"எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா பெயர் இருக்கும்வரை அதிமுகவிற்கு முடிவு என்பதே இல்லை " - ஜெயக்குமார்
உள்ளாட்சித் தேர்தலை அடிப்படையாக வைத்து அதிமுகவின் பலத்தை கணிக்க முடியாது. இது சட்டமன்ற தேர்தல் போல இல்லை. ஒவ்வோரு தோல்விக்குப் பிறகும், புது உத்வேகத்துடன் எழுச்சிப் பெறும் கட்சி அதிமுக.
நில அபகரிப்பு வழக்கு, உள்ளாட்சித் தேர்தலில் ஒரு நபரை தாக்கியது உள்ளிட்ட மூன்று வழக்கில் கைது செய்யப்பட முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சமீபத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் தி இந்து ஆங்கில் நாளிதழுக்கு அளித்த பேட்டியின் சுருக்கம்.
கேள்வி: திமுக அரசியல் நோக்கத்திற்காகதான் நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள் என்று அதிமுக சொல்கிறதே? இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: இது அவர்களின் பழிவாங்கும் பண்பின் வெளிபாடாகப் பார்க்கிறேன். எந்த ஒரு தேர்ந்தெடுக்கப்ப்ட்ட அரசாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டும் விமசர்னங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால், தற்போது மாநிலத்தில் கருத்து சுதர்திரத்திற்கு இடம் இல்லை என்று தெரிகிறது. தி.மு.க. அரசு சகிப்புத்தன்மை இல்லாமல் இருக்கிறது. திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதவைகள் பற்றி நான் தொடர்ந்து விமர்சித்து வருகிறேன். எனக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் எந்தவித பகையும் இல்லை. நான் அரசியல் ரீதியிலாகதான் என் விமர்சனங்களை முன்வைக்கிறேன். யாரைடும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் பழக்கும் எனக்குக் கிடையாது. நான் தொடர்ந்து அரசியல் ரீதியிலாக மட்டுமே விமர்சனம் செய்கிறேன்.
தற்போது, ஆட்சியில் உள்ள திமுக அரசிற்கு இருப்பது இரண்டு நோக்கங்கள்தான். அவர்களின் செயல்பாடுகளை யாரும் விமர்சிக்கக் கூடாது; அவர்கள் செய்வதையே தொடர்ந்து செய்ய வேண்டும்; வளர்ச்சியை நோக்கி எந்த செயல்பாடுகளும் இல்லை. பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் என்னை கைது செய்தனர்.
கேள்வி:முன்னாள் சட்ட அமைச்சராக பொறுப்பு வகித்த நீங்களே, சட்டத்தை கையில் எடுத்து கொண்டது சரியானதா? ஒரு மனிதனை அரை நிர்வாணப்படுத்தி தாக்கியது நியாயமா?
பதில்: எனக்கு அந்த நபரை தாக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. அந்த நபர் மீது ஏற்கனவே செயின், பைக் திருட்டு தொடர்பாக குற்றம் செய்ததற்கான வழக்குகள் உள்ளன. அவர் கள்ளஓட்டு வழக்கில் சிக்கினார். இது ஜனநாயத்திற்கு எதிரானவை. நான் முன்னாள் அமைச்சர் போன்ற பல பதவிகளில் வகித்தாலும், மாவட்ட செயலாளராக கட்சியின் நோக்கங்களையும் நான் காக்க வேண்டும். வாக்குச்சாவடியில் சட்ட விதிமீறன் நடக்கும்போது நான் எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும். அவர் குற்றம் செய்தவர். நாங்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தோம். அவர் போலீசார் மீது கல் எறிந்தும், என் மீதுதான் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். என் மீதான நில அபகரிப்பு வழக்கும் தவறானது. எல்லாம் எனக்கு எதிரான பொய் வழக்குகள். சட்ட ரீதியில் என் மீது தவறில்லை என்பதை நிரூபிப்பேன். தர்மம் வெல்லும்.
கேள்வி:நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியை பதிவு செய்துள்ளது. ஏன்?
பதில்: உள்ளாட்சித் தேர்தலை அடிப்படையாக வைத்து அதிமுகவின் பலத்தை கணிக்க முடியாது. இது சட்டமன்ற தேர்தல் போல இல்லை. உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவது மாநில தேர்தல் ஆணையம்; இது ஆட்சி செய்யும் அரசின் கைப்பாவையாக மட்டுமே செயல்படும். நடந்து முடிந்த தேர்தலில் சட்ட விதிமீறல் சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன. சட்டமனற தேர்தலில் அதிமுகவிற்கு 1.46 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. 2023 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரை காத்திருங்கள். ஒவ்வோரு தோல்விக்குப் பிறகும், புது உத்வேகத்துடன் எழுச்சிப் பெறும் கட்சி அதிமுக.
கேள்வி: அதிமுகவில் நீடிக்கும் இரட்டை தலைமை பிரச்சனையால், கட்சியின் வளர்ச்சியை பாதிக்கிறதா?
பதில்: இது தொடர்பான விமர்சனங்கள், அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகுதான் சந்திக்கிறது. அதிமுக போன்ற பெரும் கட்சிக்கு இதுபோன்ற பிரச்சனைகள் பெரிய விஷயம் இல்லை. இதுபோன்ற பிரச்சனைகள் கடந்த காலத்திலும் இருந்துள்ளது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சி தலைவி அம்மா அவர்களின் பெயரும், புகழும் இருக்கும்வரை, இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை, அதிமுக கட்சிக்கும் முடிவு கிடையாது.
கேள்வி: கட்சி உறுப்பினர்கள் சிலர் வி.கே. சசிகலா மீண்டு இணைவதை ஆதரிக்கின்றனர். ஓ. பன்னீர்செல்வமும் வி.கே. சசிகலா அதிமுகவில் இணைவதை வலியுறுத்தியுள்ளார். சசிகலாவால் கட்சி பிளவுப்பட்டுள்ளதா?
பதில்: சகிகலா அவர்களே, அரசியலில் இருந்து விலகி இருப்பதாக சொல்லிவிட்டார். தற்போதைய சூழலும் அதைத்தான் கூறுகின்றன. அப்படியிருக்க, இதனால் எங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் சகோதரர் சகிகலா அவர்களை சந்தித்ததற்காக அவரை கட்சியிலிருந்து நீக்கியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அவரும் இது குறித்து எதுவும் வெளிப்படையாக கூறவில்லை.
கேள்வி: அதிமுகவின் எதிர்காலம் குறித்து என்ன சொல்கிறீர்கள்?
பதில்: எங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கப்போகிறது. திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதை மக்களும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். திமுக செயல்பாடுகளில் தோல்வி அடைவது எங்களுக்கு சாதகமாகவே அமையும்.