது கூட்டணிக் கட்சிகளை நம்பாமல் உள்ளனரா? என்ற கேள்விக்கு
 
ராஜினாமா செய்பவர்கள் அதிமுகவில் என்ன பிரச்னை எதனால் பதவி விலகுகிறார்கள் என கேட்க வேண்டும் அதுதான் விவாதிக்கப்பட வேண்டும். அதை தாண்டி யூகங்களின் அடிப்படையில் விவாதங்கள் நடக்கின்றன. அதிமுகவுக்கு என்ன பிரச்னை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால் அதிமுகவிற்குள் நிகழும் உட்கட்சி முரண்கள் என்ன? என்பதைத்தான் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். அவ்வாறு இல்லாமல் யூகங்களின் அடிப்படையில் விவாதங்களின் திசையை மாற்றுகிற முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. 6 பேர் இதுவரை அதிமுகவில் பதவி விலகியிருக்கிறார்கள் என்றால் இது அதிமுகவில் நிகழ்கிற மிக முக்கியமான பிரச்னை தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த கேள்விகளை அதிமுகவினரிடம் வெளிப்படையாக கேட்க வேண்டும். அவர்கள் தான் நாட்டு மக்களுக்கு இதனை தெளிவுபடுத்த வேண்டும்.
 
பள்ளிகளில் சாதிய ஊக்குவிப்பு தடுப்பு நடவடிக்கை என்பதை வரவேற்கிறேன் 
 
செங்கோட்டையன் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும்போது சாதியையும் ஒரு தரவாக பதிவு செய்ய வேண்டும் என கருத்து சொன்னபோது கடுமையான எதிர்ப்பு வந்தது அதிர்ச்சியடைந்தோம் தற்போது அந்த முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் சாதி அடையாளங்களை ஊக்கப்படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார், என்பதை அவருடைய பேச்சின் மூலம் நம்மால் உணர முடிகிறது அது தொடர வேண்டும் என்பது நம்முடைய வேண்டுகோள்.
 
அமைச்சர் சரத்குமார் மீதான போதைப்பொருள் பயன்பாடு குற்றச்சாட்டு குறித்த கேள்விக்க
 
இதில் கட்டாயமாக நிரூபிக்கப்பட வேண்டியது தான் ஆதாரமில்லாமல் ஒரு கருத்தை சொல்லி விட முடியாது. ஆனால் ஒன்று அனைவரும் அறிந்த உண்மை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருக்கிறது. கஞ்சா மாநிலங்கள் விட்டு மாநிலங்கள் செல்கிறது குக்கிராமங்களில் கிடைக்கிறது.  எந்த கட்சி என்று விவாதிப்பதை விட இந்தியா முழுவதிலும் இது பரவுகிறது. இதற்கு யார் பிண்ணனி என கண்டறிந்து கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், என்பதுதான் முக்கியமான சவாலாக உள்ளது" என்றார்.

தலைப்பு செய்திகள்

விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
Min Ramesh: ஃபோட்டோஷாப்பில் தமிழை அகற்றி பொய் பரப்புகிறார்கள், சட்டப்படி நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் வார்னிங்
ஃபோட்டோஷாப்பில் தமிழை அகற்றி பொய் பரப்புகிறார்கள், சட்டப்படி நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் வார்னிங்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget