மேலும் அறிய

Jose charles martin Vs Aadhav Arjuna : திமுகவின் ‘Sleeper Cell’ தான் ஆதவ் அர்ஜூனா..! பட்டியலிட்டு விஜய்யை அலர்ட்டு செய்யும் மச்சான் ஜோஸ் சார்லஸ்

Jose charles martin Vs Aadhav Arjuna : தவெக-விற்கு கிடைக்க வேண்டிய மக்கள் ஆதரவைத் திசைமாற்றி, அதை எதிரணிக்குச் சாதகமாக்கும் சதிவேலைகளை ஆதவ் அர்ஜூன மிகக் கச்சிதமாக செய்து வருவதாக ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் விமர்சித்துள்ளார்.

தவெகவில் ஆதவ் அர்ஜூனா

தமிழகத்தில் தேர்தல் களத்தில் திமுகவிற்கு கடும் போட்டியாக உருவெடுத்து வரும் கட்சி தான் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம். அந்த கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவிற்கு தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை விஜய் வழங்கினார். இதனையடுத்து கட்சியின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகித்து வரும் ஆதவ் அர்ஜூனாவை அவரது மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கியுள்ள ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தவெக தலைவர் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

தவெகவுடன் கூட்டணி அமையாததற்கு காரணம் யார்.?

அந்த கடிதத்தில்,ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது முதல், உங்கள் நலன் விரும்பியாக நான் ஒரு உண்மையை உரக்க சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.  தவெக-வுடன் எந்த கட்சியும் கூட்டணி வைக்க முடியாமல் முட்டுக்கட்டை போடுவது ஆதவ் அர்ஜூனாதான். இதற்கு பின்னால் அவருடைய சுயநலமும், அதிகார பசியும் மட்டுமே இருக்கிறது.திமுகவின் ஒரு முக்கிய புள்ளியால், உங்களையும் உங்கள் கட்சியையும் வேரோடு அழிப்பதற்காக அனுப்பப்பட்ட ‘Sleeper Cell’ தான் இந்த ஆதவ் அர்ஜூனா. தவெக-விற்கு கிடைக்க வேண்டிய மக்கள் ஆதரவைத் திசைமாற்றி, அதை எதிரணிக்குச் சாதகமாக்கும் சதிவேலைகளை அவர் மிகக் கச்சிதமாக செய்து வருகிறார்.

சகுனியாக ஆதவ் அர்ஜூனா

அதன் ஒரு பகுதிதான் கரூர் துயர சம்பவம். 41 அப்பாவி உயிர்கள் பறிபோன அந்த கோர சம்பவத்திற்கு பின்னணியில் ‘சகுனியாக’ இருந்து காய் நகர்த்தியவர் இவர் தான். சிபிஐ விசாரணையில் இவரது முகத்திரை கிழியும் என்பது உறுதி. அன்று செந்தில் பாலாஜியை திமுகவிற்கு அழைத்து சென்றதிலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு என்பதை இந்த இடத்தில் பதிவிட விரும்புகிறேன்.

செல்லும் இடமெல்லாம் தன்னைத் தானே தலைவனாக கட்டமைக்க முயல்வது இவரது வழக்கம். இதையுணர்ந்தே திருமாவளவன் அவர்கள் இவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து அப்புறப்படுத்தினார். என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்—எங்கள் குடும்பத்தைப் பிரிக்க முயன்றது போல, உங்கள் குடும்பத்தையும் அரசியலையும் சிதைக்க அவர் தயங்கமாட்டார்.

கூடவே இருந்து குழிபறிக்கும் துரோக சக்தி

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என துடிக்கும் உங்கள் பயணத்திற்கு, நான் ஒரு நலம் விரும்பியாகச் சொல்லிக்கொள்வது ஒன்றுதான்... உங்கள் பாதை தெளிவாக இருக்கலாம்! ஆனால் பயணிக்க வேண்டிய தடம் வழுக்கலாக இருக்கிறது. கூடவே இருந்து குழிபறிக்கும் துரோக சக்திகளை அடையாளம் காண தவறினால், உங்கள் வெற்றி பாதியிலேயே முடங்கிப்போகும் அபாயம் உண்டு.  காலத்தே எடுக்கும் துணிச்சலான முடிவே கழகத்தின் எதிர்காலத்தை காக்கும். விழிப்புடன் இருங்கள், வெற்றிக்கான பாதையை சீர் செய்யுங்கள்! என ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் வரை.. சென்னையை தவெக டார்கெட் செய்தது ஏன்? ஓர் அலசல்
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் வரை.. சென்னையை தவெக டார்கெட் செய்தது ஏன்? ஓர் அலசல்
TVK Vijay Alliance: அதிமுக - பாஜகவுடன் கூட்டணியா? விஜய்யின் பேச்சால் தவெக ஹாப்பி!
TVK Vijay Alliance: அதிமுக - பாஜகவுடன் கூட்டணியா? விஜய்யின் பேச்சால் தவெக ஹாப்பி!
விஜய் இப்தார் விருந்தில் அதிரடி பேச்சு! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: உடைத்து பேசிய விஜய்!
விஜய் இப்தார் விருந்தில் அதிரடி பேச்சு! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: உடைத்து பேசிய விஜய்!
TVK Vijay: ‘விஜய்க்கு புதிய சிக்கல்’ தேர்தலில் போட்டியிட முடியாத நிலை..? அதிர்ச்சியில் தொண்டர்கள்!
‘விஜய்க்கு புதிய சிக்கல்’ தேர்தலில் போட்டியிட முடியாத நிலை..? அதிர்ச்சியில் தொண்டர்கள்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
Chennai Acid Attack | விவாகரத்து கேட்ட மனைவி ஆசிட் வீசிய கணவர் பதறவைக்கும் CCTV காட்சி
Annamalai Walking In Bridge | ’’கார் வேண்டாம்’’ நடுரோட்டில் இறங்கிய அ.மலை நடந்து செல்லும் காட்சிகள்
CV Shanmugam on Nayanthara | ”எனக்கு நயன்தாரா வேணும்! கனவை நிறைவேத்துவாரா” எல்லை மீறிய சிவி சண்முகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கோவை குனியமுத்தூர் அதிரடி! 100 கிலோ கஞ்சா பறிமுதல், பெரும் பரபரப்பு: பின்னணியில் பெரிய நெட்வொர்க்கா?
கோவை குனியமுத்தூர் அதிரடி! 100 கிலோ கஞ்சா பறிமுதல், பெரும் பரபரப்பு: பின்னணியில் பெரிய நெட்வொர்க்கா?
கோவை அருகே பேருந்தில் சிக்கிய 37 லட்சம் மதிப்புள்ள தங்கம்! தேர்தல் பறக்கும் படையின் அதிரடி!
கோவை அருகே பேருந்தில் சிக்கிய 37 லட்சம் மதிப்புள்ள தங்கம்! தேர்தல் பறக்கும் படையின் அதிரடி!
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் வரை.. சென்னையை தவெக டார்கெட் செய்தது ஏன்? ஓர் அலசல்
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் வரை.. சென்னையை தவெக டார்கெட் செய்தது ஏன்? ஓர் அலசல்
TVK Vijay Alliance: அதிமுக - பாஜகவுடன் கூட்டணியா? விஜய்யின் பேச்சால் தவெக ஹாப்பி!
TVK Vijay Alliance: அதிமுக - பாஜகவுடன் கூட்டணியா? விஜய்யின் பேச்சால் தவெக ஹாப்பி!
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! 24ஆம் தேதி வரை வானிலை எப்படி இருக்கும்?
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! 24ஆம் தேதி வரை வானிலை எப்படி இருக்கும்?
Yogi Babu 300th Movie: யோகி பாபுவின் 300வது படம்.. அர்ஜுனன் பத்து ட்ரெயிலர் எப்படி இருக்குது?
Yogi Babu 300th Movie: யோகி பாபுவின் 300வது படம்.. அர்ஜுனன் பத்து ட்ரெயிலர் எப்படி இருக்குது?
பாதுகாப்பு வளையத்தில் 2026 ரமலான் பண்டிகை! வளைகுடா பதற்றத்தால் யுஏஇ நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!
பாதுகாப்பு வளையத்தில் 2026 ரமலான் பண்டிகை! வளைகுடா பதற்றத்தால் யுஏஇ நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!
IPL 2026: விக்கெட் மட்டுமல்ல... ரன்களுக்கும் 'நோ'! ஐபிஎல்-ல் பேட்டர்களை ஓடவிட்ட ஆர்சிபி ஸ்பெஷலிஸ்ட்கள்
IPL 2026: விக்கெட் மட்டுமல்ல... ரன்களுக்கும் 'நோ'! ஐபிஎல்-ல் பேட்டர்களை ஓடவிட்ட ஆர்சிபி ஸ்பெஷலிஸ்ட்கள்
Embed widget