மேலும் அறிய

மக்களவைத் தேர்தல்! தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிய பாஜக?

மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க.வுடன் பா.ஜ.க. பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டிலும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளும் தங்களது தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க. யார் பக்கம்?

தமிழ்நாட்டில் தி.முக., அ.தி.மு.க.விற்கு நிகராக கட்சி தொடங்கியவுடன் மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்கு பெற்ற கட்சி தே.மு.தி.க. விஜயகாந்தின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக கட்சி தொடங்கி சந்தித்த இரண்டாவது சட்டசபைத் தேர்தலிலே எதிர்க்கட்சி அந்தஸ்தை தே.மு.தி.க. கைப்பற்றியது.

விஜயகாந்த் உடல்நலம் குன்றிய பிறகு தே.மு.தி.க.வின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. இதன்காரணமாக, கடந்த சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க. பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இந்த சூழலில், கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி கேப்டன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த் காலமானார். அவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கூட்டணிக்கு அழைக்கும் பா.ஜ.க.?

அவர் மறைந்து ஒரு மாத காலமாகியும் அவரது நினைவிடத்தில் தினமும் மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வை தன்வசம் இழுக்க தமிழ்நாட்டில் உள்ள முன்னணி கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது தமிழ்நாடு முழுவதும் விஜயகாந்த் மறைவால் ஏற்பட்டுள்ள அனுதாபத்தை தங்களுக்கு சாதகமாக ஏற்படுத்திக் கொள்ள அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றனர்.

இந்த சூழலில், தமிழ்நாட்டின் பா.ஜ.க. மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் செல்வம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வினோஜ் பி செல்வம், பின்னர் தே.மு.தி.க. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தையும் சந்தித்தார்.

கேப்டன் அலை:

இந்த சந்திப்பின்போது, மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வகித்த பா.ஜ.க. தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை. இதனால் தற்போது பா.ஜ.க. தனித்து போட்டியிடும் சூழலில் உள்ளது. இதன் காரணமாக, ஏதேனும் ஒரு பெரிய கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவே பா.ஜ.க. ஆர்வம் காட்டி வருகிறது.

இதன் காரணமாக, விஜயகாந்த் அலை தமிழ்நாட்டில் தற்போது உள்ளதால் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்தால் அனுதாப வாக்குகள் மூலம் பா.ஜ.க.விற்கு வாக்கு வங்கி பலப்படும் என்று பா.ஜ.க. கருதுவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். பா.ஜ.க. மட்டுமின்றி தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளும் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: விசாரணையை முடக்கும் நோக்கத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை
 
மேலும் படிக்க:  MP Elections 2024: பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
தவெகவுடன் கூட்டணி.. திமுகவுடன் பேச்சுவார்த்தை - எடப்பாடி மீது வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பாய்ச்சல்
தவெகவுடன் கூட்டணி.. திமுகவுடன் பேச்சுவார்த்தை - எடப்பாடி மீது வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பாய்ச்சல்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget