மேலும் அறிய
Advertisement
மோடிக்கு நல்ல ஆலோசனை சொல்வதற்கு ஆட்கள் இல்லை - கே.எஸ்.அழகிரி
பிரதமர் நரேந்திர மோடிக்கு நல்ல ஆலோசனை சொல்வதற்கு ஆட்கள் இல்லை. பாரதிய ஜனதா கட்சியினர் தவறான பாதையில் பயணிக்கிறார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி நாகர்கோவிலில் பேட்டி .
‘மத்திய அமைச்சரவையில் மாற்றம் வேண்டுமென்றால் முதலில் மோடியை தான் மாற்ற வேண்டும். பிரதமர் மோடிக்கு நல்ல ஆலோசனை சொல்வதற்கு ஆட்கள் இல்லை. பாரதிய ஜனதா கட்சியினர் தவறான பாதையில் பயணிக்கிறார்கள்’ என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
தவறான அரசியல், சமூக பொருளாதார கொள்கைகளை மக்களுக்கு எடுத்து செல்லும் விதமாகவும் விலைவாசி ஏற்றம், பொருளாதார சீர்கேடு ஆகியவற்றை விளக்கி கூறும் விதமாக செப்டம்பர் மாதம் 7 ம் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நடைபயணம் மேற்கொள்கிறார். 3500 கிலோமீட்டர்கள் 149 நாட்கள் நடைபெற உள்ள நடைப்பயண துவக்கம் குறித்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் நாகர்கோவிலில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு அரிசி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களில் ஜி.எஸ்.டி., வரி அதிகரிப்பதால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். வரி விதிப்பு சமூக நீதிக்கு எதிரானது. பிரதமர் மோடிக்கு நல்ல ஆலோசனை சொல்வதற்கு ஆட்கள் இல்லை. தவறான பாதையில் பயணிக்கிறார்கள் பாரதிய ஜனதா கட்சியினர். சுவிஸ் வங்கியில் இருப்பது எல்லாம் கருப்பு பணம் இல்லை என்று இப்போது நிர்மலா சீதா ராமன் கூறுகிறார். இவர்கள் இதுவரை எவ்வளவு ரூபாய் கருப்பு பணத்தை மீட்டுள்ளார்கள். இவர்களது பொருளாதார கணக்கீடுகள் அனைத்தும் தவறானது.
மத்திய அமைச்சரவையில் மாற்றம் வேண்டுமென்றால் முதலில் மோடியை தான் மாற்ற வேண்டும். 5ஜி அலைக்கற்றையில் ரூ.5 லட்சம் கோடி வருமானம் வரும் என்று கூறுகிறார்கள். ஆனால் தற்போது ஒன்றரை லட்சம் கோடி வருமானம் வந்துள்ளதாக கூறுகிறார்கள். 2013 ல் 1 லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக 2 ஜி அலைக்கற்றையில் கூறினார்கள். அப்படியானால் அறிவுபூர்வமான தவறு நடந்துள்ளது. தகுதி இல்லாதவர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளார்கள் என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion