மேலும் அறிய

போதைப்பொருட்கள் விற்கும் மாநிலமாக மாறி வரும் தமிழகம் - முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

கருணாநிதியின் குடும்பத்திற்கு ஊழல் செய்வதை விதவிதமாக கற்றுக் கொடுத்தவர் தற்பொழுது புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி.

தமிழகம் போதைப்பொருட்கள் விற்கும் மாநிலமாக மாறி வருவதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசினார்.

போதைப்பொருட்கள்  விற்கும் மாநிலமாக மாறி வரும் தமிழகம் - முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 52 வது ஆண்டு துவக்க விழா  நடைபெற்றது. இதில் கரூர் மாவட்ட செயலாளர் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.   

அப்போது பேசிய அவர், “எம்ஜிஆர் உருவாக்கிய போது 18 லட்சம் அதிமுக உறுப்பினர்கள், புரட்சித்தலைவி அம்மா வந்தவுடன் ஒரு கோடியே 54 லட்சம் உறுப்பினர்கள், எடப்பாடி யார் வந்தவுடன் 2 கோடியே 20 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட இயக்கம் அஇஅதிமுக.  இந்திய அளவில் தேசிய கட்சிகளுக்கு இணையாக இருந்து ஒரு கட்சி என்றால் அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இன்றைக்கு இருக்கும் திமுக அரசு பொய்யைச் சொல்லி 565 வாக்குறுதிகள் சொல்லி தேர்தலின் போது வாக்குறுதி அளித்தனர். அப்பா மகன் மகள் என பொய்களைச் சொல்லி ஒருவர் 75 சதவீதம் மற்றொருவர் 90 சதவீதம் என பொய்யைச் சொல்லி மட்டுமே வாக்குகள் சேகரித்தனர். ஆனால்  5% தேர்தலின் போது சொன்ன நிறைவேற்றினால் போதும் அதைக்கூட நிறைவேற்ற முடியாத விடியா திமுக அரசு

போதைப்பொருட்கள்  விற்கும் மாநிலமாக மாறி வரும் தமிழகம் - முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

மகளிர்க்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் என அறிவித்துவிட்டு பாதி பேருக்கு மட்டும் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமை வழங்கப்படும் என அறிவித்துவிட்டு தகுதி உடையவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்த நிலையில் குடும்பத் தலைவிகள் பாதி பேருக்கு இந்த மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. எடப்பாடியார் ஆட்சி காலத்தில் முதியோர்களுக்கும் விதவைகளுக்கும் தொகை வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அதிமுக கட்சிக்காரர்கள் என்றால் இல்லை. அதிமுக ஆட்சியில் அனைவருக்கும் பாரபட்சமில்லாமல் கட்சி பாகுபாடு இல்லாமல் வழங்கப்பட்டது. ஆனால் விடியா திமுக ஆட்சியில் அதுபோன்று முதியோர் உதவி தொகை மற்றும் விதவைகள் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் அதிமுக ஆட்சியில் ஒரு பெண் மரணம் அடைந்ததை அரசியல் செய்த திமுகவினர். இந்த ஆண்டு மட்டும் 12 பேர் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்டனர். தற்பொழுது அவர்கள் ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்  என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க அரசு தான் இந்த  திமுக அரசு

போதைப்பொருட்கள்  விற்கும் மாநிலமாக மாறி வரும் தமிழகம் - முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

குட்கா பொருட்களை விற்கக் கூடாது என சட்டம் கொண்டு வந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதிமுக ஆட்சியில் குட்கா பொருட்களை தமிழகம் முழுவதும் விற்பனை செய்தவர் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த திமுகவில் உள்ள கொங்கு மெஸ் மணி என்பவர் வீட்டு அருகில் 14 டன் குட்கா பறிமுதல் செய்து அவர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்தது. ஆனால் தற்பொழுது இருக்கும்  திமுக ஆட்சியில் கஞ்சா, குட்கா போன்ற பொருட்களை பறிமுதல் செய்ததாக டிஜிபிஏ சொல்லி உள்ளார். சாராயம் கஞ்சா தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் விற்கப்படுகிறது. தமிழகம் போதைப்பொருட்கள் விற்கும் மாநிலமாக மாறி வருகிறது.  கருணாநிதியின் குடும்பத்திற்கு ஊழல் செய்வதை விதவிதமாக கற்றுக் கொடுத்தவர் தற்பொழுது புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி” என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற தலைவர் முன்னாள் அமைச்சர் சின்னையா பேசுகையில்,  “அனைத்திந்திய அண்ணா திராவிட கழகம் துவங்கி 52 ஆண்டு காலம் கடந்து வீரநடை போட்டு வருகிறது. இந்த கழகத்தை மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் துவங்கவில்லை என்றால் இந்த தமிழ்நாட்டை கருணாநிதி அவர் மகன், மகள் என நான்காக கூறு போட்டு இருப்பார்கள். கமல்ஹாசன், சீமான், விஜய் ஆகியோர் சினிமாவில் கோடி கோடியாக கொள்ளை அடித்து விட்டு, நடிகை கூட கும்மாளம் அடித்து விட்டு, ரிட்டயர் ஆகும் பொழுது கட்சியை ஆரம்பித்து விடுகின்றனர். எம்ஜிஆர் அவர்கள் ஏழை எளிய மக்களுக்காக கட்சியை துவங்கி பல்வேறு நலத்திட்டங்களை செய்வதற்காகவே இந்த கட்சியை துவங்கி சிறப்பாக செயல்படுத்தினார்” என்று பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORT

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!
அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Embed widget