மேலும் அறிய

E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!

'திமுக தலைமை குடும்பத்தினர் ’படி அளக்கும் பரமசிவம்’ என்று அழைப்பார்கள். திருவண்ணாமலைக்காரர் என்பதால், சிவனோடு சேர்த்து சொல்கிறார்களோ.. என்னவோ!'

திமுக முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை மாவட்ட செயலாளருமான திமுகவின் முக்கிய தளகர்த்தருமான ஏ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து, அவர் வீடுகளில் ரெய்டு நடத்தி, 40 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், அந்த சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளிக்காமல், சிங்கப்பூரில் சென்று உடல்நலக்குறைவு என சிகிச்சை எடுத்து வருகிறார் ஏ.வ. வேலு.

இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், ஏ.வ.வேலு குறித்து ஒரு பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். அதில் பல அதிர்ச்சி தகவல்களையும் அவர் பகிர்ந்திருக்கிறார். இது தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்
மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்

சாவித்திரி கண்ணன் சொன்னது என்ன ?

அந்த பதிவில் ”வட தமிழ் நாட்டின் வாகை சூடாத சிற்றரசராக வலம் வந்தவர் எ.வ.வேலு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும், எ.வ.வேலுவிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு! இருவருமே பேருந்து நடத்துனர்களாக இருந்து பெரும் புள்ளி ஆனவர்கள்! ஆனால், எ.வ.வேலுவின் பொருளாதார சாம்ராஜ்ஜியத்தின் முன்பு ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால உழைப்பின் மூலம் சேர்ந்த பொருளாதாரம் ஜுஜுபி தான்! உண்மையில் தன் சாம்ராஜ்ஜியத்தின் சொத்து மதிப்பு குறித்த துல்லியமான தகவல் எ.வ.வேலுவுக்கே முழுமையாக தெரிய முடியாத அளவுக்கு அது பரந்து விரிந்தது.

அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவ கல்லூரி, மற்றும் ஏகப்பட்ட நர்சிங், பார்மசி கல்லூரிகள், புகழ் பெற்ற அருணை மருத்துவமனை.., ஆழ்வார்பேட்டை பங்களா, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் நிறுவன சொத்துக்கள், குறிப்பாக தென் மாத்தூர் பகுதியில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள், பைனன்ஸ் நிறுவனம், ஸ்பின்னிங் மில், கிரானைட் நிறுவனம், கல் குவாரிகள்..போன்றவை அதிகார பூர்வமானவை. மற்றும் பல பினாமி நிறுவனங்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ளன..என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன! 

சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்தி ஏ.வ.வேலு

இப்படிப்பட்ட ஒரு சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்தி மீது வெறும் 3.23 கோடி ஊழல் புகார் பதிவு செய்வது என்பதே அவமானகரமானதாகும்!முன்னதாக, 2023 நவம்பரில் மத்திய அரசின் வருமான வரித்துறை நடத்திய அதிரடி ரெய்டில் ரூபாய் 400 கோடிகள் கணக்கில் காட்டப்படாதவையாக உள்ளதே.. என்ற போது, ’’பூ.. இவ்வளவு தானே என்ன செட்டில்மெண்ட் பண்ண வேண்டும் சொல்லுங்க’’ என சிம்பிளாக சமாளித்துவிட்டார். தற்போதைய குற்றச்சாட்டை சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்.

கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் சாலை போடாமலே பணம் பெற்றுக் கொண்ட காண்டிராக்டர் சங்கரானந்த், செந்தில் பாலாஜியின் நண்பராவார். மொத்தப் பணம் ரூ 4.7 கோடி. இதில் நெடுஞ்சாலைத் துறை செட்டில்மெண்ட் செய்த பணம் 3.23 கோடி. நபார்டு வங்கி மூலம் பெற்ற பணம் 1.5 கோடி. இதில் தற்போதைய தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை 3.23 கோடியை மட்டுமே கவனத்தில் கொண்டு, இன்னொன்றை தவிர்த்ததன் காரணம் தெரியவில்லை. அடுத்ததாக இந்த ஊழலை முதன்முதலில் வெளிக் கொண்டு வந்தது அன்றைய கரூர் அதிமுக பிரமுகர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தான்!

இரவோடு இரவாக சாலை போட்ட ஏவ வேலு 

இவர் சரியாக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி அன்றைய தலைமை செயலாளர் இறையன்புவை கோட்டையில் சந்தித்து, ’’கரூர் மாவட்டத்தில் சாலை போடாமலே 4.7 கோடி பணம் தரப்பட்டுள்ளது. இந்தப் பணம் தரப்பட்டு சுமார் ஒரு மாதகாலம் ஆகிவிட்டது’’ என புகார் தந்து, அதை ஊடகங்களுக்கும் தெரிவித்தார்.  துரதிர்ஷ்டவசமாக இதை அன்றைய ஊடகங்கள் பெரிதுபடுத்தவில்லை. ஆனால்,தலைமை செயலாளர் இறையன்பு நேர்மையானவர் என்ற வகையில் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது என்று அன்றைய இரவே பெரிய இயந்திரங்கள், பிரம்மாண்ட ஆட் படைகள் இறக்கப்பட்டு, அத்தனை சாலைகளும் போர்க்கால வேகத்தில் அவசர, அவசரமாக போடப்பட்டது என்பது தான் நம்ப முடியாத உண்மை.

அப்போது நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எவ.வேலு அவர்கள், ”ஐயோ பாவம், அந்த காண்டிராக்டர். அவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணம் குறித்து அவருக்கு எதுவும் தெரியாது. ஆனால், தற்போது சாலை போடப்பட்டுவிட்டது. ஆகவே, அவரை குற்றம் சொல்லக் கூடாது என பேட்டி தந்து விவகாரத்தை முடித்தார். அதெப்படி இதை விடுவது? எந்த அடிப்படையில் சாலை போடாமல் முழுப் பணமும் தரப்பட்டது? என அறப்போர் இயக்கம் தகவல் அறியும் உரிமைசட்டம் உள்ளிட்டவற்றை கையில் எடுத்து களம் கண்டது. ஆகவே, இதையெல்லாம் சமாளிக்க கோட்டப் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், உதவி இள நிலை பொறியாளர்கள்..என ஒன்பது பேர் தற்காலிகமாக ஓராண்டு பணி நீக்கம்

விடாத அறப்போர் இயக்கம்

செய்யப்பட்டதோடு, அவர்களின் சம்பள உயர்வையும் நிறுத்திவிட்டார்கள். இப்படி சாதாரண நிலையில் உள்ளவர்களை பலி கொடுத்து விட்டு இதற்கு உண்மையான காரணகர்த்தாவான தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் மற்றும் இவர்களுக்கு கட்டளையிட்ட அமைச்சர் மூவரும் தப்பித்துக் கொண்டனர். ஆனால், அறப்போர் இயக்கம் அசரவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தந்தது. முதல்வர் ஸ்டாலின் விசாரணைக்கு எ.வ.வேலு மீதான இசைவு தெரிவிக்கவில்லை. அதனால் விவகாரம் கிடப்பில் போடப்பட்டது.

திமுக தலைமை குடும்பத்தின் கஜானவாக இருந்த ஏவ வேலு 

எ.வ.வேலுவை பொறுத்த வரை திமுக தலைமை குடும்பத்தின் கஜானாவாக அவர் இருந்தார். இப்படி செந்தில் பாலாஜி, சேகர்பாபு எனப் பலர் இருந்தாலும், இவரை மட்டுமே திமுக தலைமை குடும்பத்தினர் ’படி அளக்கும் பரமசிவம்’ என்று அழைப்பார்கள். திருவண்ணாமலைக்காரர் என்பதால், சிவனோடு சேர்த்து சொல்கிறார்களோ.. என்னவோ! எம்.ஆர். விஜயபாஸ்கர் இந்த ஊழலை அதன் பிறகு பேசவேயில்லை. எடப்பாடி பழனிச்சாமி அதற்கு தடை போட்டதோடு, சட்ட சபையிலும் இதை தங்கள் கட்சிக்காரர்கள் யாரும் பேசக் கூடாது என கட்டளை போட்டுவிட்டார்.

அதிமுக தலைமையிடம் டீலிங்கை முடித்த ஏவ வேலு 

பத்து ஆண்டுகளாக நெடுஞ்சாலைத் துறையில் எடப்பாடி பழனிசாமி செய்த ஊழல் விவரங்களை கையில் வைத்திருந்த எ.வ.வேலு, அதிமுக தலைமையிடம் டீலிங் செய்து முடித்து விட்டார். சமீபத்திய தேர்தலில் கடும் சவாலாக இருந்த தவெக வேட்பாளர் விவசாயப் போராளி அருள் ஆறுமுகத்திடம் தோற்று இருக்க வேண்டிய எ.வ.வேலு தனது தொகுதியில் உள்ள பூத்துகளில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள் தொடங்கி, தவெக ஏஜெண்டுகள், உள்ளுர் தவெக நிர்வாகிகள்..என பலரையும் தூக்கி, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து அருள் ஆறுமுகத்தின் நியாயமான வெற்றியை தடுத்து, தனதாக்கிக் கொண்டார்.

அதே போலத் தான் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை பாயும் என்பதை அந்த துறையின் தலைமை பொறுப்பில் உள்ளவர் மூலமே தெரிந்து கொண்டு, ரெய்டுக்கு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே சிங்கப்பூர் செல்ல விமான டிக்கெட் எடுத்துவிட்டார்.

சோதனை நடத்தி ஏமாந்த லஞ்ச ஒழிப்புத் துறை 

கடந்த ஜூன் 25-ம் தேதி சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள எ.வ.வேலுவின் பங்களா, திருவண்ணாமலையில் உள்ள அவரது கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடு, கரூர், திண்டுக்கல், கோவை என 20 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி ஏமாந்தனர். அப்போது, முக்கிய ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் வழக்கிற்கு தொடர்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஆவணங்கள், மற்றும் ரூ.40 லட்சம் கைப்பற்றப்பட்ட தாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை எவ.வேலு முற்றிலுமாக மறுத்துவிட்டு அடுத்த நாளே சிங்கப்பூர் பறந்தார்.

”திருவண்ணாமலையை இன்னொரு சிங்கப்பூராக மாற்றிக் காட்டுகிறேன். அயல் நாட்டு மருத்துவமனைகளுக்கு இணையாக எங்கள் அருணை மருத்துவமனையில் சிகிச்சை தருகிறோம்” என்ற எ.வ.வேலு தற்போது சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெறுவதாக சொல்வதைக் கேட்டு திருவண்ணாமலையே சிரிக்கிறது! லஞ்ச ஒழிப்புத் துறையின் ரெய்டு ஒரு வாரத்திற்கு முன்பே தெரிவிக்கப்பட்டுவிட்டதால், அனைத்து ஆவணங்கள், கரன்சிகள், சொத்து விபரங்கள், நகைகள் அனைத்தையும் தனி கப்பலில் சிங்கப்பூருக்கு அனுப்பிவிட்டு தான் அங்கு சென்றார் என்ற பேச்சும் நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்களில் நிலவுகிறது.

எ.வ.வேலுவுக்கு தற்போது திடீர் நெஞ்சு வலியாம்!

சொத்து விவரங்களை கேட்டால் நெஞ்சுவலி வரும் 

எ.வ.வேலு நெடுஞ்சாலைத் துறையில் அடித்த கொள்ளைகளை எழுதினால் கேட்போருக்கு நெஞ்சு வலி வந்துவிடும். தைரியசாலிகள் தொடர்ந்து வாசிக்கலாம். பல அத்தியாயங்களாக பட்டியல் போட வேண்டிய ஊழல் முறைகேடுகளை ரத்தின சுருக்கமாகச் சொல்கிறேன்;

நெடுஞ்சாலைத் துறையில் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 20, 000 கோடிகள் சாலை போடுவதற்கு செலவழிக்கப்படுகிறது. இதில் 35 சதவிகிதம் கமிஷனாக கைமாறுகிறது. அமைச்சர் 20 சதவிகிதத்தை எடுத்துக் கொண்டு, 15 சதவிகிதத்தை பல்வேறு மட்டங்களில் உள்ள அதிகாரிகள், பொறியாளர்கள் பங்கு பிரித்து எடுத்துக் கொள்ள தந்துவிடுகிறார். அந்த வகையில் ஆண்டுக்கு ரூபாய் 4,000 கோடிகள் என ஐந்தாண்டுகளில் எ.வ.வேலு நெடுஞ்சாலைத் துறையில் மாத்திரம் அடித்த கொள்ளை ரூபாய் 20,000 கோடிகள்!

உண்மையில் தேவையில்லாத இடங்களில் சாலை, சாலை விரிவாக்கம் அல்லது சாலை மீதே சாலை என கொள்ளை அடிப்பதற்காகவே ரூபாய் 20,000 கோடிகள் நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்குகிறார்கள். உண்மையில் நியாயமான வகையில் சாலை போடவும், பராமரிக்கவுமாக அதிகபட்சம் ரூபாய் 2,500 கோடிகள் போதுமானது என நெடுஞ்சாலைத் துறையில் உள்ள சில நேர்மையான மூத்த பொறியாளர்கள் சத்தியம் செய்து சொல்கிறார்கள்.

இன்றைக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக வந்துள்ள ஆதவ் அர்ஜுனா உண்மையிலேயே நேர்மையாக செயல்பட விரும்பினால், ஊழல் செய்வதற்காகவே விரையமாக்கப்படும் இந்தப் பணத்தை சேமித்து அரசு கஜானாவிற்கு பலம் சேர்க்க வேண்டும். செய்வாரா?” என கேள்வி எழுப்பி அந்த பதிவை மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் முடித்துள்ளார்.

 

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
கிராம சபை கூட்டத்தில் தேசிய அரசியலா? உத்தரகாண்ட் சம்பவத்துக்கு மாப்படுகையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பு! 
கிராம சபை கூட்டத்தில் தேசிய அரசியலா? உத்தரகாண்ட் சம்பவத்துக்கு மாப்படுகையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பு! 
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget