EPS Speech: அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்? ”தயக்கம் இல்லை..”அதிரடி காட்டிய இபிஎஸ்
EPS: செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தயக்கமே இல்லை, இனிமேல் தான் இருக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்

துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செங்கோட்டையனை நீக்குவதற்கு எந்த தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார்.
ஈபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு:
மதுரையில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்திய செய்தியாளர்களை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார், அப்போது துரோகிகளை நீக்குவதற்காக செங்கோட்டையன் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தேர்தலை சந்திக்கவுள்ளதாக கூறியது குறித்து இபிஎஸ்-யிடம் கேள்வி எழுப்பபட்டது.
துரோகிகளால் தோல்வி:
இதற்கு பதிலளித்த பேசிய இபிஎஸ் இதையே தான் டிடிவி கடந்த நான்கு ஆண்டுகளாக பேசிவருகிறார், மூவரும் செய்தியாளர்களை சந்தித்தாக கேள்விபட்டேன், மூவரின் சந்திப்பும் ஏற்கெனவே போட்ட திட்டம் தானே, அதிமுகவில் இருக்கும் போதே குழிப்பறித்ததால் 2021 தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இப்படிப்பட்ட துரோகிகளால் தான் எங்களால் 2021-ல் ஆட்சிக்கு வர முடியவில்லை.
செங்கோட்டையன் நீக்கம்?
ஓபிஎஸ-ஐ கட்சியில் இருந்து நீக்கியது போல செங்கோட்டையனையும் கட்சியில் இருந்து நீக்குவீர்களா என்கிற கேள்விக்கு, “செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தயக்கமே இல்லை, என்றும் அதிமுகவின் தலைமைக்கு கட்டுப்படாமல் யார் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மூவரும் திமுகவின் B Team:
மேலும் பேசிய அவர் சசிகலாவை சந்திப்பது அவரவர் விருப்பம், ஆனால் எத்தனை எட்டப்பர்கள், துரோகிகள் வந்தாலும் அதிமுகவை வீழ்த்துவது கடினம், எங்கள் கையில் இருப்பது தான் உண்மையான அதிமுக . இவர்கள் மூவரும் ஒன்றிணைந்தது குறித்து பேசுவதே வெஸ்ட் நேரத்தை வீணடிக்க வேண்டாம். கடந்த சில நாட்களுக்கு திமுக வெற்றி பெறும் என்று கூறிய ஓபிஎஸ் எப்படி அதிமுகவை ஒன்றிணைக்க முடியும்,இவர்கள் திமுகவின் - B என்று தெரிவித்தார்..
களைகள் அகற்றப்பட்டன:
கட்சியில் இருந்த களைகள் அகற்றப்பட்டுள்ளன. இனி கட்சி செழித்துவளரும். கட்சியில் இருந்துகொண்டே உள்குத்து வேலைகள் செய்ததால்தான் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை அடைந்தது என்றார்.
ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினீர்கள், அதேபோல செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்க என்ன தயக்கம் என்று செய்தியாளர்களின் கேள்விக்கு எங்களுக்கு தயக்கம் எதுவும் இல்லை, இனிமேல்தானே இருக்கும், ஏற்கனவே கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுவிட்டன என்றார்.






















