மேலும் அறிய

“ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டாம்; சசிகலாவை சேர்க்க வேண்டும்” - முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி பரபரப்பு பேட்டி

"தலைமை பொறுப்பில் இருந்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். வேறு யாராவது தலைமை பொறுப்பிற்கு வரட்டும். இருவரும் நன்றி மறந்தவர்களாக இருக்கின்றனர்" - ஆறுக்குட்டி

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் குறித்து கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “உள்ளாட்சித் தேர்தல் தோல்வியால் அதிமுகவினர் வேதனையில் இருக்கின்றனர். தலைமை பொறுப்பில் இருந்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். வேறு யாராவது தலைமை பொறுப்பிற்கு வரட்டும். இருவரும் நன்றி மறந்தவர்களாக இருக்கின்றனர்.

ஜெயலலிதா இருந்த போது இந்த மாதிரியாக கட்சி இல்லை. ஏன் உள்ளாட்சி அமைப்புகளில் அதிமுக வெற்றி பெறவில்லை?. இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கின்றோம். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து இயக்கத்திற்காக உழைத்த அன்வர் ராஜாவை ஏன் நீக்கினீர்கள்? கட்சிக்காக பேசினால் நீக்கினார்கள். பேட்டி கொடுப்பதால் என்னை நீக்கினாலும் நீக்குங்கள்.

சசிகலாவை பற்றி இபிஎஸ் ஏன் மோசமாக பேச வேண்டும்?. உன்னை கையை பிடித்து முதல்வர் என அடையாளம் காட்டியவர் அவர். 4 வருடம் அமைச்சர் ஆபீசுக்கு சென்றால் உரிய மரியாதை இருக்காது வேறு யாராவது தலைமை பொறுப்பிற்கு வரட்டும். இருவருக்குமே கட்சியில் ஆதரவு இல்லை. அதிமுக சோதனைகளை கடந்து வந்த கட்சி. இனி இருவரும் ஒன்று சேர்ந்த இயங்க வாய்ப்பில்லை.

“ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டாம்; சசிகலாவை சேர்க்க வேண்டும்” - முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி பரபரப்பு பேட்டி

தயவு செய்து அதிமுகவை சாதிக்கட்சியாக்கி விடாதீர்கள். அதிமுக தொண்டனாக கருத்து சொல்கின்றேன். உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்து இருக்கின்றோம். பல முறை உள்ளாட்சி தேர்தல் நடத்த கேட்டும் நடத்தாமல் இருந்து விட்டனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தனித்தனியாக பேட்டி கொடுக்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடத்தி இருந்தால் ஆட்சி போயிருக்காது. இரண்டு கோஷ்டியாக பிரித்து அதிமுக சண்டை போட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

விபத்திலே இருவரும் பதவிக்கு  வந்து விட்டனர். இருவரும் சண்டை போடுவது சரியில்லை. ஒன்றரை கோடி தொண்டர்களை கேட்டு எதுவும் செய்யவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவருக்கும் வார்டுகளை கூட கைப்பற்ற முடியவில்லை. அதிமுக சாதிகட்சியாக போகின்றது. திமுக துரோக கட்சியாக மாறி விட்டது. இயக்கத்தை காணாமல் போக்கி விட்டனர். ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவில் கோஷ்டி இருந்ததில்லை. இருவரும் சுத்தமானவர்கள் இல்லை.

கீழ் இருந்து கட்சியில் மேல் வந்தனவன் நான். கடந்த தேர்தலில் எனக்கு சீட் இல்லை என்றனர். என்னுடன் பேசவில்லை. சீட் கொடுக்காதது கூட வருத்தமில்லை. என்னை அழைத்து கூட முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசவில்லை. நான் ஒதுங்கி விட்டேன்.  சசிகலா வர வேண்டும் என சொல்லவில்லை. யாரையாவது அனைவரும் சேர்த்து எடுங்கள். ஒற்றை தலைமை வரட்டும். இவர்கள் இருவரும் வேண்டாம். சசிகலா, தினகரன் என அனைவரையும் சேர்த்து கட்சி இயங்க வேண்டும்.

“ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டாம்; சசிகலாவை சேர்க்க வேண்டும்” - முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி பரபரப்பு பேட்டி

பிரதமர் சொன்னதால் துணை முதலமைச்சர் பதவியேற்றதாக ஓ.பி.எஸ் வெளிப்படையாக பேசி இருக்கக்கூடாது. பா.ஜ.க கட்சியை வளர்த்து கொண்டு விட்டனர். அதிமுக சாதி கட்சியாக இரு பிரிவாக இருந்து வருகிறது. இருவரும் இணைந்து செயல்பட வேண்டும். இருவரும் சேர்ந்து என்னை நீக்கினால் சந்தோசம். எனக்கு சசிகலா, தினகரனுடன் எந்த தொடர்புமில்லை. இது போன்ற நிலை கட்சிக்கு  வரும் என எதிர்பார்த்தேன். வந்துவிட்டது. அரசியல் வேண்டாம் என முடிவு செய்து விட்டேன். வேறு கட்சியில் இருந்தும் அழைத்தார்கள். போகவில்லை. ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரையும் தலைவர்களாக என்னால் கடுகளவும் ஏற்க முடியாது. இருவரும் மக்கள் தலைவர்கள் கிடையாது. மாவட்ட தலைவர்கள் தான். அதிமுகவில் இருக்கின்றேன். ஓ.பி.எஸ்,இ.பி.எஸ் தலைமையின் கீழ் இல்லை” என அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காணவும், பின்தொடரவும் ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம். 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
TN Budget: தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் 20 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம்.. எப்படி தெரியுமா?
TN Budget: தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் 20 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம்.. எப்படி தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget