மேலும் அறிய

"உதயநிதி மட்டுமல்ல, அவரது மகன் வந்தாலும் வாழ்க என்று சொல்லுவோம்" - கே.என்.நேரு பேச்சு

எடப்பாடி பழனிசாமிக்கு, வாரிசு இல்லை என்றால் நாங்கள் என்ன செய்யமுடியும். வாரிசு அரசியல் வாய்ப்பு இருந்தால், உங்களால் முடிந்தால் செய்யுங்கள்.

சேலம் திமுக மத்திய மாவட்ட கழகத்தின் சார்பாக பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துக்கொண்டு விழா பேருரை ஆற்றினார். அப்பொழுது அவர் பேசியது, ”1986 முதல் 2022 வரை, 32 ஆம் ஆண்டு காலத்தில் எனக்காக முதல் முறையாக போடப்பட்டுள்ள கூட்டம் என்பதால் மகிழ்ச்சியடைவதாக கூறினார். சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்வு உள்ளிட்டவைகள் ஒவ்வொரு ஆட்சியிலும் நிர்வாக சீர்திருத்தம், விலை உயர்வின்போது அரசுக்கு செலவு ஈடுகட்டும் வகையில் உயர்த்துவது இயல்பான செயல்” என்றும் கூறினார்.

”என் மீது 9 கொலை முயற்சி வழக்குகள் பதியப்பட்டது. பல நிர்வாகிகள் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை முதல்வர் ஸ்டாலின் அதிமுக நிர்வாகிகள் மீது யார் மீதும் வழக்கு போடவில்லை. ஆனால் உங்கள் மீது வழக்குகள் போடாததால்தான் தொடர்ந்து பேசி வருகிறீர்கள். தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகம் பேசும் நிலையில் இனிவரும் காலங்களில், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை வந்துவிடுமோ என்று எண்ணுகிறேன். எடப்பாடி பழனிசாமி யாரைக்கண்டு பயப்படமாட்டோம் என்று கூறுகிறார். சேலம் எம்ஜிஆர், ஜெயலலிதா கோட்டையாக இருக்கலாம். இனிவரும் காலத்தில் தளபதி கோட்டையாக மாறும், எதிர்க்கட்சி நினைப்பது எப்போதும் நடக்காது. சேலத்தில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றிபெறும். அதிமுக கோட்டை என்று கூறும் எடப்பாடி பழனிசாமிக்கு, சேலத்தில் திமுகவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கும் நிலையில் வருங்காலத்தில் 11 சட்டமன்ற உறுப்பினராக மாறுவார்கள். அனைத்திலும் திமுக வெற்றிபெறும். திமுக ஜெயலலிதா, எம்ஜிஆரை பார்த்து உள்ளது. அவர்களையும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது திமுக இறுதி வரை வெற்றிபெறும் நிரந்தர முதலமைச்சராக ஸ்டாலின் தான் இருப்பார்.

அதிமுக ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஓடியுள்ளதா? யார் ஆட்சியில் தேனாறும், பாலாறும் ஓட முடியும். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எங்களிடம் பூச்சாண்டி காட்டவேண்டாம், வாரிசு அரசியல் என்று கூறும் எடப்பாடி பழனிசாமிக்கு, வாரிசு இல்லை என்றால் நாங்கள் என்ன செய்யமுடியும். வாரிசு அரசியல் வாய்ப்பு இருந்தால், உங்களால் முடிந்தால் செய்யுங்கள். உதயநிதி மட்டுமல்ல, அவரது மகன் வந்தாலும் வாழ்க என்று சொல்லுவோம். வாரிசு அரசியல் என்று கூறியெல்லாம் எங்களை மிரட்டிவிட முடியாது. திமுக கழகத் தொண்டர்கள் எப்போதும் நன்றியுடன் இருப்பவர்கள், திமுகவில் தான் அனைத்து சமுதாய மக்களுக்கும் வாய்ப்பு கொடுக்கின்ற கட்சி.

ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, மூன்றரை லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார்கள். நிதிசுமையை ஏற்றி வைத்துவிட்டு, ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டீர்களா என்று பல திட்டங்கள் குறித்து கேட்கிறார்கள். நிச்சயம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். ஆனால் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் பேப்பராகவும், வெத்துவேட்டாகவும் மட்டுமே இருந்தது. மேலும் அவசர அவசரமாக 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டதால் சேலத்தில் அதிமுக 10 சீட்டுகளை வெற்றி பெற்றார்கள். ஆனால் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் திமுக தலைவர் ஸ்டாலின் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி கொடுப்போம் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார்” என்றார் 

தலைப்பு செய்திகள்

TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
கிராம சபை கூட்டத்தில் தேசிய அரசியலா? உத்தரகாண்ட் சம்பவத்துக்கு மாப்படுகையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பு! 
கிராம சபை கூட்டத்தில் தேசிய அரசியலா? உத்தரகாண்ட் சம்பவத்துக்கு மாப்படுகையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பு! 
அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அன்புமணி ராமதாஸ் திடீர் கடிதம்...!
அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அன்புமணி ராமதாஸ் திடீர் கடிதம்...!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Embed widget