மேலும் அறிய

ஹிஜாப் விவகாரம் 5 மாநில தேர்தலுக்காக கையில் எடுக்கப்பட்டுள்ளது - காங். பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா

" 5 மாநில தேர்தல் காரணமாகவே பெட்ரோல், எரிவாயு விலை உயராமல் இருக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கும் "

நெல்லை மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நெல்லை  நாங்குநேரியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரள முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளருமான ரமேஷ் சென்னிதலா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஸ்ரீ வல்லபிரசாத், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது,  

ஹிஜாப் விவகாரம் 5 மாநில தேர்தலுக்காக கையில் எடுக்கப்பட்டுள்ளது - காங். பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கேரள முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தேர்தல் பொறுப்பாளருமான ரமேஷ் சென்னிதலா கூறும் பொழுது, 5 மாநில தேர்தல் காரணமாகவே பெட்ரோல் எரிவாயு விலை உயராமல் இருக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கும், பாஜக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறாது, வெற்றி பெறவும் முடியாது. மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியைதான் பாஜக செய்கிறது. பிரியங்கா காந்தி தலைமையில் கட்சியை வலுப் படுத்தும் முயற்சியை செய்கிறோம் காங்கிரஸ் கட்சி வலுப்பெறும் என தெரிவித்தார்.

கர்நாடக ஹிஜாப் விவகாரம் 5 மாநில தேர்தலுக்கானது. எந்த உடை அணியவேண்டும், உண்பது, இருப்பிடம் , போன்றது மக்களின் அடிப்படை உரிமை. கர்நாடகாவில் நடக்கும் சம்பவம்  இந்திய அரசியலமைப்பு சட்டத்தை  உடைப்பதற்கு சமம். ஹிஜாப் என்பது புதிய ஆடை கிடையாது. இந்து முஸ்லிம் மக்களிடையே இந்த பிரச்சனை மூலம் பிளவை ஏற்படுத்த நினைக்கிறார்கள்,  உபி உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவை சந்திக்கும் என்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பை நாங்கள் நம்பவில்லை., மக்களை நம்பியே களத்தில் நிற்கிறோம் என தெரிவித்தார்.

ஹிஜாப் விவகாரம் 5 மாநில தேர்தலுக்காக கையில் எடுக்கப்பட்டுள்ளது - காங். பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கூறும் பொழுது,  சமுதாய புரட்சியாளரான ராமானுஜர் சிலையை திறக்க தகுதியற்றவர் பிரதமர் மோடி. வேற்றுமையில் ஒற்றுமை கண்டவர் ராமானுஜர், ஆனால் ஒற்றுமையில் வேற்றுமை காண பிரதமர் மோடி நினைக்கிறார். ஒற்றுமையான சமுதாயத்தை வேறுபடுத்தி வருகிறார்,  கல்லூரி மாணவிகள் உடை அணிவது அவர்கள் கலச்சாரம், அதனை தடுக்க இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது. இந்திய அரசியல் சட்டத்தை சுக்கு நூறாக்கும் விதமாக தனிமனித உரிமையில் கைவைக்கும் விதமாகவும் மோடி அரசு செயல்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் மத சார்பற்ற எங்கள் கூட்டணி  மகத்தான வெற்றியை பெறும்,  திமுக கூட்டணியில் எராளமான கட்சிகள் உள்ளது. அனைத்து கட்சிகளுக்கும் கூட்டணியில் சீட் பகிர்ந்தளிக்க வேண்டும். வருங்காலங்களில் மிக அதிகமான இடங்களில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு  கிடைக்கும். இத்தனை காலம் அதிகாரத்தில் இல்லை என்றாலும் இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டும் அளவிற்கு காங்கிரஸ் கட்சிக்கு என மக்கள் செல்வாக்கு உள்ளது.

ஆனால் அதிகாரத்தில் இல்லாமல் பிஜேபி போன்ற கட்சி இதை செய்ய முடியுமா? காங்கிரஸ் கட்சியில் அடிப்படை கட்டமைப்பு வலுவாக உள்ளது, வருங்காலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும்,   நீட் தேர்வு என்பது அரசியல் இல்லை. அரசியல் நோக்கத்திற்காக காங்கிரஸ், கம்னியூஸ்ட், திராவிட முன்னேற்ற  கழகமோ அதை மறுக்கவில்லை, நீட் தேர்வுக்கு எதிர்ப்பை நாங்கள் தெரிவிக்கவில்லை மறுப்பை மட்டுமே தெரிவிக்கிறோம். எதிர்ப்பு வேறு மறுப்பு வேறு. காங்கிரஸ் கட்சி நீட் கொண்டவந்த போது நீட் தேர்வை விரும்பிய மாநிலங்கள் வைத்துகொள்ளவும் வேண்டாம் என்றால் தவிர்த்துகொள்ளலாம் என தெரிவித்தோம். நீட் தேர்வை கட்டாயமாக தொடர்ந்து அமல்படுத்துவதற்கான காரணத்தை மோடி சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
Embed widget