மேலும் அறிய

Jayakumar: நேற்று வந்த கத்துக்குட்டி உதயநிதி.. அதிமுகவை ஒழித்துவிட முடியுமா..? ஜெயக்குமார் ஆவேசம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் பேசினார்.

மதுரையில் கடந்த வாரம் அதிமுக எழுச்சி மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. அதில், அதிமுகவை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிற்கு வந்தபோது அதிமுகவின் நிர்வாகி ஒருவர் தனது மனைவி மாயமாகிவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்தநிலையில், நேற்று முன்தினம் மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அதிமுக மாநாட்டிற்கு வந்த கட்சி நிர்வாகியின் மனைவி காணாமல் போய்விட்டார். இதன் காரணமாக அவர் போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முதலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரைத்தான் விசாரிப்பார்கள். நீங்கள் தப்பா எதுவும் நினைத்து கொள்ள வேண்டாம். அதிமுகவின் மாநாட்டு பொறுப்பாளர். அந்த அர்த்தத்தில்தான் நான் அவரை விசாரிக்கப்படும் என்று கூறினேன்” என்றார். 

இந்தநிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் பேசினார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியில் கஞ்சா, கள்ளச்சாராயம் சாதாரணமாகிவிட்டது. காவல்துறை நடவடிக்கை எடுத்தால், அவர்கள் அடி உதை வாங்கும் நிலை உள்ளது. சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறும் ஸ்டாலின் எதையும் ஒழிக்கவில்லை. தமிழ்நாடு போதை மாநிலமாக மாறிவிட்டது. 

அண்ணா நகர் டவர் பூங்காவில் நேற்று முன்தினம் நடந்த ஓவியக் கண்காட்சியில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ராதாகிருஷ்ணனிடம் திமுகவினர் தரக்குறைவாக நடந்து கொண்டு, மாமூல் கேட்டுள்ளனர். அதிகாரியிடம் மாமூல் கேட்ட ஒரே கட்சி திமுகதான்.

நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகவே இருப்போம். அவர்களுக்கு எதிரான எதையும் ஏற்க மாட்டோம். மசோதாவை ஆளுநர் கொண்டுவரவில்லையே. திமுகதானே ? இவர்கள் கொண்டுவராவிட்டால் அவர் கையெழுத்து போட்டிருக்கமாட்டார். 

பல கட்சி தாவி அதிமுகவிற்கு வந்த யோக்கியவான் மருது அழகுராஜ் எடப்பாடியை விமர்சிக்கிறார். மதுரை எழுச்சி மாநாடு அவர்களின் கண்ணை உறுத்துகிறது , எனவே கொடநாடு குறித்து பேசுகின்றனர். அது குறித்து ஏற்கனவே எடப்பாடி தெளிவாக கூறிவிட்டார். அந்த குற்றவாளிகளை பிணையில் எடுத்தது திமுகதான். திமுகவினர் இன்னும் ஏன் சிபிஐக்கு செல்லாமல் இருக்கின்றனர்? அரசியல்  காழ்ப்புணர்வால் அதை கையில் எடுத்துள்ளனர். 

எடப்பாடி தலைமையில் கட்சி இருப்பதால் அதை ஜீரணிக்க முடியாமல் வாந்தி எடுக்கின்றனர். மருது அழகுராஜ் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் . 

உதயநிதி ஒரு குட்டி. அதிமுகவை அவரது  அப்பனாலும், அவரது அப்பனைப்  பெற்ற அப்பனாலேயே முடியவில்லை , நேற்று வந்த கத்துக்குட்டி உதயநிதி அதிமுகவை ஒழித்துவிட முடியுமா..? எத்தனை கருணாநிதி , ஸ்டாலின் வந்தாலும் உலகம் உள்ளவரை அதிமுகவை அழிக்க முடியாது. 

2021 ல் வெறும் 3 சதவீதத்தில் ஆட்சி அமைத்தனர், இல்லையேல் நிரந்தர வனவாசம் சென்றிருக்கும் திமுக. 2026 க்கு பிறகு திமுக இருக்குமா என பார்க்க வேண்டும். ஸ்டாலின் இல்லை என்றால் அந்த கட்சியே எங்கு இருக்கும் என்று தெரியாமல் எங்களை குப்பை என்கின்றனர். குப்பை உரமாகும் , ஆனால் திமுக எனும் கரையான் , எல்லாவற்றையும் அரித்து நாசமாக்கிவிடும். கரையான்கள் களையெடுக்கப்படும் காலம் வந்துவிட்டது. 

கருணாநிதி முதலமைச்சர் பதவி எனும் அரியணையை ஏற காரணம் எம்ஜிஆர். உதயநிதி , லியோனிக்கு பக்குவமும் , முதிர்ச்சியும் இல்லாத அரசியல்வாதிகள். சர்காரியா கமிசன் வந்தபோதே உங்கள் மானம் போய்விட்டது. 

ஜெயலலிதா பற்றி தவறாக விமர்சிக்கின்றனர். உன்னுடைய தாத்தா, உன்னுடைய அப்பா மற்றும் உன்னுடைய காம லீலைகளை நாங்கள் எழுத ஆரம்பத்தால் 4 வண்டியில் அவற்றை எடுத்து செல்ல வேண்டியிருக்கும். நயனை தயன் பண்ணியதை எல்லாம் நாங்கள் வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.

உதயநிதி உத்தம புருசன் மாதிரி பேசுகிறார். அரசியல் ரீதியாக மட்டும் விமர்சனம் செய்ய வேண்டும். மீறி தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் உங்களை பற்றி சோசியல் மீடியாவில் போட்டு நாறடித்துவிடோவோம். நீங்கள் ஒரு விமர்சனம் செய்தால் நாங்கள் ஆயிரம் விமர்சனம் செய்வோம்.

லியோனி ஒரு குடிகார தெருநாய் , அவன் நல்ல தாய்க்கு பிறந்தவன் அல்ல, அவன் ஒரு புறம்போக்கு. மான ரோசம் இருந்தால் மலேசியாவில் அவமானப்படுத்தபோதே அவன் தூக்கில் தொங்கி இருக்க வேண்டும். 

 அரசியலில் மாற்றங்கள் இயல்பு , கூட்டணியில் மாற்றம் வரும். திருமாவளவனுக்கு விருப்பம் இல்லாமல் திமுகவில் இருக்கிறார். தேர்தல் நெருங்கும்போது திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகளும் வெளி வரும். வேங்கைவயலில் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வில்லை , நெல்லையில் தாக்கப்பட பட்டியல் சமூக இளைஞரின் வீட்டுக்கு  முதலமைச்சர் ஏன் சென்று பார்க்கவில்லை. காசு , பணம் மட்டும்தான் அவர்களது குறிக்கோள். 

ஊழல் குறித்து பேச திமுகவுக்கு அருகதை இல்லை... சிஏஜி மூலம் பாஜக ஊழல் செய்வதாக  திமுக குற்றம்சாட்டுவது தவறு.” என்றார்.

தேசிய விருது : 

தொடர்ந்து பேசிய அவர், “வட சென்னை சார்ந்த குத்துச்சண்டை படங்களுக்கு தேசிய விருது கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். எங்களை எல்லாம் பாருங்கள் எப்படி இருக்கிறோம். நாங்கள்  வீரம் விளைந்த வட சென்னை மண். யாரும் உள்ள வரமுடியாது. எங்க  ஏரியா உள்ள வராத மாதிரி. காஷ்மீர் பைல்ஸ் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. 

மாணவர்கள் , தமிழக மக்கள் நீட்டை விரும்பவில்லை என கடந்த 2 ஆண்டாக நீட் குறித்த எங்களது நிலைப்பாட்டை கூறி வருகிறோம் , எனவே மதுரை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி எங்களது நிலைப்பாட்டை கூறி வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.” என்று தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget