மேலும் அறிய

முதன்முறையாக காஷ்மீரில் ரியல் எஸ்டேட் மாநாடு; ரூ.19,000 கோடி ஒப்பந்தம்… எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

ஒரு புதிய தொழில்துறை திட்டத்தின் கீழ் ரூ.44,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அது ரூ.60,000 கோடியை எட்டும் என்று நம்புவதாகவும் சின்ஹா குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு நாட்டின் அனைத்து பகுதி மக்களும் நிலங்களை வாங்க வழிவகை செய்யும்படியாக, ஜம்மு காஷ்மீர் நில உரிமையாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், காஷ்மீரில் ரியல் எஸ்டேட் தொழிலை ஊக்குவிக்க முதல் முறையாக ரியல் எஸ்டேட் உச்சிமாநாடு ஜம்முவில் நேற்று நடத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகமும், ஒன்றிய வீடு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், ரியல் எஸ்டேட் அமைப்புடன் இணைந்து இம்மாநாட்டை நடத்தியது. 

முதன்முறையாக காஷ்மீரில் ரியல் எஸ்டேட் மாநாடு; ரூ.19,000 கோடி ஒப்பந்தம்… எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, உச்சிமாநாட்டின் போது பேசுகையில், “ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படையான கட்டமைப்பை உருவாக்கும் வகையில், RERA போர்டல், ஹவுசிங் போர்டல், ஒருங்கிணைந்த ஏல போர்டல் என பல போர்டல்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது போன்ற முயற்சிகள் டெவலப்பர்கள் மற்றும் வீடு வாங்குபவர்கள் இருவருக்கும் அவர்களின் அனைத்து தேவைகளுக்கும் ஒன்-ஸ்டாப் போர்ட்டலாக உதவும்." இந்தியாவின் பிற பகுதிகளுக்கு இணையாக ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியடைவதை விரும்பாத மக்கள் இருப்பதாக சின்ஹா கூறினார். “அவர்களுக்கு நிலம் கொடுக்காமல் தொழில்களும், முதலீடுகள் இல்லாத வளர்ச்சியும் வேண்டும். ஆனால் ஜம்மு காஷ்மீர் வழியில் வரும் அனைத்து தடைகளையும் உடைப்போம்” என்று லெப்டினன்ட் கவர்னர் கூறினார். திட்டங்களின் வளர்ச்சிக்காக 6,000 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாகவும், விவசாய நிலங்களின் நில பயன்பாட்டை மாற்றுவதற்கான விதிகளையும் உருவாக்கியுள்ளது என்றும் சின்ஹா கூறினார். ஒரு புதிய தொழில்துறை திட்டத்தின் கீழ் ரூ.44,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்கள் தனது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அந்த எண்ணிக்கை ரூ.60,000 கோடியை எட்டும் என்று நம்புவதாகவும் சின்ஹா குறிப்பிட்டார். 

முதன்முறையாக காஷ்மீரில் ரியல் எஸ்டேட் மாநாடு; ரூ.19,000 கோடி ஒப்பந்தம்… எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

திட்டங்களை மேம்படுத்த புதிய தொழில் கொள்கையின் கீழ் அரசு சொந்த நிலத்தையும் வழங்கும் என்றார். நிலத்தை வைத்திருக்கும் மக்கள் தங்கள் நிலத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்று சின்ஹா கூறினார். இதில், காஷ்மீரில் வீடு, ஓட்டல் உள்ளிட்ட கட்டிடங்களை கட்டி விற்பனை செய்ய அரசுடன் 39 ஒப்பந்தங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் செய்துள்ளன. ரூ.18,300 கோடிக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஹிரானந்தனி குழுமம், சிக்னேச்சர் குளோபல், என்பிசிசி மற்றும் ரஹேஜா டெவலப்பர்ஸ் உள்ளிட்ட பல டெவலப்பர்கள் ரூ.18,900 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தொழில்துறை அமைப்பான நரெட்கோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் காஷ்மீரில் பொருளாதாரம் மேம்படுவதுடன், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.  அரசின் இந்த நடவடிக்கை மூலம் காஷ்மீரின் வளங்கள் விற்பனை செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகளான தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா, பிடிபி கட்சியின் மெகபூபா முப்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
"தப்பா நினைச்சுக்காதீங்க" நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்! 
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICEAadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
"தப்பா நினைச்சுக்காதீங்க" நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்! 
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
ஆந்திராவிலிருந்து 26 கிலோ கஞ்சா கடத்தல் - தேனியில் சிக்கிய கேரள நபர்கள்
ஆந்திராவிலிருந்து 26 கிலோ கஞ்சா கடத்தல் - தேனியில் சிக்கிய கேரள நபர்கள்
வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு மக்களை காக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு மக்களை காக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
Salem Flood: சேலத்தில் கனமழை... சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!
Salem Flood: சேலத்தில் கனமழை... சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!
Embed widget