மேலும் அறிய
Advertisement
திமுகவை அசைக்க முடியாத அளவிற்கு உதயநிதி கிடைத்துள்ளார் - பேச்சாளர் கூத்தரசன்
திமுகவை 25 ஆண்டுகள் அசைக்க முடியாத அளவிற்கு 45 வயது இளைஞன் உதயநிதி ஆணிவேராக கிடைத்துள்ளார்-அரூர் திமுக பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் கூத்தரசன் பேச்சு.
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், அனைத்து மாவட்டங்களிலும் திமுக தலைமை அறிவித்திருந்தது. இந்த கூட்டத்திற்கு கட்சி தலைமையிலிருந்து இரண்டு பேச்சாளர்களும் அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தருமபுரி திமுக மேற்கு மாவட்ட சார்பில் அரூர் ரவுண்டானாவில் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில், பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர், திருப்பூர் கூத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் பேசிய பேச்சாளர் கூத்தரசன், திமுகவிற்கு தற்பொழுது ஒரு ஆணிவேர் கிடைத்துள்ளது. இன்னும் 25 ஆண்டுகளுக்கு திமுகவை அசைக்க முடியாத அளவிற்கு 45 வயது இளைஞன் உதயநிதி தற்பொழுது திமுகவுக்கு கிடைத்துள்ளார். பாஜக தமிழகத்தில் தலை தூக்கும் பொழுது பல்வேறு இடங்களில் வெட்டுக்கள் விழும். நாட்டில் மதத்தின் பெயரால் மிக மோசமான கம்பெனி நடத்தும் பாஜக, கால் வைப்பதை நாம் எந்த காரணத்தை கொண்டும் அனுமதிக்க கூடாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மீது திமுகவினர் யாரும் சொத்து வழக்கு தொடுக்கவில்லை எனக் கூறி, ஜெயலலிதா சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள் குறித்து மூச்சு விடாமல் பட்டியலிட்டார். இதை தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு யாருக்கும் தெரியாது இதை கண்டுபிடித்தவர் கர்நாடகவை சேர்ந்த குன்கா. அதனால்தான் அவருக்கு சுத்துது வழக்கில் நான்கு ஆண்டு சிறையும் நூறு கோடி அபராதம் விதித்தார் என தெரிவித்தார்.
முன்னதாக பொது கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பழனியப்பன், இந்தி திணிப்புக்குஅந்த காலத்தில் குரல் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா, இந்த காலத்தில் குரல் கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி, முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள், இன்று இந்தி திணிப்பால் தமிழக மக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக உதயநிதி ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார். அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் உங்களுக்கு என்ன வருகிறது. இது எங்கள் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழக இயக்கம். உழைப்பவர்களுக்கு வாழ்வு கொடுக்க எங்கள் தலைவர் தயாராக இருக்கிறார். அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதியை அடையாளம் காட்டியது போல், கலைஞர் மு.க ஸ்டாலின் அவர்களை அடையாளம் காட்டியது போல், மு க ஸ்டாலின் அவர்கள் தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும், மொழிகள் காப்பாற்றப்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் அவர்களை அடையாளம் காட்டியுள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை. தமிழக மக்கள் யாரை எதிர்பார்க்கிறார்களோ அவர்களுக்கு பதவி கொடுப்பது எங்கள் தலைவரின் கடமை.
எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராக பேசுகிறார் திமுகவில் மிட்டா மிராசுதாரர்கள் தான் பதவிக்கு வர முடியும். எடப்பாடி பழனிச்சாமி போன்ற சாதாரண தொண்டர் பதவிக்கு வர முடியாது என்று சொல்கிறார். எடப்பாடி பழனிச்சாமி சாதாரண தொண்டரா சசிகலா காலில் விழுந்து எப்படி பதவி வாங்கினார் என்று பக்கத்தில் இருந்து பார்த்த எனக்கு நன்றாக தெரியும். ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக காலில் விழுந்து பதவி வாங்கினார். பதிவி நிலைக்க வேண்டும் என்பதற்காக ஓ பன்னீர்செல்வத்தை அணுகி பதவியே தக்க வைத்தீர்கள். பிஜேபி அரசு நிச்சயமாக உங்கள் காலை வாரும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக மேற்கு மாவட்ட துணை செயலாளர்கள் கிருஷ்ணகுமார் சாமி உள்ளிட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion