மேலும் அறிய

திமுக - காங்கிரஸ் இடையே போட்டியா? மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரசார் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு !

வடக்கு தொகுதியில் போட்டியிடுவதாகவும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். எனவும் கூறி மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் குறித்து வடக்கு தொகுதி எம்எல்ஏ தளபதி பேச்சு விவகாரம் - மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியை பெறுவதில் திமுக - காங்கிரஸ் இடையே போட்டி -  வடக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரசார் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.

திமுகவிற்கும் காங்கிரசிற்கும் முற்றும் மோதல் மதுரையில் பரபரப்பு

மதுரை மாநகர் திமுக சார்பில் சுப்பிரமணியபுரம் பகுதியில் வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மதுரை மாநகர் திமுக மாவட்ட செயலாளரும், வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி, காங்கிரஸை சேர்ந்த மாணிக்தாகூர், ஜோதிமணி அவர்கள் MPயாக ஆகிவிட்டார். இனி யாரும் எம்.எல்.ஏ., ஆனா என்ன ஆகலைனா என சொல்லி அதுல பங்கு வேணும், இதுல பங்கு வேணும் என சொல்றாங்க இதையெல்லாம் தலைமை புரிஞ்சு அடுத்து இவனுகளுக்கு சீட்டே குடுக்ககூடாது. காங்கிரஸ்க்கு நம்மலே சீட் கொடுக்க விடக்கூடாது இல்லனா அதுக்கான வேலைய நம்ம ஆளுகளே பார்ப்பார்கள்  என (காங்கிரஸை உள்ளடி வேலை பார்த்து தோற்கடிக்கனும்) என்பது போல பேசினார்.

மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது

மேலும்.. “நம்ம இல்லைனா இந்திய கூட்டணியே கிடையாது. இந்தியா கூட்டணியில் டெல்லியில் இருக்குதுனா அதுக்கு காரணம் ஸ்டாலின், மம்தா பானர்ஜி என ராகுலை கேலி செய்யும் வகையில் பேசினார். இன்னும் சொல்ல பல விவகாரங்கள் உள்ளது அதனை எல்லாம் கூறினால், நல்லதல்ல தப்பாக போய்விடும். ஒரு தொகுதிக்கு 3 ஆயிரம் ஓட்டுதான் இருக்கிறது. வார்டுகளில் ‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ். அவர்கள் இந்தளவுக்கு பேசுகிறார்கள் என்பது தான் நம் மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது என்றார்.

Typo Error-கட்சிகள் முடிந்து விட்டது எனவும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில்  விருதுநகர் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்..,” இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புதலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன். தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது எனவும், Typo Error-கட்சிகள்
முடிந்து விட்டது எனவும் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு

திமுக தங்களது ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிக்க வேண்டும். என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசிவந்த நிலையில் தற்போது நேருக்கு நேராக கருத்துமோதல்களை வெளிப்படுத்திவருவது திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதை  காட்டுகிறது. இந்நிலையில் திமுக எம்எல்ஏவின் கருத்திற்கு எதிராக காங் எம்.பி. ஜோதி மணியும் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியை பெறுவதில் காங்கிரஸ் திமுக உறுப்பினர் கடும் போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் வடக்கு தொகுதியில் போட்டியிடுவதாகவும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் கூறி மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
தவெகவுடன் கூட்டணி.. திமுகவுடன் பேச்சுவார்த்தை - எடப்பாடி மீது வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பாய்ச்சல்
தவெகவுடன் கூட்டணி.. திமுகவுடன் பேச்சுவார்த்தை - எடப்பாடி மீது வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பாய்ச்சல்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget