மேலும் அறிய

திருநெல்வேலி ரயில் நிலையம்: நவீன சிக்னல், கூடுதல் நடைமேடை - பாதுகாப்பு, வசதி உறுதி!

ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை ரயில் பாதைகளுக்கு முழுமையான மின் தடங்கள் போன்றவை அமைக்கப்படுகின்றன.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

மின் இயந்திரவியல் சிக்னல் முறை மாற்றப்படும். 
 
ரயில்களை பாதுகாப்பாக இயக்க மற்றும் கூடுதல் போக்குவரத்து கட்டமைப்புகளை உருவாக்க ஜூன் 10 முதல் ஜூன் 30 வரை திருநெல்வேலி ரயில் நிலைய ரயில் பாதை அமைப்புகளை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் மின் இயந்திரவியல் சிக்னல் முறை மாற்றப்படும். 
இந்த முறையில் ரயில் பாதை இணைப்பு பாயிண்ட்டுகள் மற்றும் கைகாட்டி விளக்குகள் விசை மாற்றிகள்  மூலம் இயக்கப்பட்டு வந்தன. தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் முடிந்த பிறகு  நவீன மின்னணு சிக்னல் முறை அமலுக்கு வர உள்ளது.
 
மின் தடங்கள் போன்றவை அமைக்கப்படுகின்றன.
 
இதில் கணிப்பொறி மென்பொருள் மூலம் ரயில் பாதை இணைப்புகள் மற்றும் கைகாட்டி விளக்குகள் விரைவான "மவுஸ் கிளிக்" மூலம் இயக்க முடியும். மேலும் ரயில் பாதை அமைப்புகள் மாறுவதால் இரட்டை ரயில் பாதையில் இருபுறமும் ரயில்களை எளிதாக பாதுகாப்பாக இயக்க முடியும். மேலும்  நாகர்கோயில் பகுதியில் இருந்து வரும் ரயில்களினால் தென்காசி பகுதியில் இருந்து வரும் ரயில்களை தாமதம் இல்லாமல் பாதுகாப்பாக கையாள புதிய 600 மீட்டர் நீள நடைமேடை எண் 9 பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த வளர்ச்சி பணிகளினால் ரயில் என்ஜின்கள், ரயில் பாதை பராமரிப்பு இயந்திர ரயில், மின் பாதை பராமரிப்பு இயந்திர ரயில் ஆகியவற்றிற்கு தனித் தனி ரயில் பாதைகள், ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை ரயில் பாதைகளுக்கு முழுமையான மின் தடங்கள் போன்றவை அமைக்கப்படுகின்றன.
 
புதிய கட்டமைப்புகள் உருவாவதால் கூடுதல் ரயில்களை கையாள முடியும்
 
இதன் மூலம் ரயில் பாதை, ரயில் பெட்டி, மின்தடங்கள் பராமரிப்பு மேம்படும். வளர்ச்சி பணிகளில் புதிய சிக்னல் முறையினால் பாதுகாப்பு மேம்படுவதால் ரயில்கள் பாதுகாப்பாக இயங்குவது உறுதி செய்யப்படும். புதிய கட்டமைப்புகள் உருவாவதால் கூடுதல் ரயில்களை கையாள முடியும். இந்த வளர்ச்சி பணிகளால் ரயில் போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டது. இந்த தற்காலிக அசௌகரியத்தால் நீண்டகால பயன்பாட்டிற்கான புதிய கட்டமைப்புகள் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சி பணிகளுக்காக ரயில் போக்குவரத்து மாற்றங்களை ஏற்றுக் கொண்டு பொறுமை காத்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே தமது நன்றியை காணிக்கையாக்குகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
Aadi Perukku Registration : ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget