”மகிழ்ச்சியளிக்கிறது!” - வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதை ட்விட்டரில் அறிவித்த ஹெச்.ராஜா

காரைக்குடியில் போட்டியிட உள்ள தனது வேட்புமனுவை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று எச.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளர்களின் மனுக்களைத் தேர்தல் ஆணையம் இன்று பரிசீலனை செய்து வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அ.ம.மு.க. வேட்பாளர் பால்கண்ணன், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அழகேசன், மக்கள் நீதிமய்ய வேட்பாளர் ராஜ்குமார் ஆகியோரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ”மகிழ்ச்சியளிக்கிறது!” - வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதை ட்விட்டரில் அறிவித்த ஹெச்.ராஜா

இந்த நிலையில் எங்கே தனது மனுவையும் ஆணையம் ‘வாய்ப்பில்ல ராஜா!’ என நிராகரித்துவிடுமோ என்கிற கலக்கத்தில் இருந்த காரைக்குடி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜா தனது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சில் டுவிட்டரில் அந்த மகிழ்ச்சியைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, தேசிய ஜனநாயக கூட்டணியின் காரைக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராகிய என்னுடைய வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.   

மேலும், தமிழகத் தேர்தலில் போட்டியிடும் பிற பா.ஜ.க.வேட்பாளர்களுக்கும் அவர் தனது வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளார். கட்சியின் வேட்பாளர்கள் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே தனது தொகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்தார் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags: BJP 2021 Tamilnadu mnm Makkal needhi maiam Constituency H Raja Annamalai Aravakurichi Assembly elections Mettupalayam

தொடர்புடைய செய்திகள்

தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால்தான் ஏற்படும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு

தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால்தான் ஏற்படும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு

புதுச்சேரி: அமைச்சரவை அமைவதில் இழுபறி; பணிகள் ஸ்தம்பிப்பு!

புதுச்சேரி: அமைச்சரவை அமைவதில் இழுபறி; பணிகள் ஸ்தம்பிப்பு!

Tamil Nadu Politics: : 'அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி’ கே.சி.பழனிசாமி பரபரப்பு புகார்..!

Tamil Nadu Politics: : 'அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி’ கே.சி.பழனிசாமி பரபரப்பு புகார்..!

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

Nayinar Nagendran on ADMK : ’அசைன்மெண்ட் அதிமுக’ நயினாரிடம் அளிக்கப்பட்டுள்ள நச் பிளான்..!

Nayinar Nagendran on ADMK : ’அசைன்மெண்ட் அதிமுக’ நயினாரிடம் அளிக்கப்பட்டுள்ள நச் பிளான்..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?